India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
உள்துறை அமைச்சர் அமித் ஷாவை இந்திய அணியின் முன்னாள் வீரர் கவுதம் கம்பீர் மரியாதை நிமித்தமாக நேரில் சந்தித்துள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் பதிவில், மக்களவைத் தேர்தல் வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்தேன். இவரது தலைமைப் பண்பில் நாட்டின் பாதுகாப்பு கூடுதல் பலம் பெறும் எனக் குறிப்பிட்டுள்ளார். இந்திய கிரிக்கெட் அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக கவுதம் கம்பீர் நியமிக்கப்பட உள்ளதாகக் கூறப்படுகிறது.
காசா மீதான போர் குறித்து முக்கிய முடிவுகள் எடுக்க அமைக்கப்பட்ட போர் கேபினட்டை இஸ்ரேல் அரசு கலைத்துள்ளது. இஸ்ரேல் எதிர்க்கட்சி தலைவர் பென்னி கான்ட்ஸ் & முன்னாள் ஜெனரல் ஈசன்கோட் ஆகியோர் கேபினட்டில் இருந்து வெளியேறிய நிலையில், அதனை கலைக்கும் முடிவை நெதன்யாகு எடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது. இஸ்ரேல் & ஹமாஸ் இடையேயான போர் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தொடங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.
இன்று (ஜூன் 18) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 11 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க!
பாரிஸ் ஒலிம்பிக் போட்டிக்கான வில்வித்தை தகுதி சுற்று துருக்கியில் நடந்து வருகிறது. அதன் மகளிருக்கான ரிகர்வ் ஒற்றையர் பிரிவின் இறுதிப்போட்டியில், இந்திய வீராங்கனை பஜன் கவுர் (18), ஈரானின் மொபினா பல்லாவுடன் மோதினார். இலக்கை நோக்கி துல்லியமாக அம்புகளை எய்த பஜன் கவுர், 6-2 என்ற புள்ளிகள் கணக்கில் வென்று, தங்கப்பதக்கத்தை தட்டிச் சென்றார். அத்துடன் ஒலிம்பிக் தொடருக்கு தகுதிபெற்றும் அசத்தியுள்ளார்.
செயற்கை நுண்ணறிவு தொழிற்நுட்பத்தால் மென்பொருள் வல்லுநர்களின் தேவை குறைந்துவிடாது என மைக்ரோசாப்ட் நிறுவனர் பில் கேட்ஸ் கூறியுள்ளார். AI தொழில்நுட்பம் நல்லது, கெட்டது இரண்டுக்கும் பயன்படக்கூடிய கருவியாக இருப்பதாகக் கூறிய அவர், கல்வி & சுகாதாரம் போன்ற துறைகளில் AI மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது என்றார். AI குறித்த அச்சம் தேவையில்லை என்ற அவரது கருத்து ஐ.டி., துறையினருக்கு ஆறுதலை அளித்துள்ளது.
வயநாடு மக்களுக்கு ராகுல் காந்தி நம்பிக்கை துரோகம் செய்துள்ளதாக கேரள பாஜக தலைவர் சுரேந்திரன் குற்றம்சாட்டியுள்ளார். அவர் தனது எக்ஸ் பதிவில், “வயநாடு எம்.பி., பதவியை ராஜினாமா செய்வதாக ராகுல் அறிவித்துள்ளார். இதன் மூலம் கேரளாவை அரசியல் ஆதாயத்துக்காக மட்டுமே ராகுல் பயன்படுத்துவது அம்பலமாகியுள்ளது. கேரளாவை வாக்கு சேகரிக்கும் ஏடிஎம் இயந்திரமாக மட்டுமே காங்கிரஸ் பார்க்கிறது” என விமர்சித்துள்ளார்.
இன்று (ஜூன் 18) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 11 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க!
டி20 உலகக் கோப்பை தொடரின் 39ஆவது லீக் போட்டியில், பப்புவா நியூ கினியா அணியை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணி வீழ்த்தியுள்ளது. முதலில் பேட்டிங் செய்த பப்புவா நியூ கினியா அணி 20 ஓவர்கள் முடிவில், 78 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனையடுத்து, 79 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கில் களமிறங்கிய நியூசி., அணி வெறும் 12.2 ஓவர்களில் 3 விக்கெட்டுகள் இழப்பில் அபார வெற்றி பெற்றது.
*திமுக ஆட்சியில் தமிழகத்தில் மணல் கடத்தல் அதிகரித்துள்ளது – இபிஎஸ்
*மத்திய அரசுக்கு ரயில்வே ஊழியர்கள் குறித்து அக்கறையில்லை – மம்தா பானர்ஜி
*அபுதாபி இந்து கோவிலில் பார்வையாளர்களின் எண்ணிக்கை 10 லட்சத்தை எட்டியது.
*MCLR எனப்படும் நிதி அடிப்படையிலான கடனுக்கான வட்டியை SBI 0.10% உயர்த்தியது.
*இந்தியா-கம்போடியா இடையே முதல் முறையாக நேரடி விமான சேவை தொடங்கப்பட்டுள்ளது.
பேடிஎம் பேங்க் வசதிக்கு ரிசர்வ் வங்கி தடை விதித்ததை தொடர்ந்து, பேடிஎம் நிறுவனம் கடும் நிதி நெருக்கடியை சந்தித்து வருகிறது. இந்நிலையில், பேடிஎம் நிறுவனத்தின் டிக்கெட் தொழிலை வாங்க, உணவு டெலிவரி நிறுவனமான சொமேட்டோ பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இந்த ஒப்பந்தம் உறுதியானால், அது சொமேட்டோவின் மிகப்பெரிய நகர்வாக கருதப்படும். முன்னதாக, 2020இல் Uber Eatsஐ சொமேட்டோ கையகப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
Sorry, no posts matched your criteria.