news

News June 22, 2024

ரேஷன் கடைகள் நாளை இயங்கும்

image

தமிழகத்தில் நாளை ரேஷன் கடைகள் இயங்கும் என உணவு வழங்கல் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் பயனாளர்களை சேர்க்க, கடந்தாண்டு ஜூலை 23 கடைகள் திறக்கப்பட்டன. அந்த விடுமுறையை ஈடுசெய்ய, கடந்த சனிக்கிழமையும், ஞாயிற்றுக் கிழமை வார விடுமுறை அளிக்கப்பட்டது. இந்த நிலையில், நாளை 4ஆவது ஞாயிற்றுக்கிழமை என்பதால் வழக்கம்போல் கடைகள் திறந்திருக்கும் எனக் கூறப்பட்டுள்ளது.

News June 22, 2024

கடவுள் கொடுத்த பரிசு பும்ரா: அம்பத்தி ராயுடு

image

இந்திய அணிக்கு பும்ரா கடவுள் கொடுத்த பரிசு என முன்னாள் வீரர் அம்பத்தி ராயுடு தெரிவித்துள்ளார். எந்த சூழ்நிலையிலும் அதற்கு ஏற்ப தன்னை மாற்றிக் கொள்ளும் ஆற்றல் கொண்டவராக பும்ரா இருப்பதாக அவர் புகழாரம் சூட்டியுள்ளார். கிரிக்கெட் எப்படி விளையாட வேண்டும் என்பதை மற்றவர்களுக்கு சூர்யா குமார் யாதவ் பாடம் நடத்தி வருவதாகவும் பாராட்டினார். இருவரும் ஆஃப்கானுக்கு எதிரான போட்டில் சிறப்பாக விளையாடினார்கள்.

News June 22, 2024

அதிமுக குற்றச்சாட்டுக்கு செல்வப்பெருந்தகை பதிலடி

image

மக்கள் நலனுக்காக திமுகவுடன் 250 ஆண்டுகள் ஒப்பந்தம் போட்டாலும், அதில் எவ்வித தவறும் இல்லை என செல்வப்பெருந்தகை அதிமுகவுக்கு பதிலடி கொடுத்துள்ளார். மக்கள் நலனுக்காக ஒன்றிணைந்து பணியாற்றுவதை அதிமுகவால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார். முன்னதாக, அரசை விமர்சிக்க கூடாது என திமுகவுடன் 25 ஆண்டுகள் காங்கிரஸ் ஒப்பந்தம் போட்டுள்ளதாக இபிஎஸ் விமர்சித்தது நினைவுகூரத்தக்கது.

News June 22, 2024

ஆதாரில் மொபைல் எண்ணை மாற்றுவது எப்படி?

image

ஆதாரில் உள்ள மொபைல் எண்ணை ஆதார் கேந்திரா அலுவலகம் அல்லது இ-சேவை மையத்தில்தான் மாற்ற முடியும். இதற்காக அந்த அலுவலகங்களில் ஏதேனும் ஒன்றுக்கு சென்று, அங்கு தரப்படும் படிவத்தில் விவரத்தை பூர்த்தி செய்து, பயோ மெட்ரிக் எனப்படும் கைவிரல் ரேகையை பதிவிட வேண்டும். அதன் பின்னர் திறக்கப்படும் பக்கத்தில், மொபைல் எண் அப்டேட் செய்யப்படும். இதற்காக ரூ.50 கட்டணம் மட்டும் வசூலிக்கப்படும்.

News June 22, 2024

இந்துஜா குழுமம் முதலீடு செய்துள்ள துறைகள்

image

இந்துஜா குழுமம், நாடுகடந்த கூட்டு நிறுவனமாகும். வாகனம், எண்ணெய் & சிறப்பு ரசாயனங்கள், வங்கி & நிதி, IT, சைபர் பாதுகாப்பு, சுகாதாரம், வர்த்தகம், உள்கட்டமைப்பு திட்ட மேம்பாடு, ஊடகம் & பொழுதுபோக்கு, மின்சாரம், ரியல் எஸ்டேட் உள்ளிட்ட துறைகளில் இந்தக் குழுமம் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. இந்தியாவில் புகழ்பெற்ற அசோக் லேலண்ட் நிறுவனமும், இந்துஜா குழுமத்தின் ஒரு அங்கமாகும்.

News June 22, 2024

யார் இந்த பிரகாஷ் இந்துஜா?

image

ஜெனிவா நீதிமன்றத்தால் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ள இந்துஜா குழுமத்தின் ஐரோப்பிய தலைவர் பிரகாஷ் இந்துஜா, இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர். கடந்த 2000மாவது ஆண்டில் சுவிஸ் குடியுரிமை பெற்ற இவர், குடும்பத்துடன் ஜெனிவாவில் வசிக்கிறார். அங்குள்ள வீட்டுப் பணியாளர்களுக்கு சுவிஸ் பணத்துக்கு பதிலாக, இந்திய ரூபாயில் ஊதியம் வழங்கியது, 18 மணி நேரம் வரை வேலை வாங்கியது போன்ற குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகியுள்ளார்.

News June 22, 2024

ட்விட்டரில் வெளியிடப்பட்ட முதல் பதிவு எது?

image

ட்விட்டர் என முன்பு அழைக்கப்பட்ட X சமூகவலைதளம் 2006ஆம் ஆண்டு மார்ச்சில் தொடங்கப்பட்டது. அதை ஜேக் டோர்சி, பிஸ் ஸ்டோன், இவான் வில்லியம்ஸ் கூட்டாகத் தொடங்கினர். அந்த மாதம் 21ஆம் தேதி இரவு 9.50 மணிக்கு ஜேக் டோர்சி தனது ட்விட்டர் பக்கத்தை வடிவமைத்து முதன்முதலில் “just setting up my twttr” எனப் பதிவிட்டார். இதுவே ட்விட்டர் பக்கத்தில் முதன்முதலில் வெளியிடப்பட்ட பதிவாகும்.

News June 22, 2024

தமிழகத்தில் கனமழை கொட்டும்

image

தமிழகத்தில் அடுத்த 3 நாள்களுக்கு ஒருசில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, இன்று நீலகிரி, கோவை மாவட்டங்களில் மிக கனமழையும், திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, நெல்லை, குமரி மாவட்டங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளதாக கணிக்கப்படுள்ளது. சென்னையில் இரவு வேளையில் இடி, மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

News June 22, 2024

கோயம்பேட்டில் நடைபயிற்சி பூங்கா: அன்புமணி கோரிக்கை

image

கோயம்பேடு புறநகர் பேருந்து நிலைய வளாகத்தில் வணிக மையம் அமைக்கும் திட்டத்தை தமிழக அரசு கைவிட வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி வலியுறுத்தியுள்ளார். மொத்தமுள்ள 66 ஏக்கர் நிலத்திலும், உடற்பயிற்சி, நடைப்பயிற்சி வசதியுடன் கூடிய பூங்காவை அமைக்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார். கோயம்பேட்டில் வணிக வளாகம் அமைக்கப்பட இருப்பதாக தகவல்கள் வெளியான நிலையில், அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

News June 22, 2024

மாதம் ₹4,000 போதும், 10 ஆண்டுகளில் ₹9.31 லட்சம்

image

குறுகிய காலத்தில் மிக அதிக வருவாய் ஈட்ட வேண்டும் என்பது பெரும்பாலானோரின் எண்ணமாக உள்ளது. அவர்களுக்காக எல்ஐசி திட்டமொன்றை வைத்துள்ளது. “நிவேஷ் பிளஸ் 849” என்ற அத்திட்டத்தில் குறைந்தபட்சம் நீங்கள் மாதம் ₹4,000 கட்ட வேண்டும். இதுபோல நீங்கள் 10 ஆண்டுகளுக்கு கட்டினால் மொத்தம் ₹4,80,000 செலுத்தியிருப்பீர்கள். அப்போது போனசுடன் சேர்த்து உங்களுக்கு ₹9,31,923 திரும்பி அளிக்கப்படும்.

error: Content is protected !!