news

News June 18, 2024

தங்கம் வாங்க தயங்கும் மக்கள்!

image

இந்தியாவில் தங்க நகைகளின் தேவை மந்தமாக இருப்பதாக, ICRA தர நிறுவனம் தெரிவித்துள்ளது. நடப்பு ஆண்டில் இதுவரை தங்கம் 19% விலை உயர்ந்துள்ளதாக கூறும் பொருளாதார நிபுணர்கள், இதன் எதிரொலியாக பெரும்பாலான மக்கள் தங்கம் வாங்குவதை தள்ளிப்போடுவதாக தெரிவித்துள்ளனர். தங்கத்தின் விற்பனை மதிப்பு அடிப்படையில் 6-8% உயர்ந்தாலும், எடை அடிப்படையில் 4%ஆக குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

News June 18, 2024

விஜய் நடிப்பதை நிறுத்தினால் நஷ்டமில்லை: நடிகை கஸ்தூரி

image

விஜய் சினிமாவை விட்டு விலகினால் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படாது என நடிகை கஸ்தூரி கூறியுள்ளார். விஜய் 30 வருடமாக மட்டுமே சினிமாவில் நடிப்பதாக கூறிய அவர், 150 ஆண்டுகளாக சினிமா இருந்து வருவதாக தெரிவித்துள்ளார். ஒரு நபருக்காக சினிமா நிற்காது என்றும், அது பலரின் பங்களிப்போடு தொடர்ந்து வளர்ந்துகொண்டே இருக்கும் என்றார். கஸ்தூரியின் பேச்சுக்கு விஜய் ரசிகர்கள் எதிர்வினையாற்றி வருகிறார்கள்.

News June 18, 2024

அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும்

image

ரேஷன் பொருள்கள் தட்டுப்பாடு ஏற்பட்டதாக புகார் எழுந்த நிலையில், மே, ஜூன் மாதத்திற்கான பருப்பு, எண்ணெய் அனைத்து குடும்ப அட்டைகளுக்கும் வழங்கப்படும் என்று அமைச்சர் சக்கரபாணி சற்றுமுன் அறிவித்துள்ளார். 3 ஆண்டில் ₹14,697 கோடியில் பருப்பு, ₹64.42 கோடியில் எண்ணெய் வழங்கப்பட்டுள்ளது என்றும், மே மாதத்திற்கான பருப்பு, பாமாயிலை ஜூன் மாதம் கடைசி வரை ரேஷன் கடைகளில் பெற்றுக்கொள்ளலாம் எனவும் அறிவித்துள்ளார்.

News June 18, 2024

கேலியும், கிண்டலும் தான் திராவிட மாடல்: தமிழிசை

image

இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தின் மீது பிரதமர் மோடி பெரும் மதிப்பு வைத்துள்ளதாக தமிழக பாஜக தலைவர் தமிழிசை தெரிவித்துள்ளார். அரசியல் அமைப்பு சட்டத்தை மோடி வணங்கியதை கிண்டல் செய்வது தான் திராவிட மாடல் என்ற அவர், அரசியலமைப்புச் சட்டம் மாற்றப்படும் என பாஜகவில் யாரும் கூறவில்லை என்றார். 400 இடங்களில் வென்றால் அரசியலமைப்பு சட்டம் மாற்றப்படும் என சில பாஜக தலைவர்கள் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

News June 18, 2024

பாரிஸ் ஒலிம்பிக்: முதல் முறையாக தமிழக வீரர் தகுதி

image

பாரிஸில் நடைபெற உள்ள ஒலிம்பிக்கில், துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் பங்கேற்க தமிழக வீரர் பிரித்திவிராஜ் தொண்டைமான் தகுதி பெற்றுள்ளார். கடந்த ஆண்டு ஆசிய விளையாட்டுப் போட்டியில் பங்கேற்று தங்கப் பதக்கம் வென்றதால், ஒலிம்பிக்கில் பங்கேற்க தகுதிபெற்றுள்ளார். இதனிடையே, ஒலிம்பிக்கில் துப்பாக்கிச் சுடுதல் பிரிவில் முதல் முறையாக பங்கேற்கும் தமிழக வீரர் என்ற பெருமையை பிரித்திவிராஜ் பெற்றுள்ளார்.

News June 18, 2024

விரல் ரேகை அளிப்போருக்கு ரிசர்வ் வங்கி எச்சரிக்கை

image

சிம்கார்டு, ரேஷன், வங்கி கணக்கு உள்ளிட்டவற்றுக்கு விரல் ரேகை சேகரிக்கப்படுகிறது. இந்நிலையில் ரிசர்வ் வங்கி சார்பில் நாட்டு மக்களுக்கு அனுப்பப்பட்டுள்ள குறுந்தகவலில், பரிவர்த்தனைகளுக்கு விரல் ரேகையை பதிவிடும் முன்பு, அக்கருவியில் மெல்லிய கண்ணாடி தாள் ஒட்டப்பட்டுள்ளதா என்பதை பரிசோதித்து இல்லை என உறுதி செய்யும்படியும், விரல் ரேகை சேகரிப்பு ரசீதை பெறும்படியும் வலியுறுத்தியுள்ளது.

News June 18, 2024

FIFA WC அதிகாரப்பூர்வ பக்கத்தில் தோனி குறித்த பதிவு

image

கிரிக்கெட் விளையாட்டில் எம்.எஸ்.தோனியும், கால்பந்து போட்டிகளில் ரொனால்டோவும் 7ஆம் எண் கொண்ட ஜெர்சியை அணிந்து விளையாடுவார்கள். இந்த நிலையில், 7ஆம் எண் ஜெர்சியுடன் ரொனால்டோவின் புகைப்படத்தை பகிர்ந்துள்ள FIFA உலகக் கோப்பையின் அதிகாரப்பூர்வ இன்ஸ்டா பக்கம், அதில் கேப்சனாக, Thala for a reason எனக் குறிப்பிட்டுள்ளது. இதனால் மகிழ்ச்சி அடைந்த தோனி ரசிகர்கள், அந்தப் பதிவை வைரலாக்கி வருகின்றனர்.

News June 18, 2024

என்டிஏ எம்.பியின் சர்ச்சை பேச்சுக்கு காங்கிரஸ் கண்டனம்

image

தனக்கு வாக்களிக்காத மக்களுக்கு எதுவும் செய்ய மாட்டேன் என்ற ஜேடியூ எம்.பி தேவேஷ் சந்திர தாக்கூரின் பேச்சுக்கு காங்கிரஸ் கண்டனம் தெரிவித்துள்ளது. 400 இடங்கள் கிடைத்தால் அரசியல் சாசனத்தை மாற்றுவோம் என்ற பாஜக கூட்டணி, தற்போது 240 இடங்கள் கிடைத்தும் அதனை தொடங்கியுள்ளதாக விமர்சித்துள்ளது. முன்னதாக, தனக்கு வாக்களிக்காத யாதவர்கள், முஸ்லிம்களுக்கு எந்த உதவியும் செய்ய மாட்டேன் என தாக்கூர் கூறியிருந்தார்.

News June 18, 2024

ஆந்திர எம்.பி. மகள் கைது

image

சென்னையில் கார் மோதி இளைஞர் உயிரிழந்த வழக்கில், ஆந்திர MP பீடா மஸ்தானின் மகள் மாதுரி கைது செய்யப்பட்டுள்ளார். பெசன்ட் நகர் அருகே நேற்று இரவு தறிகெட்டு ஓடிய கார் மோதியதில், பெயிண்டராக வேலைபார்த்து வந்த சூர்யா பலியானார். இது தொடர்பான விசாரணையில், விபத்து ஏற்படுத்தியது மாநிலங்களவை MP பீடா மஸ்தானின் மகள் எனத் தெரியவந்துள்ளது. புதுச்சேரியில் அவர் தொழில் நிறுவனம் நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

News June 18, 2024

பாக்., வீரர்கள் தண்டிக்கப்பட வேண்டும்: அகமது ஷேசாத்

image

பாகிஸ்தான் அணியின் மோசமான செயல்பாட்டிற்கு சம்மந்தப்பட்ட வீரர்களை தண்டிக்க வேண்டும் என அந்த அணியின் முன்னாள் வீரர் அகமது ஷேசாத் சாடியுள்ளார். பாகிஸ்தான் அணி குறித்து கேரி கிரிஸ்டன் பேசியது உண்மையாக இருந்தால் அதற்காக வருத்தப்பட வேண்டாம் என்ற அவர், இதைத் தான் உலகக் கோப்பை ஆரம்பித்ததில் இருந்து கூறி வருவதாக தெரிவித்துள்ளார். முன்னதாக, பாகிஸ்தான் ஒரு அணியே இல்லை என கேரி கிரிஸ்டன் கூறியிருந்தார்.

error: Content is protected !!