India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
பாகிஸ்தான் அணியின் மோசமான செயல்பாட்டிற்கு சம்மந்தப்பட்ட வீரர்களை தண்டிக்க வேண்டும் என அந்த அணியின் முன்னாள் வீரர் அகமது ஷேசாத் சாடியுள்ளார். பாகிஸ்தான் அணி குறித்து கேரி கிரிஸ்டன் பேசியது உண்மையாக இருந்தால் அதற்காக வருத்தப்பட வேண்டாம் என்ற அவர், இதைத் தான் உலகக் கோப்பை ஆரம்பித்ததில் இருந்து கூறி வருவதாக தெரிவித்துள்ளார். முன்னதாக, பாகிஸ்தான் ஒரு அணியே இல்லை என கேரி கிரிஸ்டன் கூறியிருந்தார்.
பயனாளர்களை தக்க வைக்க வாட்ஸ்அப் செயலி பல்வேறு அம்சங்களை அறிமுகம் செய்து வருகிறது. அந்த வரிசையில், வாட்ஸ்அப் மூலம் பகிரும் வீடியோ அல்லது புகைப்படத்தின் தரத்தை தேர்ந்தெடுக்கும் புதிய வசதியை உருவாக்கியுள்ளது. இதன் மூலம் இனி HD தர புகைப்படம் மற்றும் வீடியோக்களை பயனாளர்கள் பகிர முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வசதி சோதனைக்கு பிறகு, விரைவில் பயனாளர்களின் பயன்பாட்டுக்கு வரவுள்ளது.
இந்திய திரைத்துறையில் அதிக சம்பளம் வாங்கும் நடிகர்களின் பட்டியலை தி இந்து ஊடகம் வெளியிட்டுள்ளது. அதன்படி, ஷாருக் கான் ஒரு படத்திற்கு சுமார் ₹150 – ₹250 கோடி சம்பளம் பெற்று முதலிடம் பிடித்துள்ளார். அவரைத் தொடர்ந்து, ரஜினி ₹150 – ₹210 கோடி சம்பளம் பெறுவதாக கூறப்படுகிறது. விஜய் ₹130 – ₹200 கோடி சம்பளத்துடன் 3ஆவது இடத்திலும், பிரபாஸ் ₹100 – ₹200 கோடி சம்பளத்துடன் 4ஆவது இடத்திலும் உள்ளார்.
இடைத்தேர்தலில் பாமக வெற்றிக்கு உதவ வேண்டும் என்பதற்காகவே அதிமுக தேர்தல் புறக்கணிப்பு செய்துள்ளதாக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார். பாஜக மற்றும் பாமகவின் பி டீம் ஆக அதிமுக செயல்படுவதாக குற்றம் சாட்டிய அவர், எத்தகைய முயற்சி எடுத்தாலும், திமுகவின் வெற்றியை தடுக்க முடியாது என்றார். விக்கிரவாண்டி இடைத்தேர்தலை அதிமுக புறக்கணித்த நிலையில், திமுக-பாமக இடையே போட்டி ஏற்பட்டுள்ளது.
பாரதிய நியாய சன்ஹிதா, பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா மற்றும் பாரதிய சாக்ஷ்ய சட்டம் ஆகிய 3 குற்றவியல் நடைமுறை சட்டங்களை நிறுத்தி வைக்க வேண்டும் என அமித் ஷாவிற்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். சட்டங்கள் அனைத்தும், சமஸ்கிருதத்தில் பெயரிடப்பட்டுள்ளன; சட்டங்கள் ஆங்கிலத்தில் இருப்பது கட்டாயம். சமஸ்கிருதத்தில் சட்டத்தின் பெயர்கள் இருப்பது அரசமைப்பு 348 பிரிவை மீறுவதாகும் என தெரிவித்துள்ளார்.
ரேபரேலி தொகுதியில் போட்டியிடுவதை வயநாடு மக்களிடம் ராகுல் வெட்கமின்றி மறைத்து விட்டதாக, பாஜக மூத்த தலைவர் ராஜூவ் சந்திரசேகர் விமர்சித்திருந்தார். இதற்கு பதிலடி கொடுத்துள்ள காங்., மூத்த தலைவர் பவன் கேரா, 2014இல் வாரணாசியில் போட்டியிட போவதை மோடி வதோதரா மக்களிடம் மறைத்ததை போலவா? என வினவியுள்ளார். 2014 தேர்தலில் இரு தொகுதிகளில் வெற்றி பெற்ற மோடி, வதோதரா தொகுதியில் ராஜினாமா செய்தது குறிப்பிடத்தக்கது.
இந்திய அணி இறுதிப் போட்டிக்கு செல்லும் என்று சிஎஸ்கே பயிற்சியாளர் ஸ்டீபன் பிளமிங் தெரிவித்துள்ளார். அமெரிக்க ஆடுகளத்தை விட வெஸ்ட் இண்டீஸ் ஆடுகளம் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்கும் என்ற அவர், இதன் காரணமாக பிளேயிங் லெவனில் குல்தீப் யாதவ் இடம்பெற அதிக வாய்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ளார். இனி வரும் ஆட்டங்களில் பலமான சுழற்பந்து வீச்சாளர்களை வைத்திருக்கிற அணியே வெற்றி பெறும் என்றார்.
தூத்துக்குடி, திண்டுக்கல், மதுரையில் சில இடங்களில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. இந்த நிலையில், தமிழகத்தில் 8 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை இடியுடன் மழை பெய்யக் கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி தென்காசி, மதுரை, விருதுநகர், கரூர், தேனி, திருப்பூர், கன்னியாகுமரி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் இடியுடன் லேசான மழை பெய்யக் கூடும். மழை நேரத்தில் மரத்தடியில் நிற்க வேண்டாம்.
வட இந்திய மாநிலங்களில் கடுமையான வெயில் வாட்டி வதைத்து வருகிறது. குறிப்பாக, டெல்லி, ஹரியானா, உ.பி, ஆகிய மாநிலங்களுக்கு வானிலை ஆய்வு மையம் இன்று ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனிடையே, சமீபத்தில் ஏற்பட்ட சூரிய காந்த புயல்தான் கடுமையான வெப்ப அலைக்கு காரணம் என்ற தகவல் பரவியது. இதை மறுத்துள்ள வானிலை ஆய்வு மையம், பருவநிலை மாற்றம்தான் அதிக வெயிலுக்கு காரணம் என விளக்கம் அளித்துள்ளது.
புஷ்பா-2 படத்தில் நடிக்க மறுக்கவில்லை என விஜய் சேதுபதி கூறியுள்ளார். மகாராஜா படம் தொடர்பான செய்தியாளர் சந்திப்பில் புஷ்பா-2 படத்தில் நடிக்காதது ஏன்? என கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது, நான் நடிக்க மறுக்கவில்லை எனக் கூறிய விஜய் சேதுபதி, எப்போதும் நீங்கள் உண்மையை மட்டுமே பேசக்கூடாது. சில நேரங்களில் பொய் பேசுவது நல்லது என்றார். இதனால், அவர் நடிக்க மறுத்தாரா? இல்லையா? என ரசிகர்கள் குழம்பியுள்ளனர்.
Sorry, no posts matched your criteria.