India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
முறைகேடுகளின் உருவமாக இருக்கும் நீட் தேர்வை அகற்ற வேண்டும் என முன்னாள் மத்திய அமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். நீட் தேர்வில் முறைகேடுகள் நடந்துள்ளதை கல்வியமைச்சரே ஏற்றுக் கொண்டுள்ளதாகக் கூறிய அவர், பிஹார் மற்றும் குஜராத்தில் நீட் தேர்வில் பெரிய அளவில் முறைகேடு நடந்துள்ளதாகக் கூறினார். முன்னதாக, நீட் தேர்வு தொடர்பாக பேசிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான், முறைகேடு நடந்ததை ஒப்புக்கொண்டார்.
உலக நாடுகளின் அணுஆயுத எண்ணிக்கை குறித்து ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதி நிறுவனம் புள்ளி விவரம் வெளியிட்டுள்ளது. அதில், இந்தியாவை விட சீனா 3 மடங்கு அதிக அணுஆயுதம் வைத்துள்ளதாகத் தெரிவித்துள்ளது. இந்திய அணுஆயுத எண்ணிக்கை 164இல் இருந்து 172ஆகவும், சீன அணுஆயுத எண்ணிக்கை 410இல் இருந்து 500ஆகவும் அதிகரித்துள்ளதாகவும், பாகிஸ்தான் 170 அணுஆயுதம் வைத்திருப்பதாகவும் கூறியுள்ளது.
டி20 உலகக் கோப்பை போட்டியில் லீக் சுற்றுப்போட்டிகள் முழுவதும் நிறைவடைந்துள்ள நிலையில், 2 அணிகள் ஒரு போட்டியில் கூட வெற்றி பெறாமல் தொடரில் இருந்து வெளியேறியுள்ளது. ஓமன் மற்றும் பப்புவா நியூ கினியா அணிகள் 4 போட்டிகளில் விளையாடி நிலையில், ஒரு போட்டியில் கூட வெற்றி பெறவில்லை. அயர்லாந்து மற்றும் நேபாள் அணிகளும் வெற்றி பெறாத நிலையில், மழை காரணமாக தலா ஒரு புள்ளிகளை பெற்றது குறிப்பிடத்தக்கது.
மத்தியில் டிடிபி, ஜேடியூ ஆதரவுடன் பாஜக கூட்டணி ஆட்சியமைத்துள்ளது. வாஜ்பாயின் கூட்டணி அரசு ஆட்சியில், டிடிபி மூத்த தலைவர் பாலயோகியும், சிவசேனா மூத்த தலைவர் மனோகர் ஜோஷியும் சபாநாயகர்களாக இருந்தனர். அதேபோல், இம்முறை கூட்டணிக்கு அளிக்கப்படுமோ என்ற கேள்வி எழுந்துள்ளது. ஆனால், அந்தப் பதவியை கூட்டணிக்கு விட்டு கொடுக்காமல் தன்னிடம் வைத்து கொள்ள பாஜக விரும்புவதாகச் சொல்லப்படுகிறது.
தமிழகத்தில் டிசம்பர் மாதம் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் நடக்க வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பு வரை உள்ளாட்சித் தேர்தல் உள்பட எந்தத் தேர்தலிலும் போட்டியிட மாட்டோம் என விஜய்யின் தவெக அறிவித்துள்ளது. கடந்த 2022இல் நடந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் விஜய் மக்கள் இயக்கம் சுயேச்சையாக நின்று கவனிக்கத்தக்க வெற்றிகளைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.
குற்றச்சம்பவம் குறித்து பாதிக்கப்பட்டோர், சம்பந்தப்பட்ட எல்லையில் உள்ள காவல்நிலையத்தில் புகார் அளிக்கும்போது, அதன்மீது முதலில் சிஎஸ்ஆர் பதிவு செய்யப்படும். பின்னர் காவல்துறை விசாரணை நடத்தி முதல் தகவல் அறிக்கை எனப்படும் FIR பதிவு செய்யும். இதனடிப்படையிலேயே அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும். இவை அனைத்தும் அந்த சம்பவம் நடந்த எல்லையில் உள்ள காவல்நிலையத்தில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கை.
குற்றச்சம்பவம் நடக்காத வேறு எல்லையில் உள்ள காவல்நிலையத்தில் பதியப்படும் முதல் தகவல் அறிக்கையே ஜீரோ FIR எனப்படும். பாதிக்கப்பட்டோர் வேறு எங்கும் அலையாமல் அருகிலுள்ள காவல்நிலையம் மூலம் நீதிபெற இந்நடவடிக்கை எடுக்கப்படுகிறது. பிறகு, இந்த ஜீரோ FIR சம்பந்தப்பட்ட காவல்நிலையத்துக்கு மாற்றப்படும். டெல்லி மருத்துவ மாணவி பாலியல் வழக்கில் அமைக்கப்பட்ட கமிட்டி பரிந்துரைப்படி இது அமல்படுத்தப்பட்டது.
இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் பணிக்கு கவுதம் கம்பீர் ஒருவர்தான் விண்ணப்பித்திருப்பதால் அவர் போட்டியின்றி தேர்வாகவுள்ளார். அப்பதவியில் இருக்கும் ராகுல் டிராவிடின் பதவிக்காலம் இம்மாதம் முடிவடையவுள்ளது. அதனைத் தொடர்ந்து விண்ணப்பங்களை பெற்ற பிசிசிஐ, கவுதம் கம்பீர் மட்டுமே விண்ணப்பித்திருப்பதாகத் தெரிவித்துள்ளது. அவர் இன்று பிசிசிஐ அதிகாரிகளுடன் நேர்காணலில் பங்கேற்கவுள்ளார்.
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் போட்டியில்லை என்று தமிழக வெற்றிக் கழகப் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் அறிவித்துள்ளார். மேலும், எந்தவொரு கட்சிக்கும் ஆதரவில்லை என்றும் அவர் கூறியிருக்கிறார். 2026ஆம் ஆண்டு நடைபெறவிருக்கும் சட்டமன்றத் தேர்தல்தான் பிரதான இலக்கு என்றும், அதில் வெற்றிபெற்று மக்கள் பணியாற்றுவோம் என்றும் அவர் அறிக்கையின் வாயிலாக கூறியிருக்கிறார்.
* இந்தியா (குரூப் A)
* அமெரிக்கா (குரூப் A)
* ஆஸ்திரேலியா (குரூப் B)
* இங்கிலாந்து (குரூப் B)
* மே.இ.தீவுகள் (குரூப் C)
* ஆஃப்கானிஸ்தான் (குரூப் C)
* தென்னாப்பிரிக்கா (குரூப் D)
* வங்கதேசம் (குரூப் D)
Sorry, no posts matched your criteria.