news

News June 21, 2024

நர்சிங் படிப்புகளுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி

image

துணை மருத்துவப் பட்டப்படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை மே இரண்டாம் வாரம் தொடங்கி நடைபெற்று வருகிறது. பிஎஸ்சி நர்சிங். பி.பார்ம் உள்ளிட்ட 19 வகை துணை மருத்துவப் படிப்புகளுக்கு விண்ணப்பிக்க இன்றே (ஜூன் 21) கடைசி நாளாகும். இதற்கு <>www.tnmedicalselection.org<<>> என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். அரசு மருத்துவக் கல்லுாரிகளில் 2,200, தனியார் மருத்துவக் கல்லுாரிகளில் 15,000க்கும் மேற்பட்ட இடங்கள் உள்ளன.

News June 21, 2024

அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை

image

தமிழத்தில் இரவு 7 மணி வரை மழை பெய்யவிருக்கும் மாவட்டங்களின் பட்டியலை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. அதன்படி, ஈரோடு, தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், ராணிப்பேட்டை, வேலூர், விழுப்புரம், கடலூர், கோவை, நீலகிரி, தேனி, திண்டுக்கல், தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யக்கூடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

News June 21, 2024

எம்பயர் ஸ்டேட் கட்டடத்தை சுற்றி வளைத்த ராட்சத டிராகன்

image

நியூயார்க்கில் உள்ள எம்பயர் ஸ்டேட் கட்டடத்தின் உச்சியில் ராட்சத டிராகன் இருப்பது போன்ற புகைப்படங்கள் இணையத்தில் பேசுபொருளாகியுள்ளது. ‘ஹவுஸ் ஆஃப் தி டிராகன்’ சீரிஸின் 8ஆவது எபிசோட் HBO Max தளத்தில் வெளியாகியுள்ளது. இதை விளம்பரப்படுத்தும் நோக்கில், எம்பயர் ஸ்டேட் கட்டிடத்தில் இந்த ராட்சத டிராகன் வடிவமைக்கப்பட்டுள்ளது. கட்டணம் செலுத்தி இந்த டிராகன் உடன் புகைப்படம் எடுத்துக் கொள்ள முடியும்.

News June 21, 2024

தமிழக அரசைக் கண்டித்து தேமுதிக ஆர்ப்பாட்டம்

image

திமுக அரசின் நிர்வாக சீர்கேட்டைக் கண்டித்து மாவட்டத் தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடத்துவதாக தேமுதிக அறிவித்துள்ளது. இந்த ஆர்ப்பாட்டம் தமிழகம் முழுவதும் ஜூன் 25இல் நடைபெறும் என்று தெரிவித்துள்ள அக்கட்சித் தலைமை, தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளது. கள்ளக்குறிச்சி விவகாரத்தில் தவறு செய்த அனைவர் மீதும் நடிவடிக்கை எடுக்கவும் கேட்டுக்கொண்டுள்ளது.

News June 21, 2024

இனி விமான டிக்கெட் புக் செய்ய AI உதவி செய்யும்!

image

வாட்ஸ்அப்பில் AI உதவியுடன் விமான டிக்கெட் புக் செய்யும் வசதியை இண்டிகோ நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. இது டிஜிட்டல் டிராவல் ஏஜென்ட் போன்று செயல்பட்டு, விமான டிக்கெட் புக் செய்பவர்களுக்கு உதவி செய்யும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. +91 70651 45858 என்ற வாட்ஸ் அப் எண்ணுக்கு மெசேஜ் செய்து, டிக்கெட் புக்கிங், செக்கின், போர்டிங் பாஸ் ஆகிய உதவிகளை தமிழ், ஆங்கிலம், இந்தி ஆகிய மொழிகளில் பெறலாம்.

News June 21, 2024

காலை சிற்றுண்டி திட்டத்தை ஆய்வு செய்ய ஆணை

image

அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கும் காலை சிற்றுண்டி திட்டம் விரிவுப்படுத்தப்பட்டுள்ளது. இதன் செயல்பாடு குறித்து கண்காணிக்க, வட்டாரக் கல்வி அலுவலர்கள், ஆசிரியர் பயிற்றுநர்கள் அடங்கிய குழுக்களை அமைக்க மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இந்தக் குழு, அரசு உதவி பள்ளிகளில் இத்திட்டம் செயல்படுத்தப்படுவதை ஆராய்ந்து எமிஸ் தளத்தில் புகைப்படங்களை பதிவிட அறிவுறுத்தியுள்ளது.

News June 21, 2024

தேர்தலுக்காக கொள்கையை மாற்றிய டிரம்ப்

image

குடியுரிமைக்கு எதிராக கடுமையான கொள்கையை கொண்டவர் டொனால்ட் டிரம்ப். இந்நிலையில், அமெரிக்காவில் பயிலும் வெளிநாட்டு மாணவர்களுக்கு குடியுரிமை வழங்கப்படும் என அவர் தற்போது தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் வரும் நவம்பர் மாதம் அதிபர் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், 59% வாக்காளர்கள் வெளிநாட்டினருக்கு குடியுரிமை வழங்க சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் ஆதரவு தெரிவித்து இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

News June 21, 2024

CBSE பள்ளியில் சேர்க்க முடியாததால் தற்கொலை

image

மகாராஷ்டிராவில் தனது குழந்தையை CBSE பள்ளியில் சேர்க்க பணம் இல்லாததால் மகளுடன் சேர்த்து தாய் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாலேகான் பகுதியில் வசித்து வந்த பாக்யஸ்ரீ (26), தனது மகள் ஷமிக்‌ஷாவுடன் (5) கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். அவர் தற்கொலை செய்து கொள்வதற்கு முன், கணவருக்கு வீடியோ கால் செய்து, கடைசியாக குழந்தையை பார்த்து கொள்ளுமாறு கூறியுள்ளார்.

News June 21, 2024

சிவா படத்தின் டப்பிங் பணிகள் தொடக்கம்

image

‘மிர்ச்சி’ சிவா நடிப்பில் புதிய படமொன்றை ராம் இயக்கி வருகிறார். இதன் படப்பிடிப்பு சில மாதங்களுக்கு முன்னர் தொடங்கியது. நேரடி ஓடிடி தளத்தில் வெளியாகும் இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். 45 நாட்களில் படப்பிடிப்பு முடிந்த நிலையில், தற்போது டப்பிங் பணிகள் தொடங்கியுள்ளது. முன்னதாக நிவின் பாலி நடிப்பில் ராம் இயக்கிய ‘ஏழு கடல் ஏழு மலை’ படம் விரைவில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

News June 21, 2024

தாய்-தந்தையை இழந்த குழந்தைகளுக்கு ₹5 லட்சம்

image

கள்ளக்குறிச்சி சம்பவத்தில், பெற்றோர் இருவரையும் இழந்த குழந்தைகளுக்கு, ₹5 லட்சமும், பெற்றோரில் ஒருவரை இழந்த குழந்தைகளுக்கு ₹3 லட்சம் வழங்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இந்தத் தொகை அவர்களுக்கு 18 வயது முடியும் வரை நிலையான வைப்புத் தொகையாக வைக்கப்படும் எனக் கூறியுள்ள அவர், சம்பந்தப்பட்ட குழந்தைகளுக்கு அரசுத் திட்டங்களில் முன்னுரிமை வழங்கப்படும் எனவும் உறுதி அளித்துள்ளார்.

error: Content is protected !!