India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சூப்பர் ஹிட்டான ‘தாரே ஜமீன் பர்’ படத்தின் 2ஆம் பாகமாக உருவாகி வரும் ‘சிதாரே ஜமீன் பர்’ படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது. ஆர்.எஸ்.பிரசன்னா இயக்கியுள்ள இப்படத்தில் அமீர்கானுக்கு ஜோடியாக ஜெனிலியா நடித்துள்ளார். நகைச்சுவை கதைக்களத்தில் உருவாகியுள்ள இப்படத்தை இந்த ஆண்டு கிறிஸ்துமஸ் அன்று ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
முருகப் பெருமான், சூரனை வதம் செய்த பிறகு சினம் தணிந்து, சாந்த சொரூபமாக வந்து அமர்ந்த இடம் தான் திருத்தணி. சினம் தணிந்த இடம் என்பதால் திருத்தணிகை என இந்த தலம் அழைக்கப்படுகிறது. மற்ற கோயில்களில் இருப்பது போல் இங்குள்ள முருகன் சிலையில் வேல் இருப்பது இல்லை. அலங்காரம் செய்யும் போது மட்டும் வேல் சாற்றப்படுகிறது. முருகன், கோபம் தணிந்து காட்சி தரும் தலம் என்பதால் முருகன் கையில் வேல் கிடையாது.
வாக்குப் பதிவு இயந்திரத்தில் சந்தேகம் இருந்தால் ராகுல் காந்தி தனது எம்பி பதவியை ராஜினாமா செய்துவிட்டு மீண்டும் தேர்தலில் போட்டியிடட்டும் என மகாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தெரிவித்துள்ளார். காங்கிரஸ் தோற்றதால் வாக்குப்பதிவு இயந்திரத்தில் தவறு நடந்துள்ளது என்று கூறுவது நல்ல அரசியல் அல்ல என விமர்சித்துள்ளார். முன்னதாக, இவிஎம் இயந்திரத்தை கருப்பு பெட்டியோடு ஒப்பிட்டு ராகுல் பேசியிருந்தார்.
அதிகாலை நேர கனவுகள் பலிக்கும் என சாஸ்திரம் சொல்கிறது. அதில் இறந்தவர்களின் சடலமோ, துக்க நிகழ்ச்சியோ கண்டால் வீட்டில் சுபநிகழ்ச்சிகள் நடக்க உள்ளது என அர்த்தமாகும். விவசாயிகள் உழுவதைப்போல் கனவு கண்டால், சேமிப்பு பெருகும். வானவில்லை கனவில் கண்டால் பணம், செல்வாக்கு அதிகரிக்கும். பதவி உயர்வு கிடைக்கும். அசைவம் சாப்பிடுவது போல கனவு கண்டால் அதிர்ஷ்டம் வர போகிறது என அர்த்தம்.
இஸ்லாமியர்களின் புனித பண்டிகைகளில் ஒன்றான பக்ரீத் இன்று கொண்டாடப்படுவதால், பொது விடுமுறை விடப்பட்டுள்ளது. இதனால் தேசிய பங்குச்சந்தை, மும்பை பங்குச்சந்தைகள் இன்று செயல்படாது. இதேபோல் பொதுத்துறை வங்கிகள், தனியார் வங்கிகள், நிதி நிறுவனங்களுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதேநேரத்தில் இன்டர்நெட் பேங்கிங், ஏடிஎம் சேவைகள், மொபைல் பேங்கிங் சேவைகள் தொடர்ந்து செயல்படும்.
ரேணுகாசாமியை கொலையாளிகள் சித்திரவதை செய்தபோது நடிகர் தர்ஷன் அங்குதான் இருந்ததாக அரசு வழக்கறிஞர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார். தர்ஷனின் தோழியான பவித்ரா கவுடாவுக்கு ரேணுகாசாமி ஆபாச ஃபோட்டோக்கள் அனுப்பி தொல்லை செய்ததாகக் கூறப்படுகிறது. இதனை கண்டிக்கும் வகையில், அவரைக் கடத்திய தர்ஷனும் அவரது கூட்டாளிகளும் பிறப்புறுப்பில் மின்சாரம் பாய்ச்சி சித்தரவதை செய்து கொலை செய்திருப்பது தெரிய வந்துள்ளது.
சென்னை – நாகர்கோவில் இடையேயான வந்தே பாரத் ரயில் சேவையைத் தொடங்கி வைக்க, ஜூன் 20 சென்னை வருவதாக இருந்த பிரதமர் மோடியின் பயணம் நிர்வாகக் காரணங்களுக்காக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதனை அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கும் பாஜக மாநிலத் துணைத் தலைவர், பிரதமர் கலந்து கொள்வதாக இருந்த பாஜக ஆலோசனைக் கூட்டமும் ரத்து செய்யப்பட்டதாகக் குறிப்பிட்டுள்ளார்.
வங்கதேச அணிக்கு எதிரான உலகக் கோப்பை டி20 போட்டியில் நேபாள அணிக்கு 107 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. முதலில் களமிறங்கிய வங்கதேசம், நேபாள அணியின் பந்துவீச்சை தாக்கு பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டை இழந்தது. அந்த அணியின் ஷாகிப் அல் ஹசன் மட்டுமே அதிகபட்சமாக 17 ரன்கள் எடுத்தார். இந்த போட்டியில் வெற்றிபெற்றால் வங்கதேசம் சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறும் என்பது குறிப்பிடத்தக்கது.
விக்கிரவாண்டி இடைத் தேர்தலில் அதிமுக, தேமுதிக ஆகிய கட்சிகள் போட்டியில்லை என்று அறிவித்திருப்பதால் இது மும்முனைப் போட்டியாக மாறியிருக்கிறது. நாடாளுமன்றத் தேர்தலில் திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, பாஜக கூட்டணி, நாம் தமிழர் என நான்குமுனை போட்டி ஏற்பட்டது. ஆனால், இம்முறை திமுக, பாமக (பாஜக கூட்டணி), நாம் தமிழர் என மூன்று கட்சிகள் மட்டுமே போட்டியிடுகின்றன.
‘ஈ’ படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகர் நானி. விவேக் ஆத்ரேயே இயக்கத்தில் நானி நடிப்பில் உருவாகி இருக்கும் ‘சூர்யாவின் சனிக்கிழமை’ திரைப்படத்திலிருந்து ஃபர்ஸ்ட் சிங்கிள் பாடல் வெளியாகியுள்ளது. ஆக்சன் கலந்த கதைக்களத்தில் உருவாகி வரும் இப்படத்தில் நானிக்கு ஜோடியாக பிரியங்கா மோகன் மற்றும் எஸ்.ஜே சூர்யா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். ஜேக்ஸ் பிஜாய் இப்படத்திற்கு இசை அமைக்கிறார்.
Sorry, no posts matched your criteria.