India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தமிழகத்தில் 3, 500 சதுர அடி வரை குடியிருப்பு கட்டடங்களுக்கு இனி கட்டட அனுமதி தேவையில்லை என அமைச்சர் முத்துச்சாமி அறிவித்தார். சட்டப்பேரவையில் உரையாற்றிய அவர், 2,500 சதுர அடி நிலத்தில் 3,500 சதுர அடி வரை கட்டப்படும் கட்டடங்களுக்கு கட்டட அனுமதி பெற தேவையில்லை என்றாலும் சுயசான்று மூலம் அனுமதி வழங்கப்படும் என்றும் கூறினார். மேலும், கட்டட விதிகளை முறையாக பின்பற்ற வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தினார்.
வெங்காய விலையைக் கட்டுப்படுத்த 71,000 டன் வெங்காயத்தை மத்திய அரசு கொள்முதல் செய்துள்ளது. விலை உயர்வை கட்டுப்படுத்த மத்திய அரசு மொத்தம் 5 லட்சம் டன் வெங்காயத்தை ஒவ்வொரு ஆண்டும் கொள்முதல் செய்து இருப்பு வைப்பது வழக்கம். அதன்படி, இந்தாண்டில் ஜூன் 20ஆம் தேதி நிலவரப்படி 70,987 டன் வெங்காயத்தை கொள்முதல் செய்துள்ளது. கடந்தாண்டு, இதே கால கட்டத்தில் 74,071 டன் கொள்முதல் செய்யப்பட்டிருந்தது.
கோவை, நீலகிரி மாவட்ட மலை பகுதிகளில் இன்று மிக கனமழை பெய்யக் கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதேபோல, திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, நெல்லை மாவட்டங்களில் உள்ள மலைப்பகுதிகளிலும், குமரி மாவட்டத்தில் சில இடங்களிலும் கனமழை பெய்யக் கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மழை பெய்யும் போது வெளியில் செல்வோர் கவனமாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
கள்ளக்குறிச்சியில் விஷச்சாராயம் குடித்து உயிரிழந்தோர் எண்ணிக்கை 57 ஆக உயர்ந்துள்ளது. தொடர்ந்து, 100க்கும் மேற்பட்டோர் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். கவலைக்கிடமாக இருந்த பலரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் 33 பேரும், சேலம் மருத்துவமனையில் 17 பேரும், விழுப்புரத்தில் 4 பேரும், புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் 3 பேரும் உயிரிழந்துள்ளனர்.
ம.பி.யில் சிம்ஹஸ்தா கும்பமேளா 2028-ஐ முன்னிட்டு இந்தூர் – உஜ்ஜைனி இடையே ‘வந்தே மெட்ரோ’ ரயில்கள் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக அம்மாநில முதல்வர் மோகன் யாதவ் தெரிவித்துள்ளார். அண்மையில் ரயில்வே அமைச்சரிடம் பேசிய போது, மாநிலத்தில் உள்ள பல்வேறு நகரங்களில் வந்தே மெட்ரோ ரயில் சேவை வழங்க அவர் ஒப்புதல் அளித்ததாகவும், அதற்கேற்ப பெருநகரங்களின் போக்குவரத்து மாற்றியமைக்கப்பட உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
கிரிக்கெட் வீரர் முகம்மது ஷமியை சானியா மிர்சா 2ஆவது திருமணம் செய்ய இருப்பதாகத் தகவல்கள் வெளியான வண்ணம் உள்ளன. தற்போது ஹஜ் யாத்திரை சென்றுள்ள சானியா, அங்கிருந்து இன்ஸ்டா பக்கத்தில் இதற்கு பதிலளித்து பதிவு வெளியிட்டுள்ளார். அதில், அமைதி காக்குமாறு கேட்டுள்ளார். வதந்தி என்ற அர்த்தத்தில் பதிவிட்டுள்ளாரா, வதந்தி பரப்ப வேண்டாம் என்று வெளியிட்டுள்ளாரா என்று தெரியாததால் ரசிகர்கள் குழப்பத்தில் உள்ளனர்.
ஏழ்மையில் உள்ள பெண்கள் மற்றும் கணவரால் கைவிடப்பட்ட பெண்களுக்கு 50% மானியத்தில் 40 நாட்டின கோழிக்குஞ்சுகள் வழங்கப்படும் என அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் அறிவித்துள்ளார். சட்டப்பேரவையில் உரையாற்றிய அவர், விவசாயிகளுக்கு 50% மானியத்தில் புல் நறுக்கும் கருவிகள் வழங்கப்படும் என்றும், சென்னை வேப்பேரி கால்நடை மருத்துவக் கல்லூரியில் மாணவியிருக்கு விடுதி கட்டப்படும் என்றும் கூறினார்.
தமிழில் வனமகன் படத்தில் அறிமுகமானவர் சாயிஷா. கடந்த 2019ஆம் ஆண்டு நடிகர் ஆர்யாவை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. திருமணத்திற்கு பிறகு படங்களில் நடிப்பதை குறைத்துக் கொண்ட இவர், நீண்ட இடைவெளிக்கு பின் ‘பத்து தல’ படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடினார். இந்த நிலையில், மீண்டும் படங்களில் நடிக்க திட்டமிட்டுள்ளதாகவும், அதற்காக கதைகள் கேட்டு வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
T20 உலகக் கோப்பை சூப்பர் 8 சுற்றில் இன்று ஆஸ்திரேலியா-ஆஃப்கன் அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்ற AUS அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்ததால், AFG பேட்டிங் செய்து வருகிறது. விளையாடிய 2 போட்டிகளிலும் வென்றுள்ள IND அணி, ஏற்கெனவே அரையிறுதிக்கு தகுதி பெற்றது. முதல் போட்டியில் தோல்வியடைந்த AFG அணி, AUSக்கு எதிரான இன்றைய போட்டியில் தோல்வியடைந்தால், அரையிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை இழக்க நேரிடும்.
கள்ளக்குறிச்சியில் விஷச்சாராயம் குடித்து உயிரிழந்தோர் எண்ணிக்கை 55ஐ கடந்துள்ளது. தொடர்ந்து 100க்கும் மேற்பட்டோர் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். இவ்விவகாரத்தில் தீவிர விசாரணை மேற்கொண்டு வரும் போலீசார் இதுவரை விஷச்சாராயம் விற்றவர்கள் உள்பட 8 பேர் கைது செய்துள்ளனர். இந்நிலையில், இதில் மேலும் ஒரு முக்கிய சாராய வியாபாரியான செந்தில் என்பவரை தனிப்படை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
Sorry, no posts matched your criteria.