India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நீட் தேர்வுக்கு எதிராக திமுக மாணவரணி சார்பில் அறிவித்திருந்த ஆர்ப்பாட்டம் ஒத்திவைக்கப்படுவதாக அக்கட்சி தலைமை அறிவித்துள்ளது. இந்த ஆர்ப்பாட்டம் சென்னையில் வரும் 24ஆம் தேதி நடைபெற இருந்தது. இந்நிலையில், தற்போது ஆர்ப்பாட்டம் ஒத்திவைக்கப்பட்டு, பின்னர் தேதி அறிவிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது. நீட் தேர்வு குளறுபடிக்கு எதிராக நாடு முழுவதும் எதிர்ப்பு போராட்டம் தீவிரமெடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
சர்வதேச அளவில் 4இல் ஒரு குழந்தைக்கு ஊட்டச்சத்து குறைபாடு இருப்பது தெரியவந்துள்ளது. அன்றாடம் சத்தான உணவு வகைகள் கிடைக்காத குழந்தைகளின் நிலையை ‘குழந்தை உணவு வறுமை’ என யுனிசெப் மற்றும் WHO வரையறுத்துள்ளது. இதற்கு முக்கிய காரணம் ஏழ்மை மற்றும் பெற்றோரிடம் போதிய விழிப்புணர்வு இல்லாததே என நிபுணர்கள் கூறுகின்றனர். மேலும், இந்த விவகாரத்தில் அரசு தீவிரம் காட்ட வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
டெல்லியில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் 53ஆவது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் இன்று நடைபெறவுள்ளது. தேர்தலுக்கு பிறகு மற்றும் வரி விகித சீரமைப்பு குழு மாற்றியமைப்புக்கு பிறகு நடைபெறும் முதல் கூட்டம் என்பதால் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இக்கூட்டத்தில் ஆன்லைன் விளையாட்டு, குதிரை பந்தயம், கேசினோ மீதான 28% வரி குறித்து ஆலோசனை நடத்தப்படவுள்ளதாகக் கூறப்படுகிறது.
கள்ளக்குறிச்சியில் விஷச்சாராயம் குடித்து உயிரிழந்தோர் எண்ணிக்கை 55 ஆக உயர்ந்துள்ளது. கள்ளக்குறிச்சி மருத்துவமனையில் 31, சேலம் மருத்துவமனையில் 17, விழுப்புரம் மருத்துவமனையில் 4, ஜிப்மர் மருத்துவமனையில் 3 பேரும் உயிரிழந்துள்ளனர். தொடர்ந்து, 100க்கும் மேற்பட்டோர் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில், பலர் கவலைக்கிடமான நிலையில் உள்ளதால் உயிரிழப்புகள் மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.
பாமகவிடம் ஒரு மாதம் ஆட்சியைக் கொடுத்தாலே போதும், தமிழகம் முழுவதும் போதைப்பொருள் புழக்கத்தை ஒழித்துக்காட்டுவோம் என அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். கள்ளக்குறிச்சி விஷச்சாராய விவகாரத்திற்கு தீர்வு பூரண மதுவிலக்குதான் என்றும், அதை ஒரேநாளில் கொண்டுவர வேண்டாம், படிப்படியாக கொண்டு வாருங்கள் எனவும் அரசை வலியுறுத்தினார். இவ்விவகாரத்தில் சிபிஐ விசாரணை வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
நாள்தோறும் அதிகாலையில் எழும்புவது, உடலுக்கு பலவிதமான ஆரோக்கியத்தை வழங்கும் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். குறிப்பாக, அதிகாலை 4-6 மணிக்குள் எழுந்தவுடன் அரை லிட்டர் முதல் ஒரு லிட்டர் வரை சிறிது சிறிதாக தண்ணீர் பருக வேண்டும். பிறகு 20 நிமிடங்கள் வரை நடைப்பயிற்சி செய்ய வேண்டும். இவ்வாறு அன்றாட வாழ்க்கையை தொடங்கினால், உங்களது ஆற்றல் மற்றும் மனநிலை ஆகியவை மேம்படும் என நிபுணர்கள் கூறியுள்ளனர்.
டி20 உலகக்கோப்பை தொடரின் சூப்பர் 8 சுற்றின் இன்றைய 7வது போட்டியில், IND & BAN அணிகள் மோதுகின்றன. விவியன் ரிச்சர்ட்ஸ் மைதானத்தில் நடக்கும் இப்போட்டியில்,வெல்ல IND அணிக்கு 88% வாய்ப்பு இருப்பதாகக் கணிக்கப்பட்டுள்ளது. நடப்பு தொடரில் ஒரு போட்டியிலும் தோற்காத IND அணி (+2.35 RR), புள்ளிப்பட்டியலில் இரண்டாம் இடத்தில் உள்ளது. இன்றைய ஆட்டத்தில் IND அணி வென்றால், நேரடியாக அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறும்.
இரண்யாட்சனை சம்ஹாரம் செய்து, பூமாதேவி பிராட்டியை ஆட்கொண்ட மகாவிஷ்ணுவை ஆதிவராகர் என்று மந்திரநூல்கள் போற்றுகின்றன. இத்தகு பெருமை கொண்ட அவர் வீற்றிருக்கும் திருத்தலம் கல்லிடைக்குறிச்சியில் உள்ளது. ஆனி தேய்பிறை அஷ்டமி நாளில் இக்கோயிலுக்கு சென்று, சந்தன பச்சைச் சாற்றி செய்து, நெய் தீபமேற்றி, கோரைக்கிழங்கு மாவுருண்டை படைத்து வழிபட்டால் நிலம் தொடர்பான பிரச்னைகள் நீங்கும் என்பது ஐதீகம்.
தமிழ்நாட்டில் கள்ளுக்கடைகளை திறந்தால் மதுவிலக்கு சாத்தியப்படும் என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை நம்பிக்கை தெரிவித்துள்ளார். பணம் அதிகம் உள்ளவர்கள் கள்ளச்சாராயம் குடிப்பதில்லை எனக் கூறிய அவர், விலை மலிவான சாராயத்தை குடிக்க நினைப்பவர்களுக்காக கள்ளுக்கடைகள் திறக்க வேண்டும் என வலியுறுத்தினார். மதுக்கடைகளை குறைக்க வேண்டுமென்றால், முதலில் கள்ளுக்கடைகளைத் திறக்க வேண்டும் என்றார்.
*3 புதிய குற்றவியல் சட்டங்களை நிறுத்தி வைக்க வேண்டும் – மம்தா பானர்ஜி
*தமிழ்நாட்டில் கள்ளுக்கடைகளை திறந்தால் மதுவிலக்கு சாத்தியப்படும் – அண்ணாமலை
*ஆட்சி செய்யும் அரசாங்கங்களே மக்களை மது குடிக்க வைக்கிறார்கள் – நடிகர் சூர்யா
*ஜிஎஸ்டி விகித சீரமைப்புக்கான அமைச்சர்கள் குழுவை மத்திய அரசு மாற்றியமைத்தது.
*ஸ்லோவாக்கியா சர்வதேச நீளம் தாண்டுதல் போட்டியில், ஷைலி சிங் வெள்ளிப்பதக்கம் வென்றார்.
Sorry, no posts matched your criteria.