news

News June 20, 2024

தமிழகம் சட்டப்பேரவை கூட்டம் ஒத்திவைப்பு

image

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் நாளைக்கு ஒத்திவைக்கப்பட்டது. இந்த ஆண்டின் 2ஆவது கூட்டத்தொடர், காலை 10 மணிக்கு தொடங்கப்பட்டது. அப்போது, மறைந்த திமுக MLA புகழேந்தி, குவைத் தீ விபத்தில் பலியானவர்களுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து கள்ளக்குறிச்சியில், விஷச் சாராயம் குடித்து பலியானவர்களுக்காக 2 நிமிடம் மெளன அஞ்சலி செலுத்தப்பட்ட பின், பேரவையின் இன்றைய கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது.

News June 20, 2024

மெக்காவில் 68 இந்தியர்கள் உள்பட 922 பேர் பலி

image

சவூதி அரேபியா நாட்டில் முன்னெப்போதும் இல்லாத வெப்பம் வாட்டி வதைக்கிறது. இதனால் மெக்காவிற்கு புனித பயணம் சென்றவர்கள் கடும் அவதிக்கு ஆளாகியுள்ளனர். அங்கு நேற்று வெப்பம் 51.8 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளது. இந்த வெப்பத்துக்கு மெக்கா யாத்திரை சென்ற 300 பேர் நேற்று முன்தினம் உயிரிழந்த நிலையில், நேற்று 622 பேர் பலியாகியுள்ளனர். இதில் இந்தியர்கள் 68 பேரும் அடங்குவர் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

News June 20, 2024

கிரிக்கெட் வியாபாரமாகி விட்டது: அப்ரிடி

image

கிரிக்கெட் விளையாட்டு வியாபாரமாக மாறிவிட்டதாக பாகிஸ்தான் முன்னாள் வீரர் அப்ரிடி கூறியுள்ளார். ஐபிஎல் போன்ற போட்டிகளில் அதிகப்படியான பணம் கிடைப்பதால், வீரர்கள் அதில் விளையாட ஆர்வம் காட்டுவதாகத் தெரிவித்த அவர், எனினும் நாட்டுக்காக விளையாட முடியாத பல வீரர்களுக்கு இது ஒரு மாற்று வாய்ப்பாக உள்ளது என்றார். ஐபிஎல், இங்கி., கவுண்டி தொடர்கள் வீரர்களின் பணக்கஷ்டத்தை தீர்ப்பதாகவும் அவர் தெரிவித்தார்

News June 20, 2024

மதுப் பழக்கத்தில் இருந்து விடுபட சில யோசனைகள்

image

குடி, குடியைக் கெடுக்கும். இந்த பழக்கத்தில் இருந்து விடுபட சில யோசனைகளை மனநல மருத்துவர்கள் அளிக்கின்றனர். *ஏதேனும் பணியைத் திட்டமிட்டு செய்து, தனியே இருக்கும் நேரத்தை குறைக்க வேண்டும் *மது அருந்த வேண்டிய சூழல் வந்தால், லஸ்ஸி, க்ரீன் டீ அருந்தலாம் *யோகா, பிரானயாமா, மெடிடேஷன் மேற்கொள்ளலாம் *மது அருந்தும் காட்சியை காண்பதைத் தவிர்க்கவும் *குடும்பத்தினருடனான நேரத்தை அதிகரிக்கவும்.

News June 20, 2024

கள்ளக்குறிச்சிக்கு செல்லும் உதயநிதி

image

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து பலர் பலியாகியுள்ள நிலையில், அமைச்சர் உதயநிதி அங்கு நேரில் செல்லவுள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக, முதல்வர் ஸ்டாலினுடன் ஆலோசனை மேற்கொண்ட அவர், அதனைத் தொடர்ந்து தற்போது கள்ளக்குறிச்சிக்கு புறப்பட்டுச் செல்கிறார். கோவிந்தராஜன் என்பவரிடம் பாக்கெட் சாராயம் வாங்கிக் குடித்த 35 பேர் இதுவரை உயிரிழந்துள்ள சூழலில் பலரது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது.

News June 20, 2024

தங்கம் விலை சவரனுக்கு ₹80 உயர்வு

image

கடந்த சில நாள்களாக குறைந்து வந்த தங்கத்தின் விலை இன்று சற்று அதிகரித்துள்ளது. அதன்படி, சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ₹80 உயர்ந்து, ஒரு சவரன் ₹53,600க்கும், கிராமுக்கு ₹10 உயர்ந்து, ₹6,700க்கும் விற்பனையாகிறது. சில்லறை வர்த்தகத்தில் வெள்ளி விலை கிராமுக்கு ₹1.50 உயர்ந்து ₹97.10க்கு விற்பனை செய்யப்படுகிறது.

News June 20, 2024

தமிழக சட்டப்பேரவை கூட்டம் தொடங்கியது

image

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்கியது. பல்வேறு துறைகள் மீதான மானியக் கோரிக்கைகள் குறித்து விவாதிக்க இந்தக் கூட்டத்தொடர் கூட்டப்பட்டுள்ளது. இன்று முதல் 22ஆம் தேதி வரை பல்வேறு முக்கிய விஷயங்கள் குறித்து சட்டப்பேரவையில் விவாதம் நடைபெறும். கடைசி நாள் முதல்வர் ஸ்டாலின் உரையுடன் கூட்டத் தொடர் நிறைவடையும். அதன் பிறகு சபாநாயகர் அப்பாவு, தேதி குறிப்பிடாமல் அவையை ஒத்திவைப்பார்.

News June 20, 2024

கள்ளச்சாராய வியாபாரிகளுக்கு மெத்தனால் கிடைப்பது எப்படி?

image

மெத்தனால் உயிருக்கு ஆபத்து விளைவிக்கக் கூடியது என்பதால் அதனை வாங்க உரிமம் வைத்திருப்பது அவசியம். அதுபோக, வாங்கும் மெத்தனாலை எவ்வாறு பயன்படுத்துகிறோம்? எவ்வளவு பயன்படுத்துகிறோம்? போன்ற விவரங்களை பதிவு செய்து பராமரிக்க வேண்டும். இத்தனை கட்டுப்பாடுகள் இருந்தும், பணம் சம்பாதிக்கும் ஆசையில் மெத்தனாலை கள்ளச்சாராய வியாபாரிகளுக்கு தொழிற்சாலை உரிமையாளர்கள் விற்பனை செய்கிறார்கள்.

News June 20, 2024

தமிழகத்தில் பூரண மதுவிலக்கு வாக்குறுதி என்ன ஆனது?

image

ஜெயலலிதா ஆட்சியில் டாஸ்மாக் அனைத்தும் மூடப்பட்டு முழு மதுவிலக்கு அமல்படுத்தப்படும் என வாக்குறுதி அளிக்கப்பட்டது. இதற்கு ஏதுவாக சில கடைகள் மூடப்பட்டன. பிறகு தேர்தலில் திமுகவும் மதுவிலக்கு குறித்து பிரசாரம் செய்தது. இருப்பினும் 2 கட்சிகளும் மதுவிலக்கை அமல்படுத்த சட்டம் கொண்டு வரவில்லை. ஆதலால், இனிமேலும் இந்த விவகாரத்தில் தாமதிக்காமல் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

News June 20, 2024

கள்ளக்குறிச்சி சம்பவம்: விஜய் இரங்கல்

image

கள்ளக்குறிச்சியில் விஷச்சாராயம் குடித்து உயிரிழந்தோர் குடும்பத்திற்கு அனுதாபம் தெரிவித்துள்ள விஜய், உயிரிழப்பு மிகுந்த அதிர்ச்சி, மன வேதனை அளிப்பதாகக் கூறியுள்ளார். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்வதோடு, உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்கள் விரைவில் உடல்நலம் பெற இறைவனைப் பிரார்த்திப்பதாக தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!