India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
பிரிட்டனைச் சேர்ந்த பிரபல சினிமா இதழான Sight and Sound இந்த நூற்றாண்டின் சிறந்த 25 படங்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில் கடந்த 2018ஆம் ஆண்டில் இயக்குநர் பா. ரஞ்சித் இயக்கி ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான காலா திரைப்படமும் இடம்பெற்றுள்ளது. இந்தியப் படங்களில் காலா படம் மட்டுமே அந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளது. வேறு எந்த இந்திய மொழி படங்களும் அதில் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
BP, சர்க்கரை நோய் உள்ளிட்ட 54 வகையான மருந்துகளின் விலையை மத்திய அரசு உயர்த்தியுள்ளது. சர்க்கரை நோயாளிகள் அதிகம் பயன்படுத்தும் மெட்ஃபோர்மின், லினாக்ளிப்டின் மாத்திரைகள் விலை ₹15ல் இருந்து ₹20 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. BP மாத்திரைகளான டெல்மிசார்டன், சில்னி டிபைன் போன்றவற்றின் விலை ₹7.14 ஆக உயர்ந்துள்ளது. பாக்டீரியா எதிர்ப்பு ஊசி, கால்சியம் மற்றும் வைட்டமின் டி 3 மாத்திரைகள் விலை குறைந்துள்ளது.
ஓபிஎஸ் அணியின் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் இன்று நடைபெற உள்ளது. அந்த அணியின் அரசியல் ஆலோசகர் பண்ருட்டி ராமசந்திரன் தலைமையில் நடைபெறும் இந்த ஆலோசனையில், ஓபிஎஸ் ஆதரவு அதிமுக எம்எல்ஏக்கள், மாவட்டச் செயலாளர்கள், கட்சி நிர்வாகிகள் கலந்து கொள்ள இருக்கிறார்கள். ஓபிஎஸ் அணியில் இருந்து ஜேசிடி பிரபாகர், புகழேந்தி உள்ளிட்ட நிர்வாகிகள் விலகிய நிலையில், இந்த கூட்டம் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
நாட்டின் பல பகுதிகளில் கடும் வெப்ப அலை மக்களை அதிகமாக வாட்டி வருகிறது. இதனால் வெப்ப வாதம் உள்ளிட்ட பல்வேறு கோடைகால நோய்கள் அதிகரித்து வருகின்றன. டெல்லி உள்ளிட்ட வட இந்திய மாநிலங்களில் இதன் காரணமாக இதுவரை 40-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், வெப்ப அலை தொடர்பான நோய்களுக்கு சிகிச்சையளிக்க தயாராக இருக்குமாறு மருத்துவமனைகளுக்கு மத்திய அமைச்சர் ஜெ.பி.நட்டா உத்தரவிட்டுள்ளார்.
ரஷ்யாவும் வட கொரியாவும் இணைந்து பரஸ்பர ராணுவம் & தளவாட உதவி வழங்கும் ஒப்பந்தமொன்றில் கையெழுத்திட்டுள்ளன. இருநாடுகளில் மேலாதிக்க சக்திகள் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளும்பட்சத்தில், போர் பயிற்சி & பாதுகாப்பு உதவி உள்ளிட்டவற்றை இருதரப்பும் செய்துகொள்ள இந்த ஒப்பந்தம் வழி செய்கிறது. உக்ரைனுக்கு எதிரான போரில் ரஷ்யாவுக்கு வட கொரியா துணை நிற்பது குறிப்பிடத்தக்கது.
தமிழக பாஜகவின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் ஓபிசி அணியின் மாநிலச் செயலாளராக பொறுப்பு வகித்து வந்த திருச்சி சூர்யா நீக்கப்பட்டார். அவரைத் தொடர்ந்து, சிந்தனையாளர் பிரிவின் மாநிலப் பார்வையாளர் கல்யாணராமன் அக்கட்சியின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் ஓராண்டுக்கு நீக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மாநிலத் தலைமை பற்றி ஆதாரமன்றி அவதூறு பரப்பியதாக அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
காலையில் எழுந்ததும் சிலவற்றை மறந்தும் பார்க்கக் கூடாதென ஜோதிட சாஸ்திரம் சொல்கிறது. அதாவது, காலையில் எழுந்ததும் நிழலை பார்ப்பது அசுபமாக கருதப்படுகிறது. இதேபோல், காலையில் எழுந்ததும் கழுவாத பாத்திரங்களை கண்டால் அது துரதிர்ஷ்டமாக கருதப்படுகிறது. இது பொருளாதார சிக்கலுக்கும் வழிவகுக்கும். காலையில் எழுந்தவுடன் உடைந்த சிலைகளைக் கண்டால், பிரச்னைக்கு வழிவகுக்கும் என்கிறது ஜோதிட சாஸ்திரம்.
T20 உலகக் கோப்பை தொடரின் சூப்பர்-8 சுற்றில் இன்று, இந்தியா-ஆஃப்கானிஸ்தான் அணிகள் மோதுகின்றன. நடப்பு உலகக் கோப்பை தொடர் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. அந்த வகையில், Bridgetown மைதானத்தில், இரவு 8 மணிக்கு தொடங்கவுள்ள போட்டியில் IND-AFG பலப்பரீட்சை நடத்துகின்றன. லீக் சுற்றில் விளையாடி அனைத்துப் போட்டிகளிலும் தோல்வியையே சந்திக்காத இந்திய அணி, ஆஃப்கானை வீழ்த்தி இன்றைய போட்டியில் வெல்லுமா?
தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று காலை 9.30 மணிக்கு கூடுகிறது. 2024ஆம் ஆண்டின் முதல் கூட்டத்தொடர் கடந்த பிப்ரவரி மாதம் கூடியது. அப்போது, ஆளுநர் ரவி தனது உரையை வாசிக்க மறுத்தார். அதைத் தொடர்ந்து தற்போது 2வது முறையாக கூடும் இந்தக் கூட்டத்தில் நீர்வளம், உயர்கல்வி, நெடுஞ்சாலை, காவல்துறை மீதான மானியக் கோரிக்கை விவாதங்கள் நடைபெற உள்ளன. ஜூன் 29இல் முதல்வர் ஸ்டாலின் உரையுடன் கூட்டத்தொடர் நிறைவடைகிறது.
தேசிய தேர்வு முகமை சார்பில் நடத்தப்பட்ட யுஜிசி நெட் தேர்வை ரத்து செய்வதாக மத்திய கல்வி அமைச்சகம் அறிவித்துள்ளது. உதவிப் பேராசிரியர் & இளநிலை ஆராய்ச்சி நிதியுதவி பெறுவதற்காக தகுதியைத் தீர்மானிப்பதற்காக நடைபெற்ற நெட் தேர்வு இந்தாண்டு OMR சீட் முறையில் நடைபெற்றது. அதில், முறைகேடுகள் நடந்ததாக தேசிய சைபர் குற்றப் பிரிவிலிருந்து தகவல் வந்ததையடுத்து, மத்திய அரசு முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.
Sorry, no posts matched your criteria.