India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
அக்னிவீர் வாயு இந்திய விமானப் படை தேர்வுக்கு ஜூலை 7ஆம் முதல் ஜூலை 28ஆம் தேதி வரை agnipathvayu.cdac.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என சென்னை மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே தெரிவித்துள்ளார். 12ஆம் வகுப்பு அல்லது 3 வருடப் பட்டய படிப்பு அல்லது தொழில் படிப்பு முடித்தவர்கள் இந்த பணிக்கு தகுதியானவர்கள். 20 வயதுக்குட்பட்ட மாணவ, மாணவிகள் இப்பணிக்கு விண்ணப்பிக்க முடியும்.
*மாற்றுத்திறனாளிகளின் பழுதடைந்த பெட்ரோல் ஸ்கூட்டர்கள், காதொலிக் கருவிகள், பிரெயில் கைக்கடிகாரங்களுக்கு பதிலாக புதியவை வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. *சிறந்த மாற்றுத்திறனாளி ஆசிரியர்களுக்கு ஹெலன் கெல்லர் விருது வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகள் நல ஆர்வலர் ஹெலன் கெல்லரின் புகழை இளம் தலைமுறையிடம் கொண்டு சேர்க்க இந்த விருது வழங்கப்படுகிறது.
டி20 உலகக் கோப்பை சூப்பர் 8 சுற்றில் இன்று நடைபெறும் போட்டியில் இங்கிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் மோதுகின்றன. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பவுலிங் தேர்வு செய்தது. இதையடுத்து இன்னும் சற்று நேரத்தில் தெ.ஆ., பேட்டிங் செய்ய உள்ளது. இதுவரை இரு அணிகளும் தலா ஒரு வெற்றிபெற்றுள்ள நிலையில், இன்றைய போட்டியில் ENG வெற்றிபெற்றால் எளிதாக அரையிறுதிக்கு முன்னேற வாய்ப்புள்ளது. எந்த அணி வெற்றிபெறும்?
*கைம்பெண்கள், கணவரால் கைவிடப்பட்ட பெண்கள், நலிவுற்ற பெண்கள், ஆதரவற்ற பெண்கள் மற்றும் பேரிளம் பெண்களில் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள 200 பயனாளிகளுக்கு சுயதொழில் செய்ய தலா ₹50,000 வழங்கப்படும் என சட்டப்பேரவையில் தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. * ₹50 லட்சம் நிதியில் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு
முதல்வரின் ஆராய்ச்சி உதவி திட்டம் செயல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆந்திராவின் பிதாபுரம் தொகுதியில் பவன் கல்யாணை எதிர்த்து, ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் சார்பில் முத்ரகடா பத்மநாபம் பேட்டியிட்டார். பிரசாரத்தின் போது, பவன் கல்யாணிடம் தோற்றால் தனது பெயரை மாற்றிக் கொள்வதாக மேடை தோறும் சபதமிட்டு வந்தார். இந்நிலையில், பவன் கல்யாண் வெற்றி பெற்றது மட்டுமின்றி, துணை முதல்வராகவும் ஆகிவிட்டார். இந்நிலையில், முத்ரகடா பத்மநாபம் என்ற பெயரை ‘பத்மநாப ரெட்டி’ என மாற்றிக் கொண்டுள்ளார்.
விஷச்சாராயம் குடித்து உயிரிழந்த 50 பேரில், பெரும்பாலானோர் கருணாபுரம் பகுதியைச் சேர்ந்தவர்கள். இந்நிலையில், உயிரிழந்தவர்களின் ஒருவர் உத்தர பிரதேசம் மாநிலத்தைச் சேர்ந்த ஜித்தேந்தர் என்பது தெரியவந்துள்ளது. அவர் அப்பகுதியில் தங்கி பானி பூரி வியாபாரம் செய்துவந்த நிலையில், அவரும் விஷச்சாராயம் அருந்தி உயிரிழந்துள்ளார். விசாரணைக்குப் பின் அவரது உடல் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்படும் எனத் தெரிகிறது.
இந்த ஆண்டின் முதல் 6 மாதங்கள் நிறைவடைய உள்ள நிலையில், 100க்கும் மேற்பட்ட தமிழ் படங்கள் வெளியாகியுள்ளன. இதில் பெரிய நடிகர்களின் படங்கள் கூட வரவேற்பைப் பெறாத நிலையில், சுந்தர்.சி இயக்கி, நடித்து வெளியான ‘அரண்மனை 4’ மிகப்பெரிய வெற்றிபெற்றதுடன், 100 கோடி வசூலித்ததாக கூறப்பட்டது. இந்நிலையில், மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இப்படம் இன்று டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் OTT தளத்தில் வெளியாகியுள்ளது.
கள்ளச்சாராயம் குடித்து 50 பேர் உயிரிழந்த விவகாரம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், திமுக அரசு பதவிக்கு வந்த இந்த 3 ஆண்டுகளில் கள்ளக்குறிச்சியில் மட்டும், கள்ளச்சாராயம் தொடர்பாக 14,606 வழக்குகள் பதிவுசெய்யப்பட்டு, 10,154 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதேபோல் தமிழகம் முழுவதும் கடந்த 3 ஆண்டுகளில் 4,61,084 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
*சென்னையில் பெண்கள் பாதுகாப்பை உறுதிப்படுத்த 200 பெண் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு ஜிபிஎஸ் பொருத்தப்பட்ட இளஞ்சிவப்பு ஆட்டோ வாங்க ₹1 லட்சம் மானியம் வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. *பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்காக செயல்படுத்தப்படும் நலத்திட்டங்களில் பயன் பெறுவதற்காக வருமான உச்சவரம்பு ₹72,000இல் இருந்து ₹1,20,000ஆக உயர்த்தப்படும் என சட்டப்பேரவையில் தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
T20 WCக்கு பின் அடுத்த ஆண்டு பிப்.,இல் தொடங்கும் சாம்பியன்ஸ் டிராபி வரை இந்திய அணி 20 T20, 10 டெஸ்ட் மற்றும் 6 ஒருநாள் போட்டிகளில் விளையாடுகிறது. ஜிம்பாப்வே- 5 T20(ஜூலை), இலங்கை – 3 ODI போட்டிகள், 3 T20 (ஜூலை, ஆகஸ்ட்), வங்கதேசம் – 2 டெஸ்ட், 3 T20 (ஆக., செப்.,), நியூசி. – 3 டெஸ்ட் (அக்., நவ.,), தெ.ஆப்பிரிக்கா – 4 T20 (நவ.,), ஆஸி – 5 டெஸ்ட் (நவ., ஜன.,), இங்கிலாந்து – 5 T20, 3 ODI (ஜன., பிப்.,).
Sorry, no posts matched your criteria.