India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், முழு உடல்நல பரிசோதனைக்கு பின் வீடு திரும்பியுள்ளார். இன்று மாலை வழக்கமான பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு சென்ற நிலையில், அவரை மருத்துவர்கள் பரிசோதனை செய்தனர். இதனையடுத்து, 3 மணி நேரத்திற்கு பிறகு அவர் தற்போது வீடு திரும்பியுள்ளார்.
மாணவர்களின் மருத்துவக் கனவுகளை சிதைக்கும் நீட் தேர்வை முழுமையாக ஒழிப்பதே எங்களின் நோக்கம் என்று கனிமொழி தெரிவித்துள்ளார். சமீபத்தில் நடந்த நீட் தேர்வு முறைகேடு தொடர்பாக விரிவான விசாரணை மேற்கொள்ள வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார். இதுவரை தமிழகம் மட்டும் நீட்-க்கு எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில், தற்போது உ.பி., மகாராஷ்டிரா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களிலும் எதிர்ப்பு தொடங்கியுள்ளன.
நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்திய அகிலேஷ் யாதவுக்கு, முதல்வர் ஸ்டாலின் நன்றி கூறியுள்ளார். MBBS, BDS போன்ற மருத்துவப் படிப்புகளுக்கு நீட் நுழைவுத் தேர்வு கட்டாயம். இந்நிலையில், நடப்பாண்டு நடத்தப்பட்ட நீட் தேர்வில் பல்வேறு குளறுபடிகள் இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்குகளும் தொடரப்பட்டுள்ளன. இதனால், நீட் தேர்வுக்கு எதிராக கண்டனக் குரல்கள் எழுந்து வருகிறது.
*எந்தவொரு செயலையும் பிறகு பார்த்துக் கொள்ளலாம் என தள்ளிப்போடாதீர்கள். *சின்ன, சின்ன தவறுகளை பெரிதுபடுத்தி, கோபம் அடையாதீர்கள். *புதிய விஷயங்களை கற்றுக் கொள்ள ஆர்வம் காட்டுங்கள். *அடுத்தவர்களை பார்த்து பொறாமை கொள்ள வேண்டாம். *அன்பானவர்களுடன் நேரத்தை செலவிடுங்கள். *எந்தவொரு செயலையும் விருப்பப்பட்டு செய்யுங்கள். *பிடிக்காத விஷயங்களுக்கு “நோ” சொல்ல பழகுங்கள்.
ம.பி மாநிலத்தில் உள்ள ஒரு மதுபான ஆலையில் இருந்து 39 குழந்தை தொழிலாளர்களை நேற்று தேசிய குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தினர் மீட்டனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் பெண்கள் என்றும், அவர்களின் உடலில் தீ காயங்கள் இருந்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்திருந்தனர். இந்நிலையில், நேற்று இரவு 39 பேரையும் காணவில்லை என்றும், அவர்கள் கடத்தப்பட்டனரா என்ற கோணத்தில் விசாரித்து வருவதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
டி20 உலகக்கோப்பை தொடரில் இன்று நடைபெற்று வரும் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில், முதலில் பேட்டிங் செய்து வரும் அயர்லாந்து அணி, அடுத்தடுத்து விக்கெட்டை பறிகொடுத்து 7 ஓவரில் 34/6 எடுத்து தடுமாறி வருகிறது. அந்த அணியின் முதல் 5 பேட்ஸ்மேன்களும் 10 ரன்களுக்கு அவுட் ஆகினர். பாக்., அணியில் ஷஹீன் அஃப்ரிடி 3 விக்கெட்டை கைப்பற்றினார்.
இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக கம்பீர் தேர்வு செய்யப்பட உள்ளது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டதாக தெரிகிறது. ஆனால், பயிற்சியாளராக இருக்க கம்பீர் பிசிசிஐயிடம் கோரிக்கை ஒன்றை வைத்ததாக தகவல் வெளியாகியுள்ளது. துணைப் பணியாளர்களை நியமிப்பதில் முழு சுதந்திரம் வேண்டும் என்று கேட்டுக்கொண்டதாகவும், அதற்கு பிசிசிஐ ஒப்புக்கொண்டதாகவும் தெரிகிறது. இதனால், அணியிலும் மாற்றங்கள் ஏற்பட வாய்புள்ளதாக கூறப்படுகிறது.
தமிழகத்தில் இருந்து ரேஷன் அரிசி கடத்தப்படுவதை தடுக்க, மாநில எல்லைகளில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக சிவில் சப்ளை சிஐடி ஐஜி ஜோஷி நிர்மல் குமார் தெரிவித்துள்ளார். ரேஷனில் வழங்கப்படும் அரிசி கேரளா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களுக்கு கடத்தப்படுகிறது. இதனை தடுக்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வரும் நிலையில், கடத்தல் சம்பவங்கள் அதிகரித்தவாறே இருப்பதாக சமூக ஆர்வலர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
தென்னாப்பிரிக்க மகளிர் அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் இந்திய அணி 143 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றுள்ளது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியில் ஸ்மிருதி மந்தனா 117 ரன்கள் அடிக்கவே, 265 ரன்கள் எடுத்து. பின்னர் ஆடிய தெ.ஆ.,37.4 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 122 ரன்கள் மட்டுமே எடுத்தது. இந்திய அணியில் சிறப்பாக பந்து வீசிய ஆஷா ஷோபனா 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
நீட் பயிற்சிக்கு பிரபலமான கோட்டாவில், மாணவர்கள் தற்கொலை செய்யும் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. தாங்கள் முதன்மையாக விளங்க வேண்டும் என நினைக்கும் பயிற்சி மையங்கள், மாணவர்களுக்கு அதிக அழுத்தம் தருவதாக கூறப்படுகிறது. மருத்துவராகி பல உயிர்களை காப்பாற்ற வேண்டும் என்ற கனவுகளோடு வரும் மாணவர்களுக்கு, இத்தகைய பயிற்சி மையங்கள் தூக்கு கயிறாக மாறி வருவது கல்வியாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Sorry, no posts matched your criteria.