India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
விஷச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் பட்டியலில் இடம்பெறாத இருவரின் உடல்களை பிரேத பரிசோதனை செய்ய கள்ளக்குறிச்சி ஆட்சியர் பிரசாந்த் உத்தரவிட்டுள்ளார். இளையராஜா, ஜெயமுருகன் ஆகியோர் மருத்துவனைக்கு கொண்டு வருவதற்கு முன்பே இறந்ததால், பிரேத பரிசோதனை செய்யாமலே உறவினர்கள் அடக்கம் செய்தனர். இந்நிலையில், இருவரின் உடலையும் தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை செய்யப்படவுள்ளது.
இந்திய அணிக்கு ஷமி மீண்டும் திரும்புவது குறித்த தகவல் வெளியாகியுள்ளது. 2023 உலகக் கோப்பையில் 24 விக்கெட்டுகள் எடுத்த ஷமி, காயம் காரணமாக அதன் பிறகு எந்தப் போட்டியிலும் விளையாடவில்லை. அறுவை சிகிச்சைக்கு பிறகு உடல்நிலை சீரான நிலையில், பெங்களூரு கிரிக்கெட் அகாடமியில் அவர் பயிற்சி மேற்கொண்டு வந்தார். இந்நிலையில், செப்டம்பரில் வங்கதேசத்துக்கு எதிரான தொடரில் அவர் பங்கேற்பார் எனக் கூறப்படுகிறது.
நீட் வினாத்தாள் வெளியான விவகாரத்தில் மூளையாக செயல்பட்ட ரவி அட்ரியை உ.பி போலீசார் கைது செய்துள்ளனர். இவர், உ.பியில் இருந்து நீட் வினாத்தாளை பல்வேறு மாநிலங்களுக்கு விநியோகித்தது விசாரனையில் தெரியவந்துள்ளது. மேலும், அம்மாநிலத்தில் காவலர் தேர்வு வினாத்தாள் வெளியானதிலும் இவருக்கு முக்கிய தொடர்பு உள்ளது. இவரிடம் விசாரணையை தீவிர படுத்த உ.பி காவல்துறையினர் முடிவு செய்துள்ளனர்.
T20 WC தொடருக்காக வெஸ்ட் இண்டீசுக்கு சென்றுள்ள ஆப்கானிஸ்தான் அணி வீரர்கள் அவர்களே சமைத்து சாப்பிட்டுள்ளனர். அவர்கள் தங்கியுள்ள ஹோட்டலில் ஹலால் செய்யப்பட்ட உணவுகள் கிடைக்காததால், வெளியே சென்று சாப்பிடும் நிலை ஏற்பட்டுள்ளது. இதை தவிர்க்க ஹோட்டலில் அவர்களே சமைக்க ஆரம்பித்துள்ளனர். கடந்த ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற ODI WC தொடரின்போது இந்தியாவில் அவர்களுக்கு சிறப்பான உணவு வழங்கப்பட்டது.
கள்ளக்குறிச்சியில் விஷச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களுக்கு நிவாரணம் அளிப்பதில் எந்த தவறும் இல்லை என முன்னாள் எம்பி திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார். மேலும் விஷச்சாராயம் குடித்து இறப்பதும் விபத்துதான் எனக்கூறிய அவர், உயிரிழப்பில் யாரும் அரசியல் செய்ய வேண்டாம் என வேண்டுகோள் விடுத்தார். மதுவிற்கு பதிலாக கள் இறக்க அனுமதிப்பது என்பது முழுமையான மதுவிலக்காக இருக்காது என்றார்.
அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்தப்படும். நகராட்சிகள் மற்றும் மாநகராட்சிகளில் 24×7 குடிநீர் விநியோகம் செய்யப்படும். ஓசூர், திருப்பூர், கும்பகோணம், காஞ்சிபுரம், கரூர் ஆகிய மாநகராட்சிகள் மற்றும் எடப்பாடி, மதுராந்தகம், திருவண்ணாமலை, சிதம்பரம் உள்ளிட்ட நகராட்சிகளில் ₹76.30 கோடியில், பேருந்து நிலையங்கள் மேம்படுத்தப்படும் என தமிழக அரசு சட்டப்பேரவையில் அறிவித்துள்ளது.
மொபைல், வாகன எண்களில் 000, 555, 777 என ஒரே எண்கள் 2 அல்லது 3 முறை இருப்பதைப் பார்த்திருப்போம். நியூமராலஜியில் இந்த எண்கள், “ஏஞ்சல் எண்கள்” எனப்படுகின்றன. இந்த எண்கள் தொடர்ந்து பார்வையில் பட்டாலோ, நம் அருகில் இருந்தாலோ அதிர்ஷ்டமானதாகக் கூறப்படுகிறது. அதேநேரத்தில் அனைவருக்கும் ஒரே எண்கள் பாெருந்தாது, பிறந்த தேதி, பெயர் அடிப்படையில் இதனைத் தேர்வு செய்வதே சிறந்தது என்று எண் கணிதம் கூறுகிறது.
ஆண்டுதோறும் திருத்துறைப்பூண்டியில் தேசிய நெல் திருவிழா 2 நாள்கள் நடைபெறுவது வழக்கம். அந்தவகையில் இன்று நடைபெற்ற பாரம்பரிய தேசிய நெல் திருவிழாவுக்கு சென்ற நடிகர் சிவகார்த்திகேயனுக்கு உற்சாக வரவேற்பு கொடுக்கப்பட்டது. மேலும், ‘விவசாயிகளின் தோழன்’ என்ற கேடயமும் வழங்கி கவுரவிக்கப்பட்டார். இந்த திருவிழாவில் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் கலந்துகொண்டனர்.
அயோத்தி ராமர் கோயிலின் தலைமை அர்ச்சகர் லக்ஷ்மிகாந்த் தீக்ஷித் (86) இன்று காலை காலமானார். ஜனவரி 22ஆம் தேதி பால ராமரை பிரதிஷ்டை செய்யும் நிகழ்வை முன்னின்று நடத்தியவர் இவர்தான். கடந்த சில நாட்களாகவே இவர் உடல் நலன் குன்றியிருந்ததாக குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். இவருடைய மறைவுக்கு பிரதமர் மோடி, யோகி ஆதித்யநாத் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
டி20 கிரிக்கெட்டில் 100 சிக்ஸர்களை விளாசிய 2ஆவது தென் ஆப்பிரிக்க வீரர் என்ற சாதனையை குயின்டன் டி காக் படைத்துள்ளார். இங்கிலாந்துக்கு எதிரான சூப்பர் 8 சுற்று போட்டியில் 4 சிக்ஸர்களை அடித்ததன் மூலம் இந்த சாதனையை அவர் படைத்துள்ளார். மேலும், டி20 கிரிக்கெட்டில் 2,500 ரன்களை கடந்த வீரர்கள் பட்டியலிலும் அவர் இடம்பெற்றார். அந்த அணியின் டேவிட் மில்லர் ஏற்கனவே 100 சிக்ஸர் அடித்து சாதனை படைத்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.