news

News June 16, 2024

நில மோசடி வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்

image

முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் முன்ஜாமின் கோரிய நில மோசடி வழக்கு, சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது. போலி ஆவணங்கள் மூலம் நிலமோசடி செய்ததாக 7 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த நிலமோசடி வழக்கில் தனது பெயர் சேர்க்கப்படலாம் என்ற நிலையில், விஜயபாஸ்கர் முன் ஜாமின் கோரியிருந்தார். இந்த மனு மீதான விசாரணையை 19ம் தேதிக்கு நீதிமன்றம் ஒத்திவைத்த நிலையில், சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது.

News June 16, 2024

விஜய், சீமான் கூட்டணி அமைக்கத் திட்டம்?

image

சீமானின் நாதக ஆரம்பிக்கப்பட்டது முதல் தனித்துப் போட்டியிட்டு வருகிறது. நடிகர் விஜய்யும் தவெகவை ஆரம்பித்தது முதல் யாருடன் கூட்டணி வைக்கலாம் என யோசித்து வருகிறார். இந்நிலையில், சட்டப்பேரவைத் தேர்தலில் விஜய்யும், சீமானும் கூட்டணி அமைக்கவும், தேர்தலில் வென்றால் விஜய்க்கு முதல்வர் பதவி, சீமானுக்கு துணை முதல்வர் பதவி என பகிர்ந்து கொள்ளத் திட்டமிட்டு இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

News June 16, 2024

சுதந்திரப் போராட்ட உண்மையான வரலாறு மறைப்பு

image

சுதந்திரப் போராட்டத்தின் உண்மையான வரலாறு மறைக்கப்பட்டுள்ளதாக ஆளுநர் ரவி குற்றம்சாட்டியுள்ளார். கிண்டி ராஜ்பவனில் நடைபெற்ற, அறியப்படாத தமிழக சுதந்திரப் போராட்ட வீரர்கள் குறித்து ஆய்வு நடத்தியவர்களை பெருமைப்படுத்தும் நிகழ்வில் பேசிய அவர், சுதந்திரப் போராட்டத் தலைவர்கள் சாதியத் தலைவர்களாக மாற்றப்பட்டுள்ளதாக தெரிவித்தார். மேலும் மொழி, மாநிலம் எனப் பிரிந்துள்ள நாம் ஒன்றிணைய வேண்டும் எனவும் கூறினார்.

News June 16, 2024

‘V’ என்ற எழுத்தில் தொடங்கும் பெயர் கொண்டவரா நீங்கள்?

image

‘V’ என்ற எழுத்தில் தொடங்கும் பெயர் கொண்டவர்கள், தனித்துவமான ஆளுமை திறனை கொண்டிருப்பார்கள் என ஜோதிடர்கள் கூறுகின்றனர். கவர்ச்சியான, ஆக்கப்பூர்வமான மற்றும் நம்பிக்கையான நபர்களாக இருப்பார்கள் என்றும், ஆபத்துகளை அசாத்தியமாக கடந்து செல்லும் திறன் கொண்டவர்கள் எனவும் தெரிவிக்கின்றனர். ‘V’என்ற எழுத்தில் பெயர் கொண்ட உங்கள் நண்பர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்கு இதை பகிருங்கள்.

News June 16, 2024

தனித்து போட்டியிட திமுகவுக்கு தைரியம் இல்லை: வானதி

image

தனித்து போட்டியிட தைரியம் இல்லாத ஒரே கட்சி திமுக என, வானதி சீனிவாசன் விமர்சித்துள்ளார். மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் 39 தொகுதிகளிலும் திமுக வென்றதை குறிப்பிட்ட அவர், எதிர்க்கட்சிகள் தனித்தனியாக போட்டியிட்டதால் தான் இது சாத்தியமானது என விளக்கமளித்துள்ளார். மேலும், தேர்தலில் தனித்து போட்டியிட்ட பிறகு, பாஜகவை பற்றி முதல்வர் ஸ்டாலின் விமர்சிக்கலாம் எனவும் அவர் காட்டமாகக் கூறியுள்ளார்.

News June 16, 2024

மாணவர்களுக்கு வாசிப்பு வழிகாட்டி கையேடு

image

அரசுப் பள்ளிகளில் 1 -12ஆம் வகுப்புவரை பயிலும் மாணவர்களுக்கு வாசிப்பு பழக்கத்தை ஊக்குவிக்க பள்ளிக்கல்வித்துறை பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது. முதல்கட்ட பயிற்சி வெற்றி பெற்றதை தொடர்ந்து, நடப்பு கல்வியாண்டில் (2024-25) புத்தகங்கள், வாசிப்பு இயக்கக் கையேடு ஆகியவை அனைத்து மாவட்டங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இந்த கையேடுகள் செவ்வாய்கிழமை முதல் பள்ளிகளுக்கு வழங்கப்படும் என தெரிகிறது.

News June 16, 2024

APPLY NOW: செபி நிறுவனத்தில் வேலை வாய்ப்பு

image

இந்திய பங்குச்சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான செபி நிறுவனத்தில் காலியாக உள்ள 97 அதிகாரி பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. பொறியியல், பொருளாதாரம், வணிகம், நிதி பொருளாதாரம் உள்ளிட்ட துறைகளில் இளங்கலை, முதுகலை படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். ஆன்லைன், எழுத்துத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இதற்கு <>https://www.sebi.gov.in/<<>> என்ற இணையதளம் மூலம் ஜூன் 30க்குள் விண்ணப்பிக்கலாம்.

News June 16, 2024

கடவுளை சந்தித்த போப் பிரான்சிஸ்: காங்கிரஸ்

image

ஜி7 மாநாட்டில் பங்கேற்க இத்தாலி சென்ற பிரதமர் மோடி, வாடிகன் தலைவரான போப் பிரான்சிசை சந்தித்து பேசினார். இந்நிலையில், இந்த புகைப்படத்தை தனது X பக்கத்தில் பகிர்ந்துள்ள கேரள காங்கிரஸ், கடைசியாக கடவுளை சந்திக்கும் வாய்ப்பு போப் பிரான்சிசுக்கு கிடைத்துள்ளதாக கிண்டல் செய்துள்ளது. பிரதமர் மோடி மக்களவைத் தேர்தல் நேரத்தில் தன்னை கடவுளின் தூதுவன் என கூறிக் கொண்டது குறிப்பிடத்தக்கது.

News June 16, 2024

₹1000 மகளிர் உரிமை தொகை குறித்து புது தகவல்

image

மகளிர் உரிமை தொகை திட்டத்தில் புதிய பயனாளிகள் சேர்க்கப்பட உள்ளனர். இதில், முன்னாள் அரசு மற்றும் கார்ப்பரேஷன் ஊழியர்களின் மனைவிகளுக்கும், புதிதாக திருமணமானவர்கள் மற்றும் புது ரேஷன் அட்டைதாரர்களுக்கும் ₹1000 வழங்கப்படும் என தெரிகிறது. இதற்கு புதிய ரேஷன் அட்டை, திருமண பதிவுச்சான்று, குடும்ப தலைவி பெயர் உள்ள வங்கி கணக்கு, அந்த வங்கி கணக்கு ஆதார் + அந்த பெண்ணின் போன் எண்ணுடன் இணைக்க வேண்டும்.

News June 16, 2024

முன்பதிவு பெட்டிகளில் அலைமோதும் கூட்டம்

image

வடமாநிலங்களைப் போலவே சமீப காலமாக தமிழ்நாட்டிலும் ரயில் முன்பதிவு பெட்டிகளில், டிக்கெட் இன்றி பயணிக்கும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. குறிப்பாக, வார இறுதி நாள்களில் முன்பதிவு பெட்டிகளில் கூட்டம் நிரம்பி வழிகிறது. இதனால், டிக்கெட் எடுத்து பயணிக்கும் பயணிகள் சிரமத்தை சந்தித்து வருகின்றனர். இந்நிலையில், வார இறுதி, பண்டிகை நாள்களில் கூடுதல் ரயில்களை இயக்க பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

error: Content is protected !!