India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ரயில்பெட்டி இணைப்புத் தொழிற்சாலையில் காலியாக உள்ள 1,010 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி நாளாகும். Apprentices (கார்பெண்டர், எலக்ட்ரீசியன், வெல்டர், ஃபிட்டர், பெயிண்டர் உள்ளிட்ட பிரிவுகளில்) பணிகளில் சேர ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். கல்வி தகுதி: 10, 12ஆம் வகுப்பு, NCVT பயிற்சி. வயது வரம்பு: 15 – 24. விருப்பமுள்ளவர்கள் <
ஒடிசாவைச் சேர்ந்த பாஜக எம்.பி பர்த்ருஹரி மஹ்தாபை மக்களவையின் தற்காலிக சபாநாயகராக குடியரசுத் தலைவர் நியமித்துள்ளார். சபாநாயகரை தேர்ந்தெடுக்கும் வரை சுரேஷ் கொடிக்குன்னில், ராஜுதேவர் பாலு, ராதா மோகன் சிங், ஃபக்கன் சிங் குலாஸ்தே மற்றும் சுதிப் பந்தோபாத்யாய் ஆகியோர் இடைக்கால சபாநாயகருக்கு உதவியாக இருப்பார்கள் என நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் கிரண் ரஜிஜூ அறிவித்துள்ளார்.
டி20 உலகக்கோப்பை தொடரில் இன்று நடைபெற்று வரும் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி அடுத்தடுத்து விக்கெட்டை பறிகொடுத்து தடுமாறி வருகிறது. தொடக்க வீரர் ரோஹித் 8 ரன்களில் அவுட்டாகி நடையை கட்டிய நிலையில் ரிஷப் பண்ட் 20 ரன்களிலும், கோலி 24 ரன்களிலும் வெளியேறினார். இந்திய அணி தற்போதுவரை 8.3 ஓவரில் 3 விக்கெட்டை இழந்து 62 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளது.
மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு ஏடிஜிபி மகேஷ் குமார் அகர்வால், சென்னை மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு எஸ்.பி., செந்தில்குமார் ஆகியோர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளனர். மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு ஏடிஜிபி பொறுப்பு சட்டம் ஒழுங்கு ஏடிஜிபிக்கு வழங்கப்பட்டுள்ளது. மேலும், கீழ்ப்பாக்கம் காவல்துறை ஆணையர் ஜி.கோபி, சென்னை மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு எஸ்.பியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
நீட் தேர்வின் வெளிப்படைத் தன்மையில் எந்தவித சமரசமும் கிடையாது என மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார். நீட் தேர்வு விவகாரத்தில் மாணவர்கள் நலனே முக்கியம்; அதை காக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்கும் எனக் கூறிய அவர், தேசிய தேர்வு முகமையின் செயல்பாடு குறித்து ஆய்வு நடத்த உயர்மட்டக்குழு அமைக்கப்படும்; தேவைப்பட்டால் தேசிய தேர்வு முகமை மீது நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்துள்ளார்.
வங்கதேசம், நியூசிலாந்து, இங்கிலாந்து ஆகிய அணிகள் செப்., முதல் பிப் 2025 வரை இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு T20, டெஸ்ட், ஒருநாள் போட்டிகளில் விளையாட உள்ளன. இதில் BANக்கு எதிரான முதல் டெஸ்ட் (செப்.,19-23) மற்றும், ENGக்கு எதிரான முதல் T20 (2025 ஜன., 22) சென்னையில் நடைபெற உள்ளது. BAN – 2 டெஸ்ட், 3 T20, NZ -3 டெஸ்ட், ENG – 5 T20, 3 ODI போட்டிகளில் விளையாட உள்ளது.
கள்ளக்குறிச்சியில் விஷச்சாராயம் குடித்த 39 பேர் உயிரிழந்ததையடுத்து தமிழகம் முழுவதும் தீவிர சோதனை நடைபெற்று வருகிறது. அதனைத் தொடர்ந்து, கோவையில் கள்ளச்சாராயம் விற்ற 98 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து 203 லிட்டர் கள்ளச்சாராயம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதுபோன்று தமிழகம் முழுவதும் திடீர் சோதனை நடத்த டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார்.
டி20 உலகக் கோப்பையில் இன்று ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக விளையாடும் இந்திய அணி வீரர்கள் கையில் கருப்பு பேண்டு அணிந்து விளையாடி வருகின்றனர். இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் டேவிட் ஜான்சன் பெங்களூருவில் தங்கியிருந்த அடுக்குமாடி குடியிருப்பின் பால்கனியில் இருந்து கீழே விழுந்து இன்று உயிரிழந்தார். அவருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக இந்திய வீரர்கள் கருப்பு பேண்டு அணிந்துள்ளனர்.
கள்ளக்குறிச்சி விஷச்சாராய மரணங்கள் விவகாரத்தில் தமிழக அரசை கண்டித்து, ஜூன் 24ஆம் தேதி தமிழகம் முழுவதும் அதிமுக சார்பில் போராட்டம் நடைபெறும் என்று இபிஎஸ் அறிவித்துள்ளார். கள்ளச்சாராய புழக்கத்தை திமுக அரசு கட்டுப்படுத்த தவறியதாகவும், உயிரிழப்புக்கு பொறுப்பேற்று முதல்வர் ஸ்டாலின் பதவி விலக வேண்டும் எனவும் வலியுறுத்தி, அனைத்து மாவட்டங்களிலும் இந்த போராட்டம் நடைபெறவுள்ளது.
நீட் தேர்வு ரத்து செய்யப்படாது என்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். நீட் தேர்வில் ஏதோ ஒரு பகுதியில் நடந்த முறைகேடு காரணமாக, நேர்மையாக தேர்வெழுதிய லட்சக்கணக்கான மாணவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தக் கூடாது எனக் கூறிய அவர், உயர்மட்டக் குழு அளிக்கும் பரிந்துரைக்கு பிறகு, தேசிய தேர்வு முகமை நடைமுறைகள் மாற்றியமைக்கப்படும் எனத் தெரிவித்தார்.
Sorry, no posts matched your criteria.