India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கள்ளக்குறிச்சியில் 35க்கும் மேற்பட்டோர் உயிரிழக்க காரணமான மெத்தனால் எங்கிருந்து கிடைத்தது? என்று கண்டுபிடிக்க போலீசாருக்கு முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். மெத்தனால் இருப்பை முழுமையாகக் கண்டறிந்து அவற்றை முற்றிலுமாக அழிக்க வேண்டும் என்று வலியுறுத்திய அவர், சாராய விற்பனையில் ஈடுபட்ட அனைவரையும் கைது செய்யும்படி கேட்டுக் கொண்டார். இந்த வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரிக்கின்றனர்.
ATMஇல் பணம் வராதபோதும், வங்கிக் கணக்கில் சில நேரம் அத்தொகை எடுக்கப்பட்டிருக்கும். பொதுவாக அப்பணம், சில மணி நேரத்தில் திருப்பி வரவு வைக்கப்பட்டுவிடும். இருப்பினும், ATM ரசீதை வைத்து, வாடிக்கையாளர் மைய எண்ணில் புகார் அளிக்க வேண்டும். அப்போது புகாரை பதிந்து, டிராக் எண் தரப்படும். பின்னர் 5 நாள்களில் வரவு வைக்கப்படும். இல்லையெனில் தாமதமாகும் ஒவ்வொரு நாளும் ரூ.100 அளிக்க வங்கி கடமைப்பட்டுள்ளது.
திராவிட மாடல் ஆட்சி தமிழகத்தை போதையில் தள்ளாடுகிற மாடலாக இருப்பதாக பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் விமர்சித்துள்ளார். அரசின் கவனக்குறைவு, அரசே பொதுமக்களை கொலைச் செய்வதற்கு ஒப்பாக இருப்பதாக குற்றம் சாட்டிய அவர், கஞ்சா போதையால் தமிழகம் தள்ளாடி வரும் நிலையில், தற்போது விஷச்சாராயமும் இணைந்துள்ளது என்றார். டாஸ்மாக் மூலம் விதவைகளை உருவாக்கும் மாடலாக, திராவிட மாடல் அரசு உள்ளதாகவும் சாடினார்.
கள்ளக்குறிச்சியில் விஷச்சாராயத்தால் உயிரிழந்தோரின் குடும்பத்திற்கு தமிழக அரசு ₹10 லட்சம் நிவாரணம் அறிவித்துள்ளது. இந்நிலையில், பாதிக்கப்பட்டவர்களை நேரில் சென்று சந்தித்த இபிஎஸ், உயிரிழந்தோரின் குடும்பத்திற்கு ₹10 லட்சம் இழப்பீடு போதாது, ₹25 லட்சம் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். அத்துடன், உயிரிழந்தோரின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்க வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.
நாட்டு மக்கள், தனியார் நிறுவனங்கள் செலுத்தும் வருமான வரியை ஆய்வு செய்து, அதை உறுதிப்படுத்துவது வருமான வரித்துறையினரின் கடமையாகும். இதில் ஏதேனும் விதிமீறல் நடந்திருப்பது தெரிய வந்தால், அதிகாரிகளுக்கு கைது செய்யும் அதிகாரத்தை 1961ஆம் ஆண்டு வருமான வரிச் சட்டம் அளித்துள்ளது. அதேநேரத்தில், கைது நடவடிக்கைக்கு முன்பு நோட்டீஸ் அனுப்பியிருக்க வேண்டும் எனவும் அந்தச் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கள்ளக்குறிச்சி விஷச்சாராய சம்பவம் தமிழகத்தையே உலுக்கியுள்ளது. இந்த விவகாரத்தில் வியாபாரிகள்-திமுகவினர் இடையே தொடர்பு இருப்பதாக அன்புமணி குற்றம்சாட்டியுள்ளார். கல்வராயன் மலையில் சாராயம் காய்ச்சி பல பகுதிகளுக்கு அனுப்பப்படுவதாகக் குறிப்பிட்டுள்ள அவர், வியாபாரிகளை காவல்துறை கைது செய்தாலும், அமைச்சர் எ.வ.வேலு, MLA வசந்தம் கார்த்திகேயனின் ஆதரவாளர்கள் அவர்களை விடுதலை செய்ய வைப்பதாக விமர்சித்துள்ளார்.
தமிழகத்தில் இன்று 8 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசி, நெல்லை, குமரி உள்ளிட்ட மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. சென்னையில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், ஒருசில பகுதிகளில் இரவு வேளையில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் கணிக்கப்பட்டுள்ளது.
விவரங்களை வரிசையாக அளித்து, சரிபார்த்து உறுதி செய்தபிறகு ஆன்லைனில் கட்டணம் செலுத்த வேண்டும். பிறகு, நிரப்பப்பட்ட விண்ணப்பத்தை டவுன்லோடு செய்து பத்திரமாக வைத்துக் கொள்ள வேண்டும். இதையடுத்து உங்களுக்கான ஹால் டிக்கெட்டை TNPSC அனுப்பி வைக்கும். அதில் கூறப்பட்டுள்ள தேதியில் தேர்வு மையம் சென்று குரூப்2, குரூப் 2ஏ தேர்வை எழுதலாம். தேர்வில் வெற்றி பெற Way2news-இன் வாழ்த்துகள்.
விவரங்களை நிரப்பி, புகைப்படம், கையொப்பம், புகைப்படத்தை பதிவேற்ற வேண்டும். புகைப்படம் சமீபத்தில் எடுத்ததாக இருப்பது நல்லது. அடுத்து விண்ணப்பிப்பவரின் விவரங்கள் (Applicant details) பகுதியில் One time Registration-ல் நீங்கள் கொடுத்த விவரம் இருக்கும். அதை சரிபார்க்கவும். அடுத்து தொடர்பு விவரங்கள் (Communication Details) கேட்கப்படும். அது One time Registration-ல் இருந்து தானாக நிரப்பப்பட்டிருக்கும்.
<
Sorry, no posts matched your criteria.