India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நெஞ்சு வலி, சுவாசப் பிரச்னை, தலைசுற்றல் இல்லாமலேயே பலருக்கு அமைதியாகவே மாரடைப்பு ஏற்படுகிறது. இதை சில அறிகுறிகளை வைத்து கணிக்கலாம் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். அதாவது, திடீர் உடல் சோர்வு, தொடர்ச்சியான குமட்டல் மற்றும் தலைசுற்றல், ஓய்வாக இருக்கும் நேரத்திலும் அதிகமாக வியர்ப்பது, திடீரென மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டால் அலட்சியம் வேண்டாம் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.
நித்திலன் சாமிநாதன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான ‘மகாராஜா’ 3 நாள்களில் ₹32.6 கோடி வசூலித்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. விஜய் சேதுபதியின் 50ஆவது படமாக வெளியான இப்படத்திற்கு பாசிட்டிவ் விமர்சனம் கிடைத்துள்ளது. இதனால் வரும் நாள்களில் படத்தின் வசூல் மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்தில் அனுராக் காஷ்யப், மம்தா மோகன்தாஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
அபுதாபியில் கடந்த பிப்ரவரி மாதம் திறக்கப்பட்ட இந்துக் கோயிலில் இதுவரை 10 லட்சம் பேர் வழிபாடு செய்துள்ளதாக கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. பக்ரீத் பண்டிகை காலத்தில் கூட கோயிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகக் கூறிய நிர்வாகம், காலை 8 மணி முதல் இரவு 9 மணி வரை தரிசனம் செய்யலாம் எனத் தெரிவித்துள்ளது. மேலும், முன்பதிவு செய்தவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்றும் கூறியுள்ளது.
கேரளா வயநாடு தொகுதி இடைத்தேர்தலில், பிரியங்கா போட்டியிடுவார் என காங்கிரஸ் தலைமை அறிவித்துள்ளது. ஏற்கெனவே அங்கு போட்டியிட்டு வெற்றி பெற்ற ராகுல், தனது MP பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். இதைத் தொடர்ந்து அங்கு இடைத் தேர்தல் நடத்தப்படும் போது, காங்கிரஸ் சார்பில் பிரியங்கா போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, ரேபரேலி தொகுதி MP-யாக ராகுல் செயல்படுவார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வயநாடு தொகுதியை ராஜினாமா செய்தாலும் நான் அடிக்கடி அங்கு செல்வேன் என்று ராகுல் உருக்கமாக தெரிவித்துள்ளார். நானாக இருந்தாலும், எனது சகோதரியாக இருந்தாலும் சரி வயநாட்டிற்காக குரல் கொடுப்போம் எனக் கூறிய அவர், கடந்த 5 ஆண்டுகளாக வயநாடு மக்கள் கொடுத்த -ஆதரவு, அன்பை எப்போதும் மறக்க மாட்டேன் எனத் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் 6 மாவட்டங்களில், இரவு 10 மணி வரை இடியுடன் மழை பெய்யக் கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி மதுரை மற்றும் திண்டுக்கல்லில் இடி, மின்னலுடன் மிதமான மழையும், கரூர், புதுக்கோட்டை, திருச்சி, மற்றும் குமரியில் இடி, மின்னலுடன் லேசான மழையும் பெய்யக் கூடும் எனக் கூறப்பட்டுள்ளது. மழையால் சாலைகளில் நீர் தேங்கி, போக்குவரத்து நெரிசல் ஏற்படலாம் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
வயநாடு தொகுதியை ராஜினாமா செய்வதாக ராகுல் காந்தி சற்றுமுன் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். 2024 மக்களவைத் தேர்தலில் வயநாடு மற்றும் ரேபரேலி ஆகிய 2 தொகுதிகளில் போட்டியிட்டு ராகுல் காந்தி வெற்றி பெற்றார். அரசியலமைப்பு சட்டப்படி தேர்தல் முடிவுகள் வெளியாகி 14 நாட்களுக்குள் வெற்றி பெற்ற 2 தொகுதிகளில் ஒரு தொகுதியை ராஜினாமா செய்ய வேண்டும். இந்நிலையில், வயநாடு தொகுதியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார்.
நாடு முழுவதும் நேற்று நடைபெற்ற யுபிஎஸ்சி சிவில் சர்வீஸ் தேர்வை ஏராளமான மாணவர்கள் எழுதினர். இருப்பினும், கூகுள் மேப்பால் சுமார் 60 விண்ணப்பதாரர்கள் தேர்வைத் தவறவிட்டனர். அதாவது, மகாராஷ்டிராவில் உள்ள சமர்த் நகருக்கு பதிலாக, 14 கி.மீ. தள்ளியுள்ள வாட்கான் கோல்ஹாட் இடத்தை காட்டியதால், அவர்களால் சரியான நேரத்திற்கு தேர்வு மையம் செல்ல முடியவில்லை. தேர்வு எழுதும் வாய்ப்பை இழந்த பல மாணவர்கள் கதறி அழுதனர்.
நடப்பு T20 WC தொடரில் லீக் போட்டிகளில் தோல்வியடைந்த பாகிஸ்தான் அணி, அடுத்த சுற்றுக்கு முன்னேற முடியாமல் தொடரில் இருந்து வெளியேறியது. இந்நிலையில், அணி தோற்றால் கேப்டனை மட்டும் குறை சொல்வது சரியல்ல என பாக்., கேப்டன் பாபர் அசாம் வருத்தம் தெரிவித்துள்ளார். மேலும், வெற்றிபெறும் போதும், தோல்வியடையும் போதும் அணியாகத்தான் விளையாடுகிறோம், ஒவ்வொரு வீரருக்கும் பதிலாக கேப்டன் விளையாட முடியாது என்றார்.
கர்நாடக மாநில பாஜக மூத்த தலைவர் பானுபிரகாஷ், மாரடைப்பால் காலமானார். பெட்ரோல், டீசல் விலையை சமீபத்தில் கர்நாடக அரசு உயர்த்தியது. இதை கண்டித்து ஷிவமொக்கா மாவட்டத்தில் பாஜக சார்பில் இன்று நடைபெற்ற போராட்டத்தில் பங்கேற்ற அவருக்கு, திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது மறைவுக்கு பாஜகவினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
Sorry, no posts matched your criteria.