news

News June 19, 2024

கர்ப்பமானதே தெரியாமல் பெண்களுக்கு பிரசவம்

image

கர்ப்பமாக இருப்பதை அறியாத பெண்களை குறிப்பிட ‘கிரிப்டிக் கர்ப்பம்’ என்ற வார்த்தை பயன்படுத்தப்படுகிறது. அதாவது, வாந்தியெடுத்தல், வயிறு பெருத்தல் போன்ற பொதுவான அறிகுறிகள் எதுவுமே இந்த பெண்களுக்கு தெரிவதில்லை. இதில் சில பெண்களுக்கு பிரசவத்திற்கு முன்பு வரை தாங்கள் கர்ப்பமாக இருப்பதே தெரியாது. இது அரிதாக நிகழ்ந்தாலும், கருப்பின பெண்களிடையே பொதுவாக காணப்படுவதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.

News June 19, 2024

முதல்வர் ஸ்டாலின் பதவி விலக வேண்டும்: ஜெயக்குமார்

image

நிர்வாக திறனற்று, ஆட்சி செய்ய தகுதியற்று நிற்கும் முதலமைச்சர் ஸ்டாலின் பதவி விலக வேண்டும் என, முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் வலியுறுத்தியுள்ளார். கள்ளக்குறிச்சி சம்பவத்தை சுட்டிகாட்டியுள்ள அவர், பாதிக்கப்பட்டவர்கள் குடும்பத்திற்கு பதில் உண்டா? என வினவியுள்ளார். மேலும், மாவட்ட ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர்களுக்கு தலைமை தாங்கும் ஸ்டாலின் தான், முதலில் பதவி விலகியிருக்க வேண்டும் எனவும் கூறியுள்ளார்.

News June 19, 2024

9 பேர் கவலைக்கிடம்: அமைச்சர் எ.வ.வேலு

image

கள்ளச்சாராயம் குடித்து ஆபத்தான நிலையில் கள்ளக்குறிச்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள 9 பேர் கவலைக்கிடமாக இருப்பதாக அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை அமைச்சர்கள் எ.வ.வேலு, மா.சுப்பிரமணியன் நேரில் சந்தித்து நலம் விசாரித்தனர். இதைத் தொடர்ந்து பேசிய எ.வ.வேலு, காவல்துறை மெத்தனமாக இருந்துள்ளதாகவும், தவறு நடந்ததை நியாயப்படுத்தவில்லை என்றும் கூறினார்.

News June 19, 2024

தமிழ்நாட்டின் காற்றாலை திட்டத்திற்கு நிதியுதவி

image

குஜராத் மற்றும் தமிழ்நாட்டில் கடலோரப் பகுதிகளில் ஒரு ஜிகாவாட் மின் உற்பத்திக்கான கடலோரக் காற்றாலை திட்டங்களுக்கு நிதியுதவி அளிக்க அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக பிரதமர் மோடி அறிவித்துள்ளார். இத்திட்டம் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திறனை மேம்படுத்தும் என தனது X பக்கத்தில் பதிவிட்டுள்ள பிரதமர், இது CO2 உமிழ்வைக் குறைப்பதோடு, வேலை வாய்ப்பையும் உருவாக்கும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

News June 19, 2024

பிரியங்கா சோப்ரா கழுத்தில் வெட்டுக் காயம்

image

நடிகை பிரியங்கா சோப்ரா கழுத்தில் காயம் ஏற்பட்டுள்ள நிகழ்வு, அவரது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இது தொடர்பாக தனது இன்ஸ்டா ஸ்டேட்டஸில் ஒரு புகைப்படத்தை பகிர்ந்துள்ள அவர், எனது வேலையில் உள்ள தொழில்முறை ஆபத்து என்ற கருத்துடன், கழுத்தில் வெட்டுக்காயத்துடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். இதைப் பார்த்த அவரது ரசிகர்கள், விரைவில் அவர் குணமடைய வேண்டும் என ஆறுதல் கூறி வருகின்றனர்.

News June 19, 2024

ரேபிஸ் நோயால் 16 பேர் பலி

image

தமிழகத்தில் நடப்பாண்டில் ரேபிஸ் நோய் பாதிப்பால் 16 பேர் உயிரிழந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. நாய், பூனை போன்ற விலங்குகளிடம் இருந்து ரேபிஸ் நோய் பரவுகிறது. இந்த நிலையில், தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கை படி, ஆண்டுதோறும் நாய் கடியால் 5000க்கும் அதிகமானோர் பாதிக்கப்படுவதாகவும், தடுப்பூசி செலுத்திக் கொள்வதால் உயிரிழப்புகளை தடுக்க முடியும் எனவும் கூறப்பட்டுள்ளது.

News June 19, 2024

தனிநபர் செலவினம் என்றால் என்ன?

image

தனிநபர் செலவினம் (Per Capita Expenditure) என்பது, ஒரு நாட்டில் அல்லது ஒரு மாநிலத்தில் தனிநபர் ஒருவர் சராசரியாக செய்யும் செலவின் அளவீட்டை காட்டுகிறது. இந்த ஆய்வின் அடிப்படையில், செலவினம் அதிகமுள்ள மாநிலங்களில் வர்த்தக முதலீடுகள் அதிகரிக்கும். அதே வேளையில், சம்பந்தப்பட்ட மாநிலத்தில் உள்ள மக்களின் வருமானம் உயர்ந்தால் தான், தனிநபர் சராசரி செலவும் அதிகரிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

News June 19, 2024

தனிநபர் சராசரி செலவினத்தில் தமிழகம் முன்னிலை

image

தனிநபர் செலவினத்தில் தமிழகம் முன்னிலை வகிப்பது ஆய்வில் தெரியவந்துள்ளது. இது தொடர்பாக மத்திய அரசின் NSSO வெளியிட்டுள்ள 2022-23க்கான அறிக்கைபடி, நகர்ப்புறங்களில் ₹7630, கிராமப்புறங்களில் ₹5310 தனிநபர் சராசரி செலவினமாக உள்ளது. இதன் மூலம் கிராமம், நகரம் என இரண்டிலும், தனிநபர் சராசரி செலவினம் அதிகம் உள்ள மாநிலமாக தமிழகம் உள்ளது. இந்தியாவின் சராசரி செலவின அளவு கிராமங்கள்-₹3773, நகரங்கள்-₹6459.

News June 19, 2024

தமிழகத்தை உலுக்கும் கள்ளச்சாராய மரணங்கள்..!

image

கடந்த ஆண்டு மே மாதத்தில் விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் கள்ளச்சாராயம் குடித்து 22 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து, கள்ளச்சாராய நடமாட்டத்தை கட்டுப்படுத்த காவல்துறை தரப்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இந்நிலையில், கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்த 10 பேர் உயிரிழந்த சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

News June 19, 2024

இன்று இரவே பிரேத பரிசோதனை நடத்த உத்தரவு

image

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் விஷசாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் உடல்களை, இன்று இரவே பிரேத பரிசோதனை செய்ய தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. கோவிந்தராஜ் என்பவர் விற்ற பாக்கெட் சாராயத்தை வாங்கிக் குடித்ததில் இதுவரை 13 பேர் பலியாகியுள்ளனர். மேலும் உடல்நிலை பாதிக்கப்பட்ட 70க்கும் அதிகமானோர், கள்ளக்குறிச்சி, சேலம், விழுப்புரம் மற்றும் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

error: Content is protected !!