India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மெத்தனால் ரத்தத்தில் கலந்தால், வாழ்நாள் முழுவதும் தாக்கத்தை உண்டாக்கும் என மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர். ஒருவர் அருந்தும் சாராயத்தில் 10 மி.லி. மெத்தனால் இருந்தால் பார்வை பறிபோகும், 40 மி.லி. இருந்தால் உயிரிழப்பு ஏற்படும் எனக் கூறியுள்ள மருத்துவர்கள், ரத்தத்தில் ஒருமுறை மெத்தனால் கலந்துவிட்டால் நரம்பு மண்டல பாதிப்புகள், நடுக்குவாதம் போன்றவை வாழ்நாள் முழுவதும் நீடிக்கும் என எச்சரித்துள்ளனர்.
வார இறுதி மற்றும் பவுர்ணமியையொட்டி சென்னையில் இருந்து இன்றும், நாளையும் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது. அதன்படி, கிளாம்பாக்கத்தில் இருந்து இன்று தி.மலை, திருச்சி, மதுரை, நெல்லை, குமரி, சேலம், கோவை உள்ளிட்ட நகரங்களுக்கு 600 சிறப்பு பேருந்துகளும், நாளை 410 பேருந்துகளும் இயக்கப்படுகின்றன. இதுதவிர வழக்கமான பேருந்துகளும் செயல்பாட்டில் இருக்கும்.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான சூப்பர் 8 போட்டியில் வங்கதேச அணி 140/8 ரன்களை எடுத்துள்ளது. முதலில் களமிறங்கிய வங்கதேசம், ஆரம்பம் முதலே நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. அந்த அணியின் நஜ்முல் ஹொசைன் சாண்டோ 41, டவ்ஹித் ஹ்ரிடோய் 40 ரன்களை எடுத்தனர். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் அவுட் ஆனார்கள். ஆஸி., அணியின் பாட் கம்மின்ஸ் மிகச் சிறப்பாக பந்து வீசி வங்கதேசத்தின் 3 முக்கிய வீரர்களை வெளியேற்றினார்.
தெலங்கானாவில் சோப்தண்டி காங்கிரஸ் எம்எல்ஏ மெடிப்பள்ளி சத்யத்தின் மனைவி ரூபாதேவி தற்கொலை செய்து கொண்டார். அல்வால் பகுதியில் உள்ள வீட்டில் தற்கொலை செய்துகொண்ட அவர், பள்ளி ஆசிரியராக பணியாற்றி வந்துள்ளார். இச்சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கணவன், மனைவி இடையே கடந்த சில நாள்களாக கருத்து வேறுபாடு இருந்ததாகக் கூறப்படுகிறது.
அரசுப் பள்ளி மாணவர்களுக்கு NEET, JEE தேர்வுக்கான இலவச பயிற்சி வழங்குவது குறித்த வழிமுறைகளை பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ளது. அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளில் +1, +2 வகுப்பு மாணவர்களுக்கு NEET, JEE தேர்வை எதிர்கொள்ள இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகிறது. மாவட்ட கல்வி அலுவலர்கள் தலைமையில், தலைமை ஆசிரியர்கள் அதனை எவ்வாறு மேற்கொள்ள வேண்டும் என்பது பற்றி விளக்கமாக சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.
கள்ளக்குறிச்சியில் விஷச்சாராயம் விற்று 49 பேர் மரணத்திற்கு காரணமான முக்கிய குற்றவாளி சின்னதுரை நள்ளிரவில் கைது செய்யப்பட்டுள்ளார். தலைமறைவாக இருந்த அவரை கடலூரில் தனிப்படை போலீசார் கைது செய்தனர். ஏற்கெனவே, கைது செய்யப்பட்ட கண்ணுக்குட்டி, தாமோதரன் விஜயா ஆகிய மூவரும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். சிகிச்சையில் உள்ள பலர் கவலைக்கிடமான நிலையில் உள்ளதால், கருணாபுரம் மக்கள் கண்ணீருடன் தவிக்கின்றனர்.
தமிழகத்தில் ஒருசில இடங்களில் நாளை மிக கனமழை பெய்யக் கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி நீலகிரி, கோவை மலைப் பகுதிகளில் மிக கனமழை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, நெல்லை மாவட்டங்களில் கனமழை பெய்யக் கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேற்கண்ட மாவட்டங்களில் ஜூன் 23ஆம் தேதியும் கனமழை முதல் மிக கனமழை பெய்யக் கூடும் எனவும் கூறப்பட்டுள்ளது.
இடைத்தேர்தலில் போட்டியிடுவதில்லை என்ற கொள்கையில் இருந்து விலகி, 13 ஆண்டுகளுக்கு பிறகு பாமக விக்கிரவாண்டியில் போட்டியிடுகிறது. மக்களவைத் தேர்தலில் தோல்வி, மாநில அந்தஸ்து இழப்பு என்று தேர்தல் அரசியலில் திணறி வரும் அக்கட்சி, விக்கிரவாண்டியில் தங்களின் இருப்பை தக்கவைக்க போராடி வருகிறது. இந்த அரசியல் போராட்டத்தில் அக்கட்சிக்கு வெற்றி கிடைக்குமா? என்பது ஜூலை 13இல் தெரியவரும்.
பதுக்கல் அதிகரிப்பால் பூண்டு விலை கிலோ ₹350ஆக உயர்ந்துள்ளது. குஜராத், மத்திய பிரதேசம், ஒடிசா, மகாராஷ்டிரா, ராஜஸ்தான், உத்தரப் பிரதேசம் மாநிலங்கள் தான் பூண்டு அதிகம் சாகுபடி செய்து நாட்டின் ஒட்டு மொத்த தேவையை பூர்த்தி செய்கின்றன. இந்நிலையில், விவசாயிகளிடம் இருந்து மொத்தமாக கொள்முதல் செய்து வர்த்தகர்கள் கிடங்குகளில் இருப்பு வைத்துள்ளனர். இதனால், செயற்கையாக தட்டுபாடு ஏற்படுத்தப்பட்டு, விலை உயர்கிறது.
விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்றுடன் நிறைவடைகிறது. இதுவரை 24 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். ஜூன் 14ஆம் தேதி தொடங்கிய வேட்புமனு மீது 24ஆம் தேதி பரிசீலனை நடைபெறும். மனுக்களை திரும்ப பெற 26ஆம் தேதி கடைசி நாளாகும். ஜூலை 10இல் வாக்குப்பதிவும், 13இல் வாக்கு எண்ணிக்கையும் நடைபெறும். இடைத்தேர்தலை அதிமுக, தேமுதிக புறக்கணித்த நிலையில், திமுக, பாமக போட்டியிடுகின்றன.
Sorry, no posts matched your criteria.