news

News June 23, 2024

காஷ்மீரில் 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை

image

காஷ்மீர் பாரமுல்லா மாவட்டத்தின் உரி செக்டார் பகுதியில் 2 தீவிரவாதிகள் என்கவுன்டரில் சுட்டுக்கொல்லப்பட்டனர். எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டுப் பகுதியில் சந்தேகத்திற்கிடமான நடமாட்டம் உள்ளதாக தகவல் கிடைத்ததால் பாதுகாப்பு படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு பதுங்கியிருந்த தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். தொடர்ந்து, பாதுகாப்பு படையினர் நடத்திய பதில் தாக்குதலில் 2 பேர் கொல்லப்பட்டனர்.

News June 23, 2024

ஆண்கள் வன்கொடுமை? புதிய சட்டத்தால் குழப்பம்

image

பாரதிய நியாய சங்கிதா எனும் புதிய கிரிமினல் சட்டம் வருகிற 1ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. முந்தைய கிரிமினல் சட்ட 377ஆவது பிரிவில், ஆண்கள், மூன்றாம் பாலினத்தவர், விலங்குகள் பாலியல் வன்கொடுமை குற்றங்கள், அவை கையாளப்பட வேண்டியவை குறித்த ஷரத்து இடம்பெற்றிருந்தன. புதிய சட்டத்தில் அது இல்லை. இதனால் அத்தகைய குற்றங்கள் எப்படி கையாளப்பட போகின்ற என்ற குழப்பம் மக்கள் மத்தியில் நிலவுகிறது.

News June 23, 2024

தோல்வி பயத்தால் இடைத்தேர்தல் புறக்கணிப்பா?

image

விக்கிரவாண்டி இடைத்தேர்தலை தோல்வி பயத்தால் அதிமுக புறக்கணித்ததாக கூறப்படுவது குறித்து முன்னாள் அமைச்சர் ஆர்.பி உதயகுமாரிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர், தேர்தல் ஜனநாயக முறையில் நடைபெறாது என்பதால் அதிமுக புறக்கணித்திருப்பதாகவும், சூழல் மற்றும் காலத்துக்கு ஏற்ப முடிவெடுப்பது ராஜதந்திரம் என்றும், அதன்படி இடைத்தேர்தல் புறக்கணிப்பு முடிவை இபிஎஸ் எடுத்துள்ளார் என்றும் உதயகுமார் கூறினார்.

News June 23, 2024

பாஜகவில் இருந்து 3 முக்கிய நிர்வாகிகள் நீக்கம்

image

தமிழக பாஜகவில் இருந்து 3 முக்கிய நிர்வாகிகளை நீக்கி அக்கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை அறிவித்துள்ளார். திருவாரூர் மாவட்டத் தலைவர் பாஸ்கர், மாவட்டப் பொதுச்செயலாளர் செந்திலரசன், மயிலாடுதுறை மாவட்ட தலைவர் அகோரம் ஆகியோர் கட்சியின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் விடுவிக்கப்படுவதாக அவர் கூறியுள்ளார். முன்னதாக, கல்யாணராமன், சூர்ய சிவா உள்ளிட்டோர் அக்கட்சியில் இருந்து நீக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

News June 23, 2024

3 ஓவர்களில் அதிரடி சதம்

image

டி20, ஒருநாள் கிரிக்கெட் இல்லாத 1931ஆம் ஆண்டில் வெறும் 3 ஓவர்களில் அதிரடியாக சதமடித்துள்ளார் ஒருவர். ஆஸ்திரேலிய கிரிக்கெட் உலகின் ஜாம்பவனாக வர்ணிக்கப்படும் மறைந்த டான் பிராட்மேன்தான் அவர். அப்போது ஒரு ஓவரில் 8 பந்துகள் வீசப்படும். இதன்படி 24 பந்துகளை எதிர்கொண்ட அவர், முதல் ஓவரில் 33, 2ஆவது ஓவரில் 40, 3ஆவது ஓவரில் 27 ரன் எடுத்து சதமடித்தார். அப்போட்டியில் அவர் மொத்தம் 256 ரன் விளாசினார்.

News June 23, 2024

வாழ்வா? சாவா? கட்டத்தில் ஆஸ்திரேலியா

image

T20 உலகக் கோப்பை தொடரில் இன்று நடைபெற்ற போட்டியில் ஆஃப்கன் அணியிடம் ஆஸ்திரேலியா தோல்வியடைந்தது. இதன்மூலம், அரையிறுதி செல்லும் வாய்ப்பு அந்த அணிக்கு குறைந்துள்ளது. குறிப்பாக, இந்தியாவுடன் நாளை நடைபெறவுள்ள போட்டியில் வெல்ல வேண்டிய கட்டாயத்தில் AUS உள்ளது. அதே சமயம் தோல்வியை தழுவுவதுடன், வங்கதேசத்திற்கு எதிரான போட்டியில் ஆஃப்கன் வெற்றி பெற்றால், உலகக் கோப்பை AUS அணிக்கு எட்டாக்கனியாகிவிடும்.

News June 23, 2024

தமிழகத்தில் இன்று மிக கனமழை கொட்டும்

image

தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இன்று கன முதல் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. அதேநேரம், கேரள மற்றும் கர்நாடகாவில் இன்று அதி கனமழை பெய்யும் என ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்திருப்பதால் மேற்கு கடலோர மாநிலங்களில் அதி கனமழை பெய்து வருகிறது. இதனையடுத்து, உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

News June 23, 2024

வரலாற்று வெற்றிக்கு காரணமான பவுலர்கள்

image

T20 உலகக் கோப்பை தொடரில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி ஆஃப்கன் அணி வரலாற்று வெற்றியை பதிவு செய்துள்ளது. 147 ரன்கள் இலக்கு நிர்ணயித்திருந்தாலும், அபார பந்துவீச்சால் 21 ரன்கள் வித்தியாசத்தில் AFG வெற்றி பெற்றுள்ளது. குறிப்பாக குல்பதின் நைப் (4), நவீன்-உல்-ஹக் (3) முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தி AFG அணியின் வெற்றிக்கு வித்திட்டனர். இதன்மூலம் AUS அணியின் அரையிறுதி கனவுக்கு AFG அணி முட்டுக்கட்டை போட்டுள்ளது.

News June 23, 2024

பாஜக மேலிடத்துக்கு கல்யாண ராமன் கடிதம்?

image

பாஜக கூட்டத்தில் பேசிய தமிழிசை தன்னை விமர்சித்த திருச்சி சூர்யா உள்ளிட்டோர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியதாகவும், அப்போது அண்ணாமலை கல்யாண ராமன் தன்னை விமர்சித்ததாகச் சொன்னதாகவும் கூறப்படுகிறது. இதன் பின்னரே திருச்சி சூர்ய சிவா, கல்யாண ராமன் நீக்கப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது. இந்நிலையில் இதை எதிர்த்து பாஜக மேலிடத்துக்கு கல்யாண ராமன் கடிதம் எழுதியிருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

News June 23, 2024

நீட் முறைகேடு: முதல்வர் ஸ்டாலின் கண்டனம்

image

UGC நெட் தேர்வு ரத்தை தொடர்ந்து, முதுநிலை நீட் தேர்வு ஒத்திவைக்கப்பட்டது ஆயிரக்கணக்கான மருத்துவர்களை விரக்தியில் ஆழ்த்தியுள்ளதாக முதல்வர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். மருத்துவம் போன்ற படிப்புகளுக்கான சேர்க்கையில் மாநில அரசுகளின் உரிமையை மீட்டெடுக்க வேண்டும் என்று வலியுறுத்திய அவர், மருத்துவ படிப்புகளில் நேர்மையான தேர்வு முறையை கொண்ட வர அனைவரும் ஒன்றிணைய வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

error: Content is protected !!