India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
உலகளவில் மாசுபாடு நாளுக்கு நாள் அதிகரித்தவண்ணம் உள்ளது. இந்நிலையில், 2021ஆம் ஆண்டில் உலகம் முழுவதும் காற்று மாசுபாட்டால் 81 லட்சம் பேர் உயிரிழந்தது ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது. அமெரிக்காவை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் HEI என்ற அமைப்பு யுனிசெப் அமைப்புடன் இணைந்து ஆய்வை மேற்கொண்டது. அதில், அதிகபட்சமாக இந்தியாவில் 21 லட்சம் பேரும், சீனாவில் 23 லட்சம் பேரும் உயிரிழந்தது தெரியவந்துள்ளது.
தமிழ்நாடு மனித உரிமைகள் ஆணைய தலைவராக கேரளா உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி எஸ்.மணி குமாரை நியமித்து ஆளுநர் ரவி உத்தரவிட்டுள்ளார். பதவியேற்ற நாளிலிருந்து மூன்று ஆண்டுகள் அல்லது மணி குமாரின் 70வது வயது வரை இந்த பதவியில் தொடர்வார் என அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது மனித உரிமைகள் ஆணைய தலைவராக ஓய்வுபெற்ற நீதிபதி பாஸ்கரன் உள்ளார்.
விஷச்சாராயம் அருந்தி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை சந்திக்க கள்ளக்குறிச்சி செல்கிறார் தவெக தலைவர் விஜய். அவர் ஏற்கெனவே சென்னையில் இருந்து புறப்பட்டு விட்டதாக தகவல் வெளியாகியிருக்கிறது. மேலும், மருத்துவமனையில் அனுமதிக்கப்பவர்களை நேரில் சந்தித்து அவர் ஆறுதல் தெரிவிக்கவுள்ளார். இந்த மரணங்களுக்கு அரசின் அலட்சியமே காரணம் என்று விஜய் அறிக்கை வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
கள்ளக்குறிச்சி விஷச்சாராய மரணங்கள் தொடர்பாக சிபிஐ விசாரணை கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் அதிமுக வழக்கு தொடுத்துள்ளது. விஷச்சாராயம் குடித்து உயிரிழந்தோரின் உடல்களை நேர்மையான முறையில் பிரேத பரிசோதனை செய்ய உத்தரவிட வேண்டுமெனவும் அந்த மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது. அதிமுக தரப்பில் தொடரப்பட்ட இந்த வழக்கு நாளை மறுநாள் விசாரணைக்கு வரவுள்ளது குறிப்பிடத்தக்கது.
மும்பை ஐஐடியில் ராமாயணத்தை கேலி செய்யும் வகையில், நாடகம் அரங்கேற்றிய 4 மாணவர்களுக்கு தலா ₹1.2 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. ‘பெண்ணியத்தை ஊக்குவித்தல்’ என்ற போர்வையில், இந்து மத கலாச்சாரத்தையும், கடவுளையும் கேலி செய்து நாடகத்தை அரங்கேற்றியதாக மாணவர்கள் சிலர் பல்கலைக்கழக நிர்வாகத்தில் புகார் அளித்தனர். அதன் அடிப்படையில், நாடகம் அரங்கேற்றிய மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
T20 உலகக் கோப்பையில் இன்று சூப்பர் 8 சுற்று போட்டியில் இந்திய அணி ஆப்கானிஸ்தானை எதிர்கொள்கிறது. இந்தப்போட்டியில் முகமது சிராஜுக்குப் பதிலாக, குல்தீப் யாதவ் களமிறங்க வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. போட்டி நடைபெறும் மைதானம் சுழற்பந்து வீச்சாளர்களுக்கு ஏற்றதாக இருக்கும் என்பதால் இந்த மாற்றம் செய்யப்படுவதாகத் தெரிகிறது. டி20 WC தொடரில் குல்தீப் இதுவரை ஒரு போட்டியில் கூட விளையாடவில்லை.
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத சரிவை சந்தித்துள்ளது. ஒரு டாலருக்கு 83.67 ரூபாய் என்று இன்று வர்த்தகம் நடைபெற்றதே இதுவரையிலான குறைந்த மதிப்பு ஆகும். உலக அளவில் டாலர் வலிமை பெற்று வருவதே இதற்கு காரணம் என்று பொருளாதார வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். ரூபாயை சரிவில் இருந்து மீட்க ரிசர்வ் வங்கி நடவடிக்கைகள் எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கைகள் ஏன் நடுங்குகின்றன என்பதற்கு மருத்துவத்தில் காரணம் கூறப்பட்டுள்ளது. உடல் இயக்கத்தைக் கட்டுப்படுத்தும் மூளையின் மத்தியில் இருக்கும் தாலமஸின் நரம்பணுக்களில் ஏற்படும் பிரச்னையால் இந்நடுக்கம் ஏற்படுவதாகவும், இதுபோல் நடுக்கம் ஏற்பட்டால், உடலியக்க சர்க்யூட்டை சரியான முறையில் செயல்பட வைக்கவேண்டும். இதற்கு, நரம்பணுக்கள் செயல்படும் முறையைச் சீராக்க வேண்டும் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.
விஷச்சாராயம் அருந்தி அனுமதிக்கப்பட்ட 19 பேரில் 3 பேர் உயிரிழந்துள்ளதாகவும், மிஞ்சியுள்ள 16 பேர் கவலைக்கிடமாக இருப்பதாகவும் ஜிப்மர் மருத்துவமனை தெரிவித்துள்ளது. கவலைக்கிடமாக உள்ளோரில் 10 பேருக்கு வெண்டிலேட்டர் கருவி பொருத்தப்பட்டு, சிகிச்சை அளிக்கப்படுவதாகவும் விளக்கமளித்துள்ளது. மேலும், சேலம் மருத்துவமனையில் 24 பேர் கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை அதிகரிக்குமென அஞ்சப்படுகிறது.
கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து இதுவரை 38 பேர் உயிரிழந்துள்ளதாக அமைச்சர் எ.வ.வேலு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர், மனித உயிர்களை காக்க தமிழக அரசு முனைப்புடன் செயல்படுவதாக தெரிவித்துள்ளார். பாதிக்கப்பட்டவர்களை காப்பாற்ற உரிய சிகிச்சை அளிக்கப்படுவதாகவும், இந்த சம்பவத்தை பாடமாக எடுத்து தமிழ்நாடு முழுவதும் அரசு ஆய்வு மேற்கொள்ளவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
Sorry, no posts matched your criteria.