India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
போஸ்ட் SMS மோசடிகளில் இருந்து மக்கள் கவனமாக இருக்குமாறு PIB எச்சரித்துள்ளது. இது தொடர்பாக Xஇல் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “தபால் நிலையத்தில் இருந்து உங்களுக்கு ஒரு பேக்கேஜ் வந்துள்ளது. 48 மணி நேரத்திற்குள் முகவரியை தெரியப்படுத்தவும். இல்லாவிட்டால் திருப்பி அனுப்பப்படும்” என போலியான லிங்குகள் அனுப்பப்படுவதாகவும், அதுபோன்ற லிங்கை கிளிக் செய்து ஏமாற வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கள்ளக்குறிச்சி விவகாரத்தை சிபிஐ விசாரணைக்கு மாற்றக்கோரி அதிமுக தொடர்ந்த வழக்கு இன்று உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவுள்ளது. கள்ளச்சாராயம் பற்றி ஏற்கனவே புகார் அளித்தும் மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று, உயர் நீதிமன்றத்தில் அதிமுக சார்பில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை கள்ளச்சாராயத்திற்கு 49 பேர் பலியாகியுள்ளனர். 100க்கும் மேற்பட்டவர்கள் சிகிச்சையில் உள்ளனர்.
கள்ளக்குறிச்சியில் விஷச்சாராயம் குடித்து உயிரிழந்தோர் எண்ணிக்கை 49 ஆக உயர்ந்துள்ளது. தொடர்ந்து, 100க்கும் மேற்பட்டோர் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். கள்ளக்குறிச்சி மருத்துவமனையில் 27 பேரும், சேலம் மருத்துவமனையில் 15 பேரும், விழுப்புரம் மருத்துவமனையில் 4 பேரும், புதுச்சேரி ஜிப்மரில் 3 பேரும் உயிரிழந்துள்ளனர். மேலும், பலர் கவலைக்கிடமாக உள்ளதால் உயிரிழப்புகள் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.
‘யோகா’ என்ற சமஸ்கிருத சொல் ‘ஓகம்’ என்ற தமிழ் சொல்லை அடிப்படையாக கொண்டது. ஓகம் என்றால், ஒன்று மற்றொன்றுடன் கலத்தல் என பொருள். ஐந்து புலன்கள், சூட்சும உடல், மனம் முதலியவை ஒன்றிணைந்து செய்யப்படுவதே ஓகம். உடலின் ஆற்றலை வெளிமுகமாக வீணடிக்காமல், உள்முகமாகத் திருப்பி ஒடுக்க சித்தர்கள் ஓக சூட்சுமத்தை மக்களுக்கு சொல்லிக்கொடுத்தனர். எனவே ஆரோக்கியமான, அமைதியான வாழ்வைப் பெற ஓகக்கலையை பயில்வோம்!
நீட் தேர்வு முறைக்கேட்டைக் கண்டித்து நாடு முழுவதும் இன்று காங்கிரஸ் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. மாநிலத் தலைநகரங்களில் முக்கிய நிர்வாகிகள் தலைமையில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நீட் தேர்வுக்கு எதிராக நாடு முழுவதும் குரல்கள் வலுத்துள்ள நிலையில், காங்கிரஸ் இந்த போராட்டத்தை முன்னெடுத்துள்ளது. அத்துடன், நாடாளுமன்றத்திலும் இவ்விவகாரத்தை கையில் எடுக்க உள்ளது.
டி20 உலகக் கோப்பை தொடரின் சூப்பர் 8 சுற்றின் 3ஆவது போட்டிக்கு முன்பாக சர்வதேச 20 ஓவர் போட்டியில் அதிக ரன்கள் குவித்தவர்களின் பட்டியலில் விராட் கோலியும், ரோஹித் ஷர்மாவும் 2ஆவது இடத்தில் சமநிலையில் (4,042 ரன்) இருந்தனர். இப்போது கோலி (4,066 ரன்), ரோஹித் ஷர்மாவை (4,050 ரன்) முந்தியுள்ளார். முதலிடத்தை பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் (4,145 ரன்) தக்கவைத்து இருக்கிறார்.
மகாவிஷ்ணுவின் அவதாரமாக தன்வந்திரி பகவானை விஷ்ணுதர்மோத்தர புராணம் போற்றுகிறது. அத்தகைய தன்வந்திரி பெருமாளை செவ்வாய்க்கிழமை தோறும் பாலபிஷேகம் செய்து, செவ்வரளி மாலை சாற்றி, சுக்குப்பொடியுடன் நாட்டுச் சர்க்கரை கலந்து நிவேதனம் செய்து, இலுப்ப எண்ணெய் தீபமேற்றி, 12 முறை வலம் வந்து, ஸ்ரீதன்வந்திரி பகவான் மந்திரத்தை 21 முறை பாடி வழிபட்டால் தீராத நோய்கள் தீரும் என்பது ஐதீகம்.
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் NDA கூட்டணிக்கு ஆதரவு அளிப்பதாக, அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுத் தலைவர் ஓபிஎஸ் தெரிவித்துள்ளார். சென்னை மயிலாப்பூரில் நடைபெற்ற மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் பேசிய அவர், அதிகாரம், ஆணவம்தான் மக்களவைத் தேர்தலில் அதிமுக டெபாசிட் இழக்க காரணம் என விமர்சித்துள்ளார். மேலும், தமிழகத்தில் கள்ளச்சாராயம் ஆறாக பெருக்கெடுத்து ஓடுவதாக குற்றம்சாட்டியுள்ளார்.
*விஷ சாராய சாவுக்கு பொறுப்பேற்று முதல்வர் ஸ்டாலின் ராஜினாமா செய்ய வேண்டும் – இபிஎஸ்
*பிரதமர் மோடி கான்வாய் மீது செருப்பு வீசிய சம்பவம் கண்டிக்கத்தக்கது – ராகுல்காந்தி
*நேட்டோவின் பொதுச் செயலாளராக நெதர்லாந்து பிரதமர் மார்க் ருட்டே தேர்வு
*மலாவி, ஜிம்பாப்வே நாடுகளுக்கு 2,000 டன் அரிசி ஏற்றுமதி செய்ய மத்திய அரசு அனுமதி
*ஆப்கன் அணிக்கு எதிரான சூப்பர் 8 சுற்றின் 3ஆவது போட்டியில் இந்திய அணி வென்றது.
கள்ளக்குறிச்சியில் விஷ சாராயம் குடித்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை மதிமுக எம்.பி. துரை வைகோ நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்துள்ளார். மேலும், பாதிக்கப்பட்டவர்களுக்கு அளித்து வரும் சிகிச்சை குறித்து துரை வைகோ மருத்துவர்களிடம் கேட்டறிந்தார். இதுவரை 40 பேர் உயிரிழந்த நிலையில், 60-க்கும் மேற்பட்டோர் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
Sorry, no posts matched your criteria.