India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
2026 சட்டமன்றத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் அதிமுக வென்று ஆட்சி அமைக்கும் என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் இபிஎஸ் நம்பிக்கை தெரிவித்துள்ளார். அதிமுக அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய அவர், 5 ஆண்டுகால ஆட்சியில் இருமுறை கூட்டுறவு கடன் & பயிா்க் கடன்களை தள்ளுபடி செய்யப்பட்டதாகக் கூறினார். டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்த வரலாற்றுப் பெருமை அதிமுகவுக்கு உண்டு என்றார்.
டெல்லி, ஹரியானா உள்ளிட்ட வட இந்தியாவின் பல மாநிலங்களில் கடும் வெப்ப அலை வீசி வருகிறது. குறிப்பாக டெல்லியில் இயல்பு நிலையை விட அதிகமாக 5°C – 8°C வரை அதிக வெப்பநிலை பதிவாகியுள்ளது. இயல்பை மீறிய வெயிலின் தாக்கத்தால் மே 27ஆம் தேதி முதல் இன்றுவரை அங்கு 20 பேர் உயிரிழந்துள்ளனர். வாட்டி வதைக்கும் தீவிர வெப்ப அலையின் தாக்கம் நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
*9 லட்சம் பேர் எழுதிய NET தேர்வை மத்திய கல்வியமைச்சகம் ரத்து செய்தது.
*2026 சட்டமன்றத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் அதிமுக வெற்றி பெறும் – இபிஎஸ்
*பஞ்சாப் எம்.பி., அம்ரித்பால் சிங்கின் பயங்கரவாத தடுப்புக்காவல் ஓராண்டு நீட்டிப்பு.
*பொருளாதார நிபுணர்களுடன் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆலோசனை
* நியூசி., அணியின் ODI & T20 கேப்டன் பதவிகளில் இருந்து விலகுவதாக கேன் வில்லியம்சன் அறிவிப்பு
✍முட்டாள்கள் வாழும் நாட்டை கயவர்கள்தான் ஆட்சி செய்வார்கள். ✍மாற்றம் என்பது சொல் அல்ல;அது ஒரு செயல். ✍மிக அழகான விடயங்கள் பூரணமானவை அல்ல, அவை தனித்துவமானவை. ✍ஒரு தீர்வை அடைவதற்கு, ஒரு கலகம் தேவைப்படுகிறது ✍எல்லா வெளிச்சமும் சூரியன் அல்ல. ✍உனக்காகப் பொய் சொல்பவன், உனக்கு எதிராகவும் பொய் சொல்வான். ✍மக்கள் எப்போதுமே ஒரே இடத்தில் நடப்பதால், ஒரு பாதை தோன்றுகிறது.✍கிளர்ச்சி என்பது மக்களின் உரிமை.
டி20 உலகக்கோப்பை தொடரின் சூப்பர் 8 சுற்றின் இன்றைய 2ஆவது போட்டியில், ENG & WI அணிகள் மோதுகின்றன. டேரன் சமி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியில், வெல்ல ENG அணிக்கு 51% வாய்ப்பும், WI அணிக்கு 49% வாய்ப்பும் இருப்பதாகக் கணிக்கப்பட்டுள்ளது. நடப்பு தொடரில் ஒரு போட்டியிலும் தோற்காத WI அணி (+3.257), புள்ளிப்பட்டியலில் முதலிடத்தைத் தக்க வைக்க, முனைப்புடன் உறுதியாகப் போராடும்.
கள்ளச்சாராய சாவை விட தமிழக அரசின் டாஸ்மாக்கில் விற்கின்ற சாராயத்தால் கோடிக்கணக்கான சாவுகள் நடக்கிறது என்று பாமக தலைவர் அன்புமணி கூறியுள்ளார். கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணங்கள் திமுக ஆட்சியில் சட்டம்- ஒழுங்கு சீர்கெட்டுள்ளதை படம்பிடித்து காட்டியுள்ளதாகக் கூறிய அவர், முதல்வர் ஸ்டாலினின் அரசும் காவல்துறையும் தமிழ்நாட்டை குடிகார நாடாக மாறியிருக்கிறது என்று காட்டமாக விமர்சித்துள்ளார்.
தமிழகத்தில் கோவில்களில் அறங்காவலர் நியமனத்தை கண்காணிக்க ஓய்வுபெற்ற நீதிபதியை ஏன் நியமிக்கக்கூடாது என்று உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. அறங்காவலர் நியமனம் குறித்த வழக்கு சிறப்பு டிவிசன் பெஞ்சில் விசாரணைக்கு வந்தது. அப்போது இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிபதிகள், அறங்காவலர் நியமனம் தொடர்பான அனைத்து விவரங்களை அறநிலையத்துறை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டனர்.
▶ஜூன்- 20 | ▶ஆனி – 06
▶கிழமை: வியாழன் | ▶திதி: திரயோதசி
▶நல்ல நேரம்: காலை 10:30 – 11:30 வரை
▶கெளரி நேரம்: காலை 12:30 – 01:30 வரை, மாலை 06:30 – 07:30 வரை
▶ராகு காலம்: நண்பகல் 01:30 – 03:00 வரை
▶எமகண்டம்: காலை 06:00 – 07:30 வரை
▶குளிகை: காலை 09:00 – 10:30 வரை
▶சந்திராஷ்டமம்: ரேவதி, அசுபதி
▶சூலம்: தெற்கு ▶பரிகாரம்: தைலம்
2023-24 ஆம் நிதியாண்டில் 4,300 கோடீஸ்வரர்கள் இந்தியாவை விட்டு வெளியேறுவார்கள் என்று சர்வதேச முதலீட்டு ஆலோசனை நிறுவனம் ஹென்லி & பார்ட்னர்ஸ் கணித்துள்ளது. அதன் ஆய்வறிக்கையில், “உலகளவில் சீனா, இங்கிலாந்து ஆகிய இருநாடுகளும் அடுத்தபடியாக இந்திய கோடீஸ்வரர்கள் அதிகளவில் புலம்பெயர்கின்றனர். இந்தாண்டு அவர்களில் பெரும்பாலோர் ஐக்கிய அரபு எமிரேட்ஸை தேர்வு செய்வார்கள்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
கன்னட சின்னத்திரை நடிகை வைஷ்ணவி கவுடா முகத்தை பயன்படுத்தி ‘டீப் பேக்’ ஆபாச வீடியோ ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சமூக வலைதளங்களில் வெளியான அவரது படங்களை மர்ம நபர்கள் ஆபாசமாக சித்தரித்து வெளியிட்டுள்ளனர். அவற்றைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த வைஷ்ணவி, இது குறித்து பெங்களூரு சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்துள்ளார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Sorry, no posts matched your criteria.