India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நாடாளுமன்றத்தில் கடந்த பிப்ரவரி மாதம் நிறைவேற்றப்பட்ட பொதுத்தேர்வுகள் (நியாயமற்ற வழிமுறைகளைத் தடுத்தல்) சட்டம், 2024 நேற்று முதல் அமலாகியுள்ளது. அந்த சட்டத்தில், அரசு பணிக்காக நடக்கும் தேர்வு எழுதுவோருக்கு நேரிடையாகவோ, மறைமுகமாகவோ உதவுவதும், தேர்வுக்கான கணினிகள் மற்றும் கணினி நெட்வொர்க்கில் தனி நபரோ, குழுவினரோ ஊடுருவுவதும் குற்றமென்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பண ஆதாயத்துக்காகவோ அல்லது மோசடி செய்யவோ போலி இணையதளம் உருவாக்குவது, போலியாக தேர்வுகளை நடத்துவது, பண ஆதாயம் அல்லது மோசடி செய்யும் நோக்கில் போலி நுழைவு அட்டைகள், போலி வேலைவாய்ப்பு உறுதி கடிதங்கள் அளிப்பதும் குற்றம் என அந்தச் சட்டத்தில் கூறப்பட்டுள்ளது. தேர்வு மையத்தில் தேர்வு எழுதுவோர் அமரும் இடங்களை மாற்றி முறைகேடு செய்வதும் குற்றம் என்று அதில் கூறப்பட்டுள்ளது.
சட்டத்தை மீறுவோருக்கு, குறைந்தபட்சம் 3 ஆண்டு, அதிகபட்சம் 5 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்படும். அத்துடன் ₹10 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. முறைகேடு கண்டுபிடிக்கப்பட்டால், தேர்வு சேவை அளிக்கும் நபர் அல்லது நிறுவனத்துக்கு ₹1 கோடி அபராதம் விதிக்கப்படும். தேர்வு செலவுத் தொகை வசூலிக்கப்படும், 4 ஆண்டுக்கு தேர்வு நடத்த தடை விதிக்கப்படும் எனக் கூறப்பட்டுள்ளது.
கள்ளக்குறிச்சியில் விஷச்சாராயம் குடித்து சிகிச்சை பெற்று வந்தவர், நேற்று மருத்துவமனையில் இருந்து தப்பிய நிலையில், இன்று வீட்டில் மரணமடைந்தார். தனக்கு சரியாகிவிட்டது என நினைத்து மருத்துவர்களுக்கே தெரியாமல் வீட்டிற்கு தப்பி வந்த சுப்பிரமணி, நேற்று முழுவதும் வீட்டில் நன்றாக இருந்துள்ளார். ஆனால், இன்று அதிகாலையில் அவர் திடீரென உடல்நலம் பாதிக்கப்பட்டு, பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய இபிஎஸ், கள்ளக்குறிச்சி விஷச்சாராய சம்பவத்துக்கு இதுவரை 55 பேர் பலியாகி இருப்பதாகவும், 183 பேர் உடல்நிலை பாதிக்கப்பட்டு இருப்பதாகவும் தெரிவித்தார். விஷச்சாராயம் இல்லை என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தநிலையில், தாமதமாக சிகிச்சைக்கு வந்ததே உயிரிழப்புக்கு காரணமென அமைச்சர் கூறுவதாகவும், இந்த சம்பவத்துக்கு மாநில அரசே பொறுப்பு என்றும் அவர் சாடினார்.
மகாராஷ்டிரா, ஹரியானா, ஜார்கண்ட், ஜம்மு-காஷ்மீர் சட்டப்பேரவைகளுக்கு, அக்டோபரில் தேர்தல் நடைபெற வாய்ப்புள்ளது. நடந்து முடிந்த மக்களவைத்தேர்தலில் மகாராஷ்டிரா, ஹரியானாவில் பாஜக எதிர்பார்த்த வெற்றி பெறவில்லை. ஹேமந்த் சோரன் கைது, காஷ்மீரில் 370 பிரிவு ரத்து போன்ற காரணங்களால், இந்த 4 மாநிலங்களிலும் பாஜக நெருக்கடியை சந்திக்க வாய்ப்புள்ளது. இந்த வெற்றியை பொறுத்தே என்டிஏ, இண்டியா அணிகளின் பலம் தெரியவரும்.
தமிழகத்தில் கள்ளச்சாராய தடுப்பு நடவடிக்கையாக, கடந்த 3 நாள்களில் 876 பேரை கைது செய்துள்ளதாக, காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. கள்ளக்குறிச்சி விஷச்சாராய மரணத்தை அடுத்து, தமிழகம் முழுவதும் கள்ளச்சாராயத்தை ஒழிக்க,
தீவிர தேடுதல் வேட்டை நடத்தப்படுகிறது. இந்த சோதனையில், 4,657 லிட்டர் சாராயம் பறிமுதல் செய்யப்பட்டு, 861 வழக்குகள் பதியப்பட்டுள்ளதாக, காவல்துறை தரப்பில் கூறப்பட்டுள்ளது.
உங்களுக்கு இருக்கும் நெருக்கடியை சட்டப்பேரவையில் காட்டக் கூடாது என அதிமுக எம்எல்ஏக்களை, சபாநாயகர் அப்பாவு எச்சரித்தார். சட்டப்பேரவை கூடியவுடன், கள்ளக்குறிச்சி விஷச்சாராய சம்பவத்தை விவாதிக்க வலியுறுத்தி அதிமுகவினர் அமளியில் ஈடுபட்டனர். அவர்களை கண்டித்த சபாநாயகர், கேள்வி நேரம் முடிந்த பிறகு அதுகுறித்து விவாதிக்க அனுமதி வழங்குவதாகக் கூறினார். இதனால், அதிமுகவினர் அனைவரும் வெளிநடப்பு செய்தனர்.
மக்கள் பிரச்னை குறித்து சட்டப்பேரவையில் பேசுவதற்கு அனுமதி மறுக்கப்படுவதாக இபிஎஸ் குற்றம்சாட்டியுள்ளார். கள்ளக்குறிச்சி விஷச்சாராய சம்பவத்தில், அமைச்சர் மா.சுப்பிரமணியன் தவறான தகவலை மக்களிடம் பரப்புவதாகக் குறிப்பிட்ட அவர், இந்த விவகாரத்தில் தமிழக அரசு மெத்தனப்போக்காக செயல்படுகிறது என்றார். மேலும், விஷச்சாராயம் அருந்தியவர்கள் தாமதமாக வந்ததால் தான் உயிரிழந்ததாக கூறுவது தவறு எனவும் அவர் கூறியுள்ளார்.
தங்கத்தின் விலை நேற்று ஒரே நாளில் சவரன் ₹640 வரை கடுமையாக உயர்ந்த நிலையில், இன்று குறைந்துள்ளது. அதன்படி, சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ₹680 குறைந்து ₹53,560க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ₹85 குறைந்து ₹6,695க்கு விற்பனையாகிறது. ஒரு கிராம் வெள்ளி விலை ₹2.00 குறைந்து கிராம் ₹96.50க்கும், கிலோ ₹96,500க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
Sorry, no posts matched your criteria.