India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மிக மோசமான பக்க விளைவுகளை ஏற்படுத்துவதாகக் கூறி, இந்தியாவின் ஸைடஸ் ஹெல்த்கேர் நிறுவனத்தின் பயோடக்ஸ் மருந்துக்கு நேபாள் மருந்து கட்டுப்பாட்டுத் துறை தடைவிதித்துள்ளது. நேபாள் ஆய்வுக் கூடத்தில் பயோடக்ஸ் 1ஜிஎம் மருந்து பரிசோதிக்கப்பட்டது. அதில், குறிப்பிட்ட தயாரிப்பு முறைகளை அந்நிறுவனம் பின்பற்றவில்லை என்றும் நோயாளிகளுக்கு செலுத்தப்பட்டால் அவர்களது உயிருக்கே ஆபத்து ஏற்படலாம் என்றும் தெரியவந்துள்ளது.
*1248 – ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் அரச அங்கீகாரத்தைப் பெற்றது. *1837 – விக்டோரியா பிரிட்டனின் பேரரசியாக முடிசூடினார். *1921 – வடசென்னையில் பக்கிங்காம், பி&சி மில் தொழிலாளர்கள் பணி நிறுத்தப்போராட்டத்தை தொடங்கினர். *1960 – பிரான்ஸிடம் இருந்து மாலி விடுதலை பெற்றது. *1990 – 5261 யுரேக்கா என்ற சிறுகோள் கண்டுபிடிக்கப்பட்டது. *2003 – விக்கிமீடியா நிறுவனம் தொடங்கப்பட்டது. *2006 – கவிஞர் சுரதா மறைந்த நாள்.
சமந்தா, ஃபகத் பாசில், தீபிகா படுகோனே உள்ளிட்ட திரைப் பிரபலங்கள் தங்களுக்கு உள்ள நோயை வெளிப்படையாக பகிர்ந்து வருகிறார்கள். அந்த வரிசையில், தற்போது நடிகை அனுஷ்காவும் இணைந்துள்ளார். ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், ‘ஸ்மைலிங் சின்ட்ரோம்’ என்ற அரிய வகையான சிரிக்கும் வியாதி தனக்கு இருப்பதாகக் கூறிய அவர், தான் சிரிக்க ஆரம்பித்தால் 20 நிமிடங்கள் தொடர்ந்து சிரித்துக்கொண்டே இருப்பேன் என்றார்.
தேசிய தேர்வு முகமை சார்பில் நடத்தப்பட்ட யுஜிசி நெட் தேர்வை ரத்து செய்வதாக மத்திய கல்வி அமைச்சகம் அறிவித்துள்ளது. உதவிப் பேராசிரியர் & இளநிலை ஆராய்ச்சி நிதியுதவி பெறுவதற்காக தகுதியைத் தீர்மானிப்பதற்காக நடைபெற்ற நெட் தேர்வு இந்தாண்டு OMR சீட் முறையில் நடைபெற்றது. அதில், முறைகேடுகள் நடந்ததாக தேசிய சைபர் குற்றப் பிரிவிலிருந்து தகவல் வந்ததையடுத்து, மத்திய அரசு முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.
தமிழக சட்டமன்ற காங்கிரஸ் துணைத் தலைவராக சோளிங்கர் தொகுதி எம்.எல்.ஏ முனிரத்னம் நியமிக்கப்பட்டுள்ளதாக காங்கிரஸ் கமிட்டியின் மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை அறிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சட்டப்பேரவை கொறடாவாக வேளச்சேரி எம்.எல்.ஏ. JMH அசன் மவுலானா நியமிக்கப்பட்டுள்ளார்” குறிப்பிடப்பட்டுள்ளது. காங்கிரஸின் சட்டமன்றக் குழு தலைவராக ராஜேஷ்குமார் பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கது.
▶குறள் பால்: காமத்துப்பால் ▶இயல்: கற்பியல்
▶அதிகாரம்: பிரிவாற்றாமை ▶ குறள் எண்: 1151
▶குறள்:
செல்லாமை உண்டேல் எனக்குரை மற்றுநின்
வல்வரவு வாழ்வார்க் குரை.
▶பொருள்: பிரிந்து செல்வதில்லை என்றால், அந்த மகிழ்ச்சியான செய்தியை என்னிடம் சொல். நீ போய்த்தான் தீர வேண்டுமென்றால் நீ திரும்பி வரும்போது யார் உயிரோடு இருப்பார்களோ அவர்களிடம் சொல்லிவிட்டு விடைபெற்றுக் கொள்.
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலியின் பயோ பிக்கில் நடிகர் ரன்பீர் கபூர் நடித்தால் நன்றாக இருக்கும் என முன்னாள் வீரர் தினேஷ் கார்த்திக் கூறியுள்ளார். கோலி விளையாடும் விதத்தை ரன்பீர் தெளிவாக வெளிப்படுத்துவார் எனக் கூறிய அவர், ரோஹித் ஷர்மா வேடத்தில் நடிக்க விஜய் சேதுபதி பொருத்தமாக இருப்பார் என்றார். ஹர்திக் பாண்டியாவாக ரன்வீர் சிங் நடிக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.
தமிழக பாஜகவின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் இரண்டாம் முறையாக திருச்சி சூர்யா அதிரடி நீக்கப்பட்டுள்ளார். கட்சிக்கு களங்கம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டு வருவதாகக் கூறி, மாநில தலைமையின் அறிவுறுத்தலின்படி, அவர் மீது இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக ஓ.பி.சி., அணி மாநில தலைவர் சாய் சுரேஷ் அறிவித்துள்ளார். ஓ.பி.சி., அணியின் மாநில செயலாளராக சூர்யா பொறுப்பு வகித்து வந்தது குறிப்பிடத்தக்கது.
நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான SBI வங்கி, 2025ஆம் நிதியாண்டில் ₹20,000 கோடி திரட்டப்போவதாக அறிவித்துள்ளது. எஸ்பிஐ வங்கியின் நிர்வாகக் கூட்டத்தில், நீண்ட கால பத்திரங்கள் மூலம் நிதி திரட்ட அதன் இயக்குநர்கள் குழு ஒப்புதல் அளித்துள்ளது. பத்திரங்களைப் பொது வெளியீடு அல்லது தேர்ந்தெடுக்கப்பட்ட முதலீட்டாளர்கள் & நிறுவனங்களுக்கு விற்பனை செய்து நிதி திரட்ட SBI முடிவெடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இன்று (ஜூன் 20) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 11 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க!
Sorry, no posts matched your criteria.