India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மெட்ரோ ரயிலின் 2ஆம் கட்ட திட்டத்துக்கு விரைந்து நிதி அளிக்க வேண்டுமென, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் தமிழக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு கோரிக்கை வைத்துள்ளார். நிதி ஒதுக்குவதில் தாமதம் ஏற்படுவதால், மாநில நிதியில் பெரும் சுமை ஏற்பட்டுள்ளதாக கூறிய அவர், மத்திய அரசின் நிதியுதவியோடு கூடிய திட்டங்களின் நிதிச்சுமையை, மாநில அரசுகள் மீது மத்திய அரசு சுமத்துவதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
இன்றிரவு 7 மணி வரை 22 மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என, சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதன்படி,சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், திருவண்ணாமலை, கடலூர், நீலகிரி, திண்டுக்கல், திருச்சி, புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், மதுரை, விருதுநகர், நெல்லை மற்றும் குமரியில் மழை பெய்ய வாய்ப்புள்ளது.
மயிலாடுதுறை, புதுக்கோட்டை, விருதுநகர், ராமநாதபுரம், திருச்சி, திருவண்ணாமலை, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் சமத்துவபுரங்கள் இந்தாண்டு அமைக்கப்படும். கலைஞர் கனவு இல்லம் திட்டத்தில் ஓராண்டில் ஒரு லட்சம் வீடுகள் கட்டி தரப்படுவதோடு, 2030ஆம் ஆண்டுக்குள் குடிசை இல்லா தமிழகம் அமையும் வகையில், திட்டம் செயல்படுத்தப்படும் என சட்டப்பேரவையில் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி அறிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் அடுத்த 20 நாள்களுக்குள் 4 புதிய மாநகராட்சிகள் உருவாக்கப்படும் என, சட்டப்பேரவையில் அமைச்சர் KN.நேரு அறிவித்துள்ளார். தற்போது 490 ஆக உள்ள பேரூராட்சிகளின் எண்ணிக்கை 700 ஆக உயர்த்தப்படும் என்றும், 21 பேரூராட்சிகள், நகராட்சிகளாக தரம் உயர்த்தப்படும் எனவும் தெரிவித்துள்ளார். நகராட்சிகளின் எண்ணிக்கையும் 139ல் இருந்து 159 ஆக உயர்த்தப்படும் என்றார்.
விமர்சனங்களை தாங்கிக்கொள்ள முடியாத கோழையாக முதல்வர் ஸ்டாலின் இருப்பதாக பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா குற்றம் சாட்டியுள்ளார். கள்ளச்சாராய விற்பனையை திமுக அரசு தடுக்கவில்லை எனக் கூறிய அவர், காவல்துறை முதல்வர் ஸ்டாலினின் ஏவல் துறையாக மாறியுள்ளதாக விமர்சித்துள்ளார். மேலும், தமிழகத்தில் சாராய சாம்ராஜ்யத்தை நிறுவிய கருணாநிதி வழியில், அவரது மகன் ஸ்டாலின் நடப்பதாகவும் விமர்சித்தார்.
தொலைத்தொடர்புத் துறையின் புதிய விதிகள் ஜூன் 26ஆம் தேதி முதல் அமலுக்கு வருவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. புதிய விதியின்படி, பேரிடர், குற்றங்களை தடுத்தல், மக்கள் பாதுகாப்பு போன்ற அவசர காலங்களில் எந்தவொரு தொலைத்தொடர்பு சேவைகள் அல்லது நெட்வொர்க்கையும் மத்திய அரசு அல்லது மாநில அரசு தற்காலிகமாக தனது முழு கட்டுப்பாட்டில் எடுக்க முடியும். அவசர காலங்களில் அரசு எச்சரிக்கை செய்திகளையும் பகிர முடியும்.
நீட் தேர்வை ரத்து செய்தால் நேர்மையான முறையில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள் என மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார். நீட் வினாத்தாள் கசிவு ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான மாணவர்களை மட்டுமே பாதித்துள்ளது என்ற அவர், நீட் தேர்வு தொடர்பாக உச்ச நீதிமன்றம் இறுதி முடிவை எடுக்கும் என்றார். நீட் முறைகேடு தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருகிறது.
கிட்னி ஸ்டோன் எனப்படும் சிறுநீரகக் கல்லால், சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பாதிக்கப்படுகின்றனர். இதற்கு பல்வேறு காரணங்கள் கூறப்பட்டாலும், மிக முக்கியக் காரணமாக சிறுநீர் வருகையில் அதை வெளியேற்றாமல் அடக்கி வைப்பது கூறப்படுகிறது. சிறுநீரை அடக்கி வைக்கையில், அதில் இருக்கும் உப்பு சிறுநீரகத்தில் படிந்து கற்களாக மாறுவதாகவும், பின்னர் வலியை ஏற்படுத்தும் என மருத்துவத்தில் கூறப்பட்டுள்ளது.
நீட் தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்டதாக ஜார்கண்டில் ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஏற்கெனவே தேர்வு எழுதியவர்கள் 4 பேர் உட்பட 13 பேர் இந்த விவகாரத்தில் கைது செய்யப்பட்டிருந்தனர். இந்த விவகாரத்தில் தினந்தோறும் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி வருகின்றன. முக்கிய குற்றவாளியான சிக்கந்தர், முறைகேட்டில் ஈடுபட்டு பல சொத்துகள் வாங்கி குவித்துள்ளார். ஒரு வினாத்தாளுக்கு அவர் ₹40 லட்சம் வரை பெற்றிருக்கிறார்
தேசிய தேர்வு முகமையின் கட்டமைப்பை முழுமையாக மாற்ற மத்திய அரசு குழு அமைத்துள்ளது. இஸ்ரோ முன்னாள் தலைவர் ராதாகிருஷ்ணன் தலைமையில் 7 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. தேசிய தேர்வு முகமையின் பணிகளை ஆய்வு செய்து, மேம்படுத்துவதற்காக, 2 மாதங்களில் அறிக்கை அளிக்கவும் குழுவுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. நீட் முறைகேடுகளைத் தொடர்ந்து இக்குழு அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Sorry, no posts matched your criteria.