India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு, டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றம் ஜாமின் வழங்கி உத்தரவிட்டுள்ளது. மக்களைத் தேர்தல் பிரசாரத்திற்காக இடைக்கால ஜாமினில் வெளியே வந்த கெஜ்ரிவால், பரப்புரை முடிந்து ஜூன் 2ஆம் தேதி திகார் சிறையில் சரணடைந்ததை அடுத்து, ஜாமின் கோரி மனுத் தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், அவருக்கு ஜாமின் வழங்கியுள்ளனர்.
கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்த சேகரின் மகன் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் எஃப்ஐஆர் பதிவு செய்துள்ளனர். அதில், கண்ணுக்குட்டி, அவரது மனைவி விஜயா மற்றும் தாமோதிரன் ஆகியோர் ஊர் சுடுகாட்டில் சாராயம் விற்று வந்ததாகவும், 18ஆம் தேதி அவர்களிடம் சாராயம் வாங்கிக் குடித்ததால் வயிறு வலியால் துடித்த சேகரன் மற்றும் பிரவின், சுரேஷ் உள்ளிட்டோர் இறந்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
கள்ளக்குறிச்சி விஷச்சாராய மரணம் குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று அண்ணாமலை அமித்ஷாவுக்கு கடிதம் எழுதியுள்ளார். கடந்த இரண்டாண்டுகளில் தமிழகத்தில் விஷச்சாராயம் குடித்து 60க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருப்பதாகவும் காவல்துறைக்கு தெரிந்தே இவை நடப்பதாகவும் கடிதத்தில் அவர் எழுதியுள்ளார். கள்ளச்சாராய விற்பனையில் திமுகவுக்கு தொடர்பு உள்ளது என்று அண்ணாமலை குறிப்பிட்டுள்ளார்.
டி20 உலகக்கோப்பையில் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்றுள்ள இந்திய அணி கேப்டன் ரோஹித் ஷர்மா பேட்டிங் தேர்வு செய்துள்ளார். இப்போட்டி நடைபெறும் மைதானம் ஸ்பின்னுக்கு சாதகமாக இருக்கும் என்பதால் சிராஜுக்குப் பதில் குல்தீப் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். அணி: ரோஹித், கோலி, ரிஷப் பந்த், சூர்யகுமார், டூபே, பாண்டியா, ஜடேஜா, அக்ஷர் படேல், குல்தீப், அர்ஷ்தீப் சிங், பும்ரா.
கள்ளக்குறிச்சியில் விஷச்சாராயம் குடித்த 39 பேர் உயிரிழந்த நிலையில், மருத்துவமனையில் பலர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில், இந்த வழக்கில் தலைமறைவாக இருந்த சாராய வியாபாரி சின்னத்துரையை சிபிசிஐடி போலீசார் கைது செய்துள்ளனர். அவரிடம் பின்னணியில் உள்ளவர்கள் குறித்து விசாரணை நடப்பதாகக் கூறப்படுகிறது. இவர் கள்ளக்குறிச்சியைச் சேர்ந்த கோவிந்தராஜ், தாமோதரன் ஆகியோருக்கு சாராயம் விற்றுள்ளார்.
கள்ளக்குறிச்சியில் விஷச்சாராயம் குடித்து இறந்தவர்களின் குடும்பத்தினரை பார்த்து ஒட்டுமொத்த தமிழகமும் கலங்கி நிற்கிறது. கணவன், தந்தை, சகோதரனை இழந்த குடும்பத்தினர் ஆதரவற்று நிற்கின்றனர். அதில், 2 சிறுவர்கள் சிலுவையை சுமந்து தந்தையின் இறுதிச் சடங்கில் கலந்துகொண்ட காட்சி கண்ணீரை வரவழைக்கிறது. தற்போது வரை 39 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 60க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மும்பையை சேர்ந்த அழகு சாதன நிறுவனத்தில், காலை 9.30 மணிக்குள் பணிக்கு வராமல், தாமதமாக வரும் ஊழியர்கள் ₹200 அபராதம் செலுத்த வேண்டும் என அந்நிறுவனத்தின் உரிமையாளர் கவுஷல் ஷா உத்தரவிட்டுள்ளார். இந்த தொகை பணியாளர்களுக்கு உணவு வழங்க பயன்படுத்தப்படும் என அறிவித்துள்ளார். இந்நிலையில், கடந்த 15 நாள்களில் தாமதமாக வந்ததற்காக தான் ₹1,000 அபராதம் கட்டியுள்ளதாக கவுஷல் ஷா தனது X பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்ததில், உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களை தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். அப்போது, உடல்நலம் பாதிக்கப்பட்டவரின் மனைவி விஜய்யை கட்டி கதறிய காட்சி காண்போரை கலங்க செய்தது. அவருக்கு ஆறுதல் கூறிய விஜய், தேவையான உதவிகளை செய்வதாக கூறியுள்ளார்.
தமிழகத்தில் இரவு 10 மணி வரை வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, அரியலூர், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, தென்காசி ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
விமான போக்குவரத்து துறையில் பெண் ஊழியர்களின் பிரதிநிதித்துவத்தை அதிகரிக்க வேண்டுமென, DGCA அறிவுறுத்தியுள்ளது. விமானத் துறையில் 2025ஆம் ஆண்டுக்குள் 25% பெண்களை பணியில் அமர்த்த சிவில் விமான அமைச்சகம் திட்டமிட்டுள்ளது. அதன் அடிப்படையில், பாலின சமத்துவத்தை கடைப்பிடிக்கும்படி விமான நிறுவனங்களுக்கு சிவில் விமான போக்குவரத்து ஒழுங்குமுறை இயக்குநரகம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.
Sorry, no posts matched your criteria.