India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ஹரியானா எம்எல்ஏவும், முன்னாள் காங்கிரஸ் தலைவருமான கிரண் சவுத்ரி, அவரது மகள் ஸ்ருதி சவுத்ரியுடன் அம்மாநில முதல்வர் நயாப் சிங், முன்னிலையில் பாஜகவில் இணைந்தார். அங்கு இந்தாண்டு அக்டோபருக்குள் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், கட்சியில் இருந்து அவர் விலகியது காங்கிரஸூக்கு பின்னடைவை ஏற்படுத்தக்கூடும் எனக் கூறப்படுகிறது. கிரண் சவுத்ரி, ஹரியானா முன்னாள் முதல்வர் பன்சி லாலின் மருமகளும் ஆவார்.
தனது அடுத்தகட்ட அரசியல் நகர்வு குறித்து ஓபிஎஸ் தனது ஆதரவாளர்களுடன் நாளை சென்னையில் ஆலோசனையில் ஈடுபடவுள்ளார். பண்ருட்டி ராமச்சந்திரன் தலைமையில் அதிமுக உரிமை மீட்புக்குழு ஆலோசனையில் ஈடுபடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதிமுக ஒன்றிணைய வேண்டும் என்று பலமுறை ஓபிஎஸ் அழைப்பு விடுத்த நிலையில் நாளை ஆலோசனை கூட்டம் நடைபெறவுள்ளது. அடுத்து என்ன செய்யப் போகிறார் ஓபிஎஸ்?
ரஷ்ய அதிபர் புடின், 24 ஆண்டுகளுக்குப் பின் வட கொரியா சென்று அதிபர் கிம் ஜாங் உன்-ஐ சந்தித்தார். உக்ரைனுக்கு எதிரான போர் நடைபெற்று வரும் நிலையில், ரஷ்யாவுக்கு ஆயுதங்கள் அதிகம் தேவைப்படுகிறது. அதற்காக அவர்கள் வட கொரியாவை நாடுவதாக விமர்சகர்கள் கூறுகின்றனர். இருநாட்டு உறவை மேம்படுத்துவது குறித்து ஆலோசனை நடத்தவுள்ளதாக அதிகாரப்பூர்வமாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய மகளிர் அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா அணி பவுலிங் தேர்வு செய்துள்ளது. இதையடுத்து இன்னும் சற்று நேரத்தில் இந்திய அணி பேட்டிங்கை தொடங்க உள்ளது. முன்னதாக பெங்களூருவில் நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 143 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது குறிப்பிடத்தக்கது. இன்று எந்த அணி வெற்றிபெறும் என கமெண்ட் பண்ணுங்க.
நீட் தேர்வு முறைகேட்டை கண்டித்து ஜூன் 24இல் இளைஞரணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என திமுக அறிவித்துள்ளது. நீட் தேர்வு தமிழகத்திற்கு தேவையில்லை என நிறைவேற்றி அனுப்பிய சட்ட மசோதாவுக்கு உடனே ஒப்புதல் தர வலியுறுத்தியும், நீட் தேர்வில் நடைபெற்றுள்ள மிகப்பெரிய குளறுபடி, மோசடிகளை களைவதற்கு நடவடிக்கை எடுக்கக் கோரியும் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.
டி20 உலக கோப்பைக்கு பிறகு ஜிம்பாப்வே சென்று அந்நாட்டு அணிக்கு எதிராக இந்திய அணி 5 டி20 போட்டிகளில் விளையாடவுள்ளது. முதல் போட்டி ஜூலை 6இல் தொடங்குகிறது. இந்த தொடருக்கான இந்திய அணியில் ரோஹித் ஷர்மா, கோலி, பும்ரா ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட இருப்பதாகவும், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப், சாம்பியன் கோப்பைக்கு தயாராகும் வகையில் இந்த முடிவு எடுக்கப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.
தமிழக பாஜகவின் மையக்குழு ஆலோசனைக் கூட்டம் இன்று சென்னையில் நடைபெற்றது. அப்போது, கட்சிக்குள் இருக்கும் மோதல் குறித்து மேல்மட்ட குழுவிடம் தமிழிசை சௌந்தரராஜன் புகார் அளித்ததாகக் கூறப்படுகிறது. சொந்தக் கட்சியினரே தம்மை சமூக வலைதளங்களில் கேலி செய்வதாகவும் அவர் குற்றம்சாட்டியதாகத் தெரிகிறது. அண்ணாமலையின் கருத்துக்கு எதிராக பேசியதால் அவருக்கு எதிராக கட்சிக்குள் கலகம் வெடித்தது குறிப்பிடத்தக்கது.
சூர்யாவை வைத்து படம் ஒன்றை இயக்கிவரும் கார்த்திக் சுப்புராஜ், அடுத்ததாக ரஜினியை இயக்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதற்காக கார்த்திக் சுப்புராஜ், ரஜினியிடம் கதை கூறியதாகவும், ரஜினியும் அதற்கு ஓகே சொன்னதாகவும் தெரிகிறது. ரஜினி ‘கூலி’ படத்தை முடித்தபின் இருவரும் மீண்டும் இணைவார்கள் எனக் கூறப்படுகிறது. முன்னதாக இவர்கள் கூட்டணியில் வெளியான ‘பேட்ட’ ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.
கள்ளக்குறிச்சி கருணாபுரம் பகுதியைச் சேர்ந்த சிலர் கள்ளச்சாராயம் குடித்ததாகக் கூறப்படுகிறது. இதில் சுரேஷ், பிரவீன், சேகர் ஆகியோர் உயிரிழந்துள்ளனர். மேலும் 10க்கும் மேற்பட்டோர் உடல்நிலை பாதிக்கப்பட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இடைத்தேர்தலில் போட்டி இல்லை என்று அறிவித்திருப்பதன் மூலம் பாஜகவின் பி டீம் போல அதிமுக செயல்படுகிறது என்ற செல்வப்பெருந்தகையின் பேச்சுக்கு செல்லூர் ராஜூ பதிலளித்துள்ளார். “பாஜகவுக்கும் எங்களுக்கும் ஒட்டு உறவு இல்லை என்று பலமுறை சொல்லிவிட்டோம். இடைத்தேர்தலில் பண ஆறு ஓடும், தேர்தல் ஆணையம் கண்டுகொள்ளாது என்பதால் புறக்கணிக்கிறோம்” என்று அவர் விளக்கமளித்தார்.
Sorry, no posts matched your criteria.