news

News June 22, 2024

தேர்தல் புறக்கணிப்பு என்பது ராஜதந்திர யுத்தியா?

image

விக்கிரவாண்டி இடைத்தேர்தலை அதிமுக புறக்கணித்ததை ராஜதந்திர யுத்தியாக அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர். பாஜகவுக்கான மறைமுக ஆதரவு கொடுக்கவே இந்த புறக்கணிப்பு என கிசுகிசுக்கப்பட்டாலும், உண்மையில் இது பாமகவுக்கான தூதுதான் என அவர்கள் கூறுகின்றனர். 2026 சட்டமன்றத் தேர்தலை இலக்கு வைத்து, எப்படியாவது பாமகவை கூட்டணிக்கு இழுக்க இபிஎஸ் காய் நகர்த்துவதாக அரசியல் அரங்கில் பேசப்படுகிறது.

News June 22, 2024

GST வரி விகித சீரமைப்புக் குழு மாற்றியமைப்பு

image

GST வரி விகித சீரமைப்புக்கான அமைச்சர்கள் குழுவை மத்திய அரசு மாற்றியமைத்துள்ளது. அதன்படி, குழுவின் ஒருங்கிணைப்பாளராக பிஹார் துணை முதல்வர் சாம்ராட் செளதரி நியமிக்கப்பட்டுள்ளார். உ.பி., நிதியமைச்சர் சுரேஷ்குமார், கர்நாடக வருவாய் துறை அமைச்சர் கிருஷ்ண பைரே, கேரள நிதியமைச்சர் பாலகோபால் உள்பட 7 பேர் புதிய உறுப்பினர்களாக குழுவில் இடம்பெற்றுள்ளனர். இக்குழு தற்போது 2ஆவது முறையாக மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

News June 22, 2024

இதுதான் பாஜகவின் ஒரே நோக்கம்!

image

மனுவாத சாம்ராஜ்ஜியத்தை மீண்டும் உருவாக்க வேண்டும் என்பது பாஜகவின் ஒரே நோக்கம் என்று சிபிஎம் மூத்த தலைவர் பேரா. அருணன் கூறியுள்ளார். NCERT பாடப்புத்தகங்களில் பாபர் மசூதி இடிப்பு குறித்து பாடப் பகுதிகளில் இருந்து நீக்கப்பட்டது குறித்து பேசிய அவர், மெய்யான வரலாற்றை பாஜக ஒருபோதும் விரும்புவதில்லை என்றார். மேலும், வரலாற்றைத் திரிக்கும் எண்ணத்தில் பாடத் திட்டத்தை மாற்றுகிறார்கள் எனத் தெரிவித்தார்.

News June 22, 2024

தினம் ஒரு திருக்குறள்!

image

▶குறள் பால்: அறத்துப்பால் ▶இயல்: துறவறவியல்
▶அதிகாரம்: அவாவறுத்தல் ▶ குறள் எண்: 361
▶குறள்:
அவாஎன்ப எல்லா உயிர்க்கும் எஞ்ஞான்றும்
தவாஅப் பிறப்பீனும் வித்து.
▶பொருள்: எல்லா உயிர்களுக்கும் எக்காலத்திலும் தவறாமல் வருகின்ற பிறவித்துன்பமானது, ‘பேராசை’ என்ற விதையில் இருந்தே முளை விடுகிறது என சான்றோர்கள் கூறுவர்.

News June 22, 2024

நேட்டோவின் அடுத்த தலைவர் யார்?

image

மேற்கத்திய நாடுகளின் ராணுவக் கூட்டமைப்பான நேட்டோவின் பொதுச் செயலாளராக நெதர்லாந்தின் பிரதமா் மார்க் ருட்டே தேர்ந்தெடுக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. உக்ரைனின் மிகத் தீவிர ஆதரவாளரான ருட்டே, ரஷ்ய அதிபர் புதினை மிகக் கடுமையாக எதிர்த்து வருபவராவார். இருந்தாலும், மற்ற ஐரோப்பிய நாடுகளின் தலைவர்களோடு ஒப்பிடுகையில் ருட்டே போருக்கு முக்கியத்துவம் தராத சமாதான விரும்பி என்று கூறப்படுகிறது.

News June 22, 2024

பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க!

image

இன்று (ஜூன் 22) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க!

News June 22, 2024

‘டாடா’ பட இயக்குநர் படத்தில் ஜெயம் ரவி

image

‘டாடா’ பட இயக்குநர் கணேஷ் கே.பாபு இயக்கும் புதிய திரைப்படத்தில் நடிகர் ஜெயம் ரவியுடன் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போது ஜெயம் ரவி ஜீனி, காதலிக்க நேரமில்லை, பிரதர் ஆகிய 3 படங்களில் நடித்து வருகிறார். இவற்றை முடிந்த பிறகு இந்த கூட்டணி இணையவிருப்பதாகக் கூறப்படுகிறது. இந்தப் படத்தை தயாரிக்க ஒலிம்பியா மூவிஸின் அம்பேத் குமார் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

News June 22, 2024

வெள்ளிப்பதக்கம் வென்ற ஷைலி சிங்

image

ஸ்லோவாக்கியாவில் நடந்த சர்வதேச நீளம் தாண்டுதல் போட்டியில், இந்திய வீராங்கனை ஷைலி சிங் வெள்ளிப்பதக்கம் வென்றுள்ளார். கோசிஸ் நகரில் மகளிருக்கான மும்முறை நீளம் தாண்டுதல் இறுதிப்போட்டியில், 6.43 மீ., தூரம் தாண்டி, 2ஆவது இடம் பிடித்து வெள்ளிப் பதக்கத்தைக் கைப்பற்றினார். பல்கேரியாவின் மிட்கோவா (6.7 மீ.,), பிரிட்டனின் ஹாப்கின்ஸ் (6.4 மீ.,) ஆகியோர் முறையே தங்கம் & வெண்கலம் பதக்கங்களைக் கைப்பற்றினார்.

News June 22, 2024

பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க!

image

இன்று (ஜூன் 22) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 11 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க!

News June 22, 2024

‘முதலீடு’ என்ற பெயரில் விளம்பரப்படுத்தக் கூடாது: IRDAI

image

பங்குச் சந்தை சார்ந்த காப்பீட்டுத் திட்டங்களை ‘முதலீடு’ என்ற பெயரில் விளம்பரப்படுத்தக் கூடாது என்று காப்பீட்டு நிறுவனங்களுக்கு IRDAI அறிவுறுத்தியுள்ளது. அதன் அறிக்கையில், பங்குச் சந்தையில் முதலீடு செய்வதில் இடர்பாடுகளை எதிர்கொள்ள நேரிடும் என்றும் வழக்கமான காப்பீட்டுத் திட்டங்களில் இருந்து பங்குச் சந்தை திட்டங்கள் எவ்வாறு வேறுபடுகின்றன என்பதையும் தெளிவுபடுத்த வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

error: Content is protected !!