India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கங்கா தேவி சொர்க்கத்தில் இருந்து பூமிக்கு இறங்கி வந்ததாக புராணங்களில் கூறப்படும் நாளை இந்துக்கள் ‘கங்கா தசரா’ விழாவாக கொண்டாடுகின்றனர். அன்றைய தினம் கங்கையில் புனித நீராடினால் பாவங்கள், நோய்கள் தீரும் என்பது ஐதீகம். அந்த வகையில், இன்று ‘கங்கா தசரா’ கொண்டாடப்படுவதால் லட்சக்கணக்கான பக்தர்கள் கங்கையில் புனித நீராடியதுடன், அயோத்தியிலுள்ள ராமர் கோயிலிலும் பயபக்தியுடன் வழிபட்டனர்.
பெங்களூருவில் நடைபெற்றுவரும் தென்னாப்பிரிக்க மகளிர் அணிக்கெதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 265 ரன்கள் எடுத்துள்ளது. ஒரு பக்கம் விக்கெட்டுகள் சரிந்தாலும் பொறுமையாக ஆடிய ஸ்மிருதி மந்தனா 117 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். தீப்தி ஷர்மா 37, பூஜா 31* ரன்கள் எடுக்கவே 50 ஓவரில் இந்தியா 8 விக்கெட்டுகளை இழந்து 265 ரன்கள் எடுத்தது. இன்னும் சற்று நேரத்தில் தெ.ஆ., பேட்டிங் செய்ய உள்ளது.
இரண்டு பெண் குழந்தை பாதுகாப்பு திட்டத்தில் விண்ணப்பிக்க தாயின் வயது 20-40க்குள் இருக்க வேண்டும். 40 வயதிற்குள் தாய் குடும்ப கட்டுப்பாடு செய்திருக்க வேண்டும். குடும்ப ஆண்டு வருமானம் ₹72,000. ஆண் வாரிசு இல்லை என்ற சான்று, 2 பெண் குழந்தைகளின் பிறப்பு சான்றிதழ்களை இணைக்க வேண்டும். இ-சேவை மையத்தில் விண்ணப்பித்தபின், அதன் நகலை, ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திலுள்ள சமூக நல அலுவலரிடம் ஒப்படைக்க வேண்டும்.
மின்னணு வாக்கு இயந்திரத்தில் முறைகேடு செய்வதற்கு வாய்ப்பே கிடையாது என முன்னாள் தேர்தல் ஆணையர் கிருஷ்ணமூர்த்தி உறுதியாக தெரிவிக்கிறார். கட்சிகள் பலவீனமாக இருக்கும் போது, மின்னணு இயந்திரங்கள் மீது பழி சுமத்துவதாகவும், EVMஇல் முறைகேடு செய்ய முடியும் என கூறுபவர்கள் நிரூபித்து காட்ட மறுப்பதாகவும் தெரிவித்துள்ளார். முறைகேட்டை நிரூபிக்க தேர்தல் ஆணையம் பல முறை வாய்ப்பு அளித்ததாகவும் அவர் கூறியுள்ளார்.
இந்தியாவில் சுமார் 1 கோடி அடுக்குமாடி குடியிருப்பு வீடுகள் காலியாக உள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. அனராக் என்ற நிறுவனம் நடத்திய ஆய்வில், 7 பெருநகரங்களில் மட்டும் 1 கோடி அடுக்குமாடி குடியிருப்பு வீடுகள், யாரும் குடியிருக்காமல் காலியாக உள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. மேலும், கடந்த 4 ஆண்டுகளில் ₹1.5 கோடிக்கும் மேல் உள்ள சொகுசு வீடுகளின் கட்டுமானம் 1000% அதிகரித்துள்ளதாகவும் ஆய்வில் தெரியவந்துள்ளது.
வரவிருக்கும் அனைத்து தேர்தல்களையும் வாக்குச் சீட்டு முறையில் நடத்த வேண்டும் என சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் வலியுறுத்தியுள்ளார். தொழில்நுட்பம் என்பது பிரச்னைகளை தீர்ப்பதற்காகவே என கூறிய அவர், அதுவே பிரச்னையை உருவாக்கினால் அதன் பயன்பாட்டை நிறுத்த வேண்டுமென தெரிவித்துள்ளார். மேலும், EVM இயந்திரத்தை ஹேக் செய்ய முடியும் என்ற எலான் மஸ்கின் கருத்துக்கு பாஜக விளக்கம் அளிக்க வேண்டும் என்றார்.
முதலமைச்சரின் இரண்டு பெண் குழந்தை பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 2024-25ஆம் ஆண்டிற்கான தகுதியுடைய பெண்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. ரேஷன் அட்டை, ஆதார் உள்ளிட்ட ஆவணங்களுடன் அரசு இ-சேவை மையத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். இரண்டாவது பெண் குழந்தை பிறந்த நாளிலிருந்து மூன்று ஆண்டிற்குள் விண்ணப்பிக்கும் அப்பெண் குழந்தைகளுக்கு தலா ₹25000க்கான ( மொத்தம் ₹50 ஆயிரம்) வைப்பு தொகையாக வழங்கப்படும்.
T20 WCயில் 20 அணிகள் 4 பிரிவுகளாகப் பிரிந்து லீக் சுற்றில் மோதி வருகின்றன. இதில், ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களைப் பிடிக்கும் அணிகள் சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறும். தற்போது 7 அணிகள் தகுதிபெற்றுள்ள நிலையில், மீதமுள்ள 1 இடத்திற்கு வங்கதேசம், நெதர்லாந்து அணிகள் இடையே போட்டி நிலவுகிறது. இரு அணிகளும் 3 போட்டிகளில் விளையாடியுள்ள நிலையில், BAN 2 வெற்றியும், NL 1 வெற்றியும் பெற்றுள்ளது.
தமிழ் சினிமாவில் அப்பா சென்டிமெண்ட்டை மையமாக வைத்து வெளியான பல படங்கள் வெற்றி பெற்றுள்ளன. சமீபத்தில் வெளியான ‘ஜெயிலர்’, ‘டான்’ ஆகிய படங்கள் தந்தைக்கும், மகனுக்குமான உறவை பேசும் வகையில் அமைந்திருந்தன. மகளுக்கும், தந்தைக்குமான உறவை ‘விஸ்வாசம்’, ‘தெறி’, ‘தங்கமீன்கள்’ ஆகிய படங்கள் படம் பிடித்து காட்டின. ‘சந்தோஷ் சுப்பிரமணியம்’, ‘வாரணம் ஆயிரம்’ ஆகிய படங்களும் ஹிட் லிஸ்டில் இணைகின்றன.
நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்பதே ஒரு நாடு, ஒரே கோரிக்கை என உத்தர பிரதேச முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ் வலியுறுத்தியுள்ளார். நாடு முழுவதும் நீட் தேர்வுக்கு எதிராக போராட்டம் நடைபெற்று வரும் நிலையில், நீட் தேர்வை கைவிட வேண்டும் என அவர் பதிவிட்டுள்ளார். முன்னதாக, நீட் தேர்வுக்கு எதிராக ராகுல் காந்தி, ஸ்டாலின் ஆகியோர் தொடர்ந்து குரல் எழுப்பி வருவது குறிப்பிடத்தக்கது.
Sorry, no posts matched your criteria.