news

News June 19, 2024

தொடரை வென்றது இந்திய மகளிர் அணி

image

தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரை, இந்திய மகளிர் அணி வென்றுள்ளது. இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள SA அணி, 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடி வருகிறது. பெங்களூருவில் நடைபெற்ற முதல் போட்டியில் 143 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற IND அணி, 2ஆவது ஒருநாள் போட்டியில் 4 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது. இதன் மூலம் 2-0 என்ற கணக்கில் IND மகளிர் அணி முன்னிலை வகிக்கிறது.

News June 19, 2024

கள்ளச்சாராயத்தில் முக்கிய அங்கம் வகிக்கும் மெத்தனால்

image

பெரும்பாலான கள்ளச்சாராய மரணங்களுக்கு, அவற்றில் மெத்தனால் கலக்கப்படுவதே காரணமாக இருக்கிறது. தமிழ்நாட்டில் 11 மெத்தனால் தயார் செய்யும் தொழிற்சாலைகள் உள்ளன. கள்ளச்சாராய மரணங்களை தவிர்ப்பதற்காக, மெத்தனால் விநியோகத்தில் தமிழக அரசு பல கடுமையான விதிகளை வகுத்துள்ளது. இருப்பினும், கள்ளச்சாராயம் காய்ச்சுபவர்களுக்கு இந்த அபாயகரமான வேதிப்பொருள் ஏதோ வழியில் கிடைப்பது, பல உயிர்களை காவு வாங்கி விடுகிறது.

News June 19, 2024

அடுத்தடுத்து தொடரும் மரணம்

image

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 13ஆக உயர்ந்துள்ளது. மேலும், கள்ளக்குறிச்சி கருணாபுரத்தை சேர்ந்த 60-க்கும் மேற்பட்டோர் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் இன்னும் பலரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. இதனால், அம்மாவட்டம் முழுவதும் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.

News June 19, 2024

ஸ்டாலினிடம் Sweet Box கேட்ட ராகுல்

image

காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி இன்று தனது 54ஆவது பிறந்த நாளை கொண்டாடுகிறார். இதையொட்டி, முதல்வர் ஸ்டாலின் அவருக்கு X தளத்தில், தனது சகோதரருக்கு பிறந்த நாள் வாழ்த்து எனக் கூறியிருந்தார். இதற்கு பதிலளித்துள்ள ராகுல், எனது அருமை சகோதரருக்கு நன்றி. எனது ஸ்வீட் பாக்ஸுக்காக காத்திருக்கிறேன் இன்று என X தளத்தில் பதிவிட்டுள்ளார். இந்த பதிவு தற்போது தமிழக அளவில் வைரலாகி வருகிறது.

News June 19, 2024

21ஆம் தேதி +1 பதிவெண்கள் பட்டியல் வெளியீடு

image

+1 பொதுத்தேர்வு எழுதி, மறுகூட்டல், மறுமதிப்பீடு கோரி விண்ணப்பித்தவர்களுக்குள், மதிப்பெண் மாற்றம் உள்ள தேர்வர்களது பதிவெண்களின் பட்டியல் வரும் 21ஆம் தேதி www.dge.tn.gov.in -இல் வெளியிடப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. மறுகூட்டல்/ மறுமதிப்பீட்டில் மதிப்பெண் மாற்றம் உள்ள தேர்வர்கள் மட்டும் திருத்தப்பட்ட மதிப்பெண்கள் அடங்கிய மதிப்பெண் பட்டியலை பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம்.

News June 19, 2024

கள்ளக்குறிச்சி சாராய வழக்கு CBCID வசம் சென்றது

image

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், பாக்கெட் சாராயம் குடித்து 9 பேர் உயிரிழந்த வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. கள்ளக்குறிச்சி, திருக்கோவிலூரைச் சேர்ந்த சிலர் நேற்று பாக்கெட் சாராயம் குடித்ததில், இதுவரை 9 பேர் இறந்துள்ளனர். 40க்கும் அதிகமானோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில், காவல்துறை வசம் இருந்த இந்த வழக்கு தற்போது சிபிசிஐடி வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

News June 19, 2024

கள்ளக்குறிச்சி: காவலர்கள் கூண்டோடு சஸ்பெண்ட்

image

கள்ளச்சாராய பலி எதிரொலியாக கள்ளக்குறிச்சி மாவட்ட காவல்துறை அதிகாரிகள் 9 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். குறிப்பாக கள்ளக்குறிச்சி, திருக்கோவிலூர் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு காவல் ஆய்வாளர்கள் கவிதா, பாண்டிசெல்வி சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். இதேபோல, திருக்கோவிலூர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர், SI, எழுத்தாளர், சிறப்பு SI உள்ளிட்ட அனைவரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

News June 19, 2024

உங்கள் Gmail-ஐ மர்மநபர் பயன்படுத்துகிறாரா?

image

மறந்து சில இடங்களில் G-mail சேவையை Log out செய்யாமல் வந்திருந்தால், பிறர் பயன்படுத்த வாய்ப்புள்ளது. இதைத்தடுக்க G-mail சில வசதி அளிக்கிறது. G-mail பக்கத்தில் மேலே புகைப்படம் இருக்கும் இடத்தை அழுத்தினால், Click Manage your Google Account என்று வரும். அதை அழுத்தினால் வரும் Click Security-க்குள் சென்றால், எத்தனை உபகரணங்களில் உங்கள் G-mail உள்ளது என்பது தெரியும். அதை பயன்படுத்தி Log out செய்யலாம்.

News June 19, 2024

14 வகை பயிர்களுக்கான கொள்முதல் விலை உயர்வு

image

விவசாயிகளுக்கு மகிழ்ச்சி தரும் வகையில், 14 வகை பயிர்களுக்கான கொள்முதல் விலையை உயர்த்தி மத்திய அரசு அறிவித்துள்ளது. நெல் கொள்முதல் விலையை குவிண்டாலுக்கு ₹117 உயர்த்தி ₹2,300ஆகவும், உளுந்துக்கான கொள்முதல் விலை ₹7,400ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. மேலும், சிறுதானியங்கள், பருப்பு வகைகள், பருத்தி உள்ளிட்டவைகளின் கொள்முதல் விலையும் உயர்த்தப்பட்டுள்ளது.

News June 19, 2024

அமெரிக்கா அணி பந்துவீச்சு

image

T20 உலகக் கோப்பை தொடரின் சூப்பர் 8 சுற்று ஆட்டங்கள் இன்று தொடங்குகிறது. முதல் போட்டியில் தென்னாப்பிரிக்கா-அமெரிக்கா அணிகள் மோதுகின்றன. இதில், டாஸ் வென்ற USA அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. நடப்பு தொடரின் மூலம், சர்வதேச கிரிக்கெட்டில் முதல்முறையாக விளையாடி வரும் USA அணி, லீக் போட்டியில் சிறப்பான பங்களிப்பை அளித்ததுடன், சூப்பர் 8 சுற்றுக்கும் முன்னேறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!