news

News June 20, 2024

எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கான 65% இடஒதுக்கீடு ரத்து: ஐகோர்ட்

image

பிஹாரில் எஸ்சி, எஸ்டி, பிற்படுத்தப்பட்டோர், பொருளாதாரத்தில் பின்தங்கியோர் ஆகிய பிரிவினருக்கு கல்வி, வேலைவாய்ப்பில் 65% இடஒதுக்கீடு அளித்து சட்டங்கள் கொண்டு வரப்பட்டன. இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த பாட்னா உயர்நீதிமன்றம், இது அரசியலமைப்புச் சட்டத்தின் 14, 15 மற்றும் 16 ஆகிய பிரிவுகளின் சமத்துவ விதியை மீறுவதாகக் இருக்கிறது என்று கூறி, ரத்து செய்து உத்தரவிட்டது.

News June 20, 2024

கட்சியை விட சுயமரியாதை முக்கியம்: திருச்சி சூர்யா

image

தமிழ்நாடு பாஜகவில் தொடர்ந்து பயணிக்கும் எண்ணம் இல்லை, எனக் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட திருச்சி சிவா தெரிவித்துள்ளார். அண்ணாமலையால் ஈர்க்கப்பட்டு பாஜகவில் சேர்ந்ததாகத் தெரிவித்த அவர், தன் மேல் எடுக்கப்பட்ட நடவடிக்கையால் எந்த வருத்தமும் இல்லை எனக் கூறினார். எப்போதும் அண்ணாமலையின் குடும்பத்தில் ஒருவனாக இருப்பேன் என்றும், கட்சியை விட தனக்கு சுய மரியாதை முக்கியம் எனவும் தெரிவித்தார்.

News June 20, 2024

டிவிட்டர் டிரெண்டிங்கில் #Resign_Stalin

image

கள்ளக்குறிச்சி விஷச்சாராய சம்பவம் ஒட்டுமொத்த தமிழகத்தையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்த சம்பவத்தில், 39 பேர் பலியாகியுள்ள நிலையில், பலருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், விஷச்சாராய மரணத்திற்கு பொறுப்பேற்று முதல்வர் ஸ்டாலின் பதவி விலக வேண்டும் என தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர். மேலும், #Resign_Stalin என்ற ஹேஷ்டேக், டிவிட்டரில் டிரெண்டாகி வருகிறது.

News June 20, 2024

விஷச்சாராய பலி எண்ணிக்கை 39ஆக உயர்வு

image

கள்ளக்குறிச்சியில் விஷச்சாராயம் குடித்து உயிரிழந்தோரின் எண்ணிக்கை 39ஆக அதிகரித்துள்ளது. மேலும் 90க்கும் அதிகமானோர் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். கருணாபுரத்தை சேர்ந்த சுரேஷின் இறுதிச்சடங்கில் பங்கேற்ற 200க்கும் மேற்பட்டோர் விஷச்சாராயம் குடித்ததால் இத்துயரம் நிகழ்ந்துள்ளது. தற்போது அந்த கிராமத்தில் இறுதிச்சடங்களுக்கு வேலை செய்வதற்கு கூட யாரும் இல்லை எனக் கூறி பெண்கள் கண்ணீர் வடிக்கின்றனர்.

News June 20, 2024

காவல் நிலையத்தின் பின்புறமே விஷச்சாரய விற்பனை: இபிஎஸ்

image

விஷச்சாராயம் அருந்தி 35க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தது வேதனையளிப்பதாக இபிஎஸ் தெரிவித்துள்ளார். உயிரிழந்த அனைவருமே மிகவும் ஏழ்மையானவர்கள் நிலையில் இருப்பவர்கள் என்று தெரிவித்த அவர், அதிகாரிகளும், அரசு நிர்வாகமும் விஷச்சாரய விற்பனையை தடுக்கவில்லை என்று குற்றம் சாட்டியுள்ளார். காவல் நிலையத்தின் பின்புறமே விஷச்சாரய விற்பனை தங்கு தடையின்றி நடைபெற்றுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

News June 20, 2024

மொபைல் எண், ஆவணமின்றி ஆதாரில் படம் மாற்றும் வசதி

image

ஆதாரில் உள்ள படத்தை எப்படி மாற்றலாம் எனத் தெரிந்து கொள்வோம். அருகிலுள்ள இ-சேவை மையம் சென்று, விண்ணப்பத்தை பெற்று, ஆதார் எண் உள்ளிட்ட விவரத்தை நிரப்பியளிக்க வேண்டும். அதை சரிபார்த்த பிறகு, பயோ மெட்ரிக் எனப்படும் விரல் ரேகை பதியப்படும். பிறகு உங்களை படம் எடுத்து ஊழியர் பதிவேற்றம் செய்வார். விரல்ரேகை வைப்பதால் மொபைல் எண், அடையாள ஆவணம் தேவையில்லை. 90 நாள்களில் படம் மாறிவிடும்.

News June 20, 2024

அதிகாரிகளை தண்டிக்க வேண்டும்: வேல்முருகன்

image

விஷச்சாராய விற்பனையை தடுக்கத்தவறிய காவல்துறை அதிகாரிகளை கைது செய்ய வேண்டும் என தவாக தலைவர் வேல்முருகன் வலியுறுத்தியுள்ளார். அதிகாரிகளின் துணை இல்லாமல் சாராய விற்பனையில் யாரும் ஈடுபட முடியாது என்று கூறிய அவர், தவறு செய்த அதிகாரிகள் அனைவருக்கும் கடுமையான தண்டனை தர வேண்டும் என்றார். முழுமையான மதுவிலக்கை தமிழகத்தில் அமல்படுத்துவதே இதற்கு சரியான தீர்வு எனவும் அவர் குறிப்பிட்டார்.

News June 20, 2024

NEET தேர்வையும் ரத்து செய்ய வேண்டும்

image

UGC-NET தேர்வைப்போல, 2024 NEET நுழைவுத் தேர்வையும் ரத்து செய்ய வேண்டும் என மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். உதவி பேராசிரியர் பணிகளுக்காக ஜூன் 18இல் நடத்தப்பட்ட UGC-NET தேர்வில் முறைகேடு நடந்ததால், அந்த தேர்வை நேற்று மத்திய கல்வி அமைச்சகம் ரத்து செய்தது. இதேபோல, நடப்பாண்டு NEET தேர்விலும் குளறுபடி நிகழ்ந்துள்ளதால், அதனையும் ரத்து செய்துவிட்டு புதிய தேர்வு நடத்த வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

News June 20, 2024

தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம்: அண்ணாமலை

image

கள்ளக்குறிச்சி சம்பவம் தொடர்பாக திமுக அரசை கண்டித்து நாளை மறுநாள், தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அண்ணாமலை தெரிவித்துள்ளார். இது குறித்து X தளத்தில் பதிவிட்டுள்ள அவர், தமிழகத்தில் கடந்த 2 ஆண்டுகளில் 60 பேர் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்துள்ளதாகக் குற்றம்சாட்டியுள்ளார். மேலும் திமுக ஆட்சி, தமிழகத்தை 40 ஆண்டுகள் பின்நோக்கி இழுத்துச் சென்றுள்ளதாகவும் அவர் விமர்சித்துள்ளார்.

News June 20, 2024

உயர்நீதிமன்றத்தில் அதிமுக முறையீடு

image

கள்ளக்குறிச்சி சம்பவம் தொடர்பாக, சென்னை உயர்நீதிமன்றத்தில் அதிமுக முறையீடு செய்துள்ளது. விஷச்சாராயம் குடித்ததில் இதுவரை 37 பேர் பலியான நிலையில், நூற்றுக்கும் மேற்பட்டோர் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சையில் உள்ளனர். இந்த விவகாரத்தில் நீதிமன்றம் தலையிட்டு உடனடி நிவாரணம் அளிக்க அதிமுக கோரிக்கை விடுத்துள்ளது. இந்த மனு நாளை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என என ஐகோர்ட் தெரிவித்துள்ளது.

error: Content is protected !!