India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கெஜ்ரிவாலுக்கு வழங்கப்பட்ட ஜாமினை எதிர்த்து டெல்லி உயர் நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை மேல்முறையீடு செய்துள்ளது. மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலுக்கு டெல்லி சிறப்பு நீதிமன்றம் நேற்று ஜாமின் வழங்கியது. இதனையடுத்து அவர் இன்று சிறையில் இருந்து வெளிவருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஜாமினை எதிர்த்து அமலாக்கத்துறை உயர் நீதிமன்றத்தை அணுகியுள்ளது.
கள்ளச் சாராயம் விவகாரத்தில் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடுமாறு பாஜக தலைவர் அண்ணாமலை, உள்துறை அமைச்சர் அமித்ஷாவிற்கு கடிதம் எழுதியுள்ளார். கடந்த 2 ஆண்டுகளில் 60க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாகவும், மாநில காவல் துறையினருக்குத் தெரிந்தே சட்டவிரோத மதுவிற்பனை நடைபெறுவதால், அவர்கள் விசாரணையில் உண்மைகள் வெளி வராது என்று கூறி, சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடும்படி அவர் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
கள்ளச்சாராயத்திற்கு திமுக துணை போவதுடன், மக்களின் உயிரை எடுக்கிற அரசாக இருப்பதாக மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் விமர்சித்துள்ளார். இந்த சம்பவத்திற்காக முதல்வர் ஸ்டாலின் மன்னிப்பு கேட்க வேண்டும் என்ற அவர், திமுக அரசின் கையாளாகத்தனத்தை இந்த சம்பவம் காட்டுவதாக விமர்சித்தார். ஆட்சிக்கு வந்ததும் மது விலக்கு என்று பொய் வாக்குறுதிகளை பொதுமக்களிடம் திமுக அளித்ததாக அவர் விமர்சித்துள்ளார்.
மக்கள் பிரச்னைகளுக்காக குரல் கொடுக்கும் தங்களை ஒடுக்குவது கண்டிக்கத்தக்கது என இபிஎஸ் கூறியுள்ளார். சட்டப்பேரவையில் இருந்து வெளியேற்றப்பட்ட பின் பேட்டியளித்த அவர், விஷச்சாராயம் குடித்து இதுவரை 50 பேர் பலியானதுடன், சேலத்தில் சிகிச்சை பெறும் பலருக்கு கண் பார்வை பறிபோனதாகவும் அதிர்ச்சி தெரிவித்துள்ளார். மேலும், திறமையற்ற அரசாங்கம் உள்ளதால் தான் இதுபோன்ற செயல்கள் நடந்ததாகவும் குற்றம்சாட்டியுள்ளார்.
கள்ளச்சாராயம் குடித்து இறந்தவர்களுக்கு நிவாரண உதவி தேவையில்லாதது என நடிகர் பார்த்திபன் மறைமுகமாகக் கூறியுள்ளார். இது தொடர்பாக X பக்கத்தில், “கள்ளச் சா…வுக்கு எதுக்கு, நல்லச் சாவு (10 L)”? என அவர் கேள்வி எழுப்பியுள்ளார். தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதாவும், நிவாரணம் அளிப்பது தவறான முன்னுதாரணத்தை ஏற்படும் என்று விமர்சித்திருந்தார். நிவாரணம் தொடர்பான உங்களின் கருத்தை கமெண்டில் கூறுங்கள்.
வங்கதேசத்துக்கு எதிரான சூப்பர் 8 சுற்றில் ஆஸ்திரேலிய அணி 28 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. முதலில் களமிறங்கிய ஆஃப்கன் அணி 140 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் நஜ்முல் ஹொசைன் சாண்டோ 41, டவ்ஹித் ஹ்ரிடோய் 40 ரன்களை எடுத்தனர். தொடர்ந்து விளையாடிய ஆஸி., 100/2 ரன்கள் எடுத்திருந்த போது மழை வந்தது. இதனால் டிஎல்எஸ் முறைப்படி ஆஸி., அணி வென்றதாக அறிவிக்கப்பட்டது. அந்த அணியின் வார்னர் 53 ரன்கள் எடுத்தார்.
காவல்துறையினரின் துணையுடன் கள்ளச்சாராயம் விற்கப்படுவதாக, தமிழிசை செளந்தரராஜன் குற்றம்சாட்டியுள்ளார். கள்ளக்குறிச்சி விஷச்சாராய சம்பவத்தை சுட்டிக்காட்டியுள்ள அவர், காவல்துறை தக்க நடவடிக்கை எடுத்திருந்தால் இதுபோன்ற சம்பவம் ஏற்பட்டிருக்காது என வருத்தம் தெரிவித்தார். மேலும், நீட் தேர்வு எதிர்ப்பு என்பது தேசிய அளவில் அரசியல் ஆக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
கடந்த சில வாரங்களாக குறைந்து காணப்பட்ட தங்கத்தின் விலை இன்று ஒரே நாளில் கடுமையாக உயர்ந்துள்ளது. இதனால், ₹54,000க்குள் இருந்த சவரன் விலை இன்று ₹54,000ஐ கடந்தது. அதன்படி, சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ₹640 உயர்ந்து ₹54,240க்கு விற்பனையாகிறது. கிராமுக்கு ₹80 உயர்ந்து ₹6,780க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் வெள்ளி விலை ₹1.40 உயர்ந்து கிராம் ₹98.50க்கு விற்பனையாகிறது.
நல்ல சாராயம் குறைக்கப்பட வேண்டும், கள்ளச்சாராயம் ஒழிக்கப்பட வேண்டும் என கவிஞர் வைரமுத்து வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக X தளத்தில் பதிவிட்டுள்ள அவர், எந்த மது மதி மறக்கச் செய்கிறதோ அதே மதுதான் மரிக்கச் செய்கிறது எனக் கூறியுள்ளார். மேலும், இறப்பின் காரணம் எதுவாயின் இரங்கத்தான் வேண்டும், சாராயச் சாவுகளுக்காகவல்ல சந்ததிகளுக்காக எனவும் தனது பதிவில் இரங்கல் தெரிவித்துள்ளார்.
கல்வராயன் மலைப்பகுதியில் கள்ளச்சாராயம் காய்ச்சப்படும் இடங்களில் போலீசார் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர். கள்ளக்குறிச்சி சம்பவத்தில் கைது செய்யப்பட்ட நபர்கள் அளித்த தகவலின் அடிப்படையில் இந்த சோதனை நடத்தப்படுகிறது. 4 காவல் ஆய்வாளர்கள் தலைமையில், போலீசார் மலை முழுவதும் தீவிர சோதனை செய்து வருகிறார்கள். இதே போன்று தமிழகம் முழுவதும் அதிரடி சோதனைகளை நடத்த டிஜிபி உத்தரவிட்டுள்ளார்.
Sorry, no posts matched your criteria.