news

News June 23, 2024

நீட் முறைகேட்டை மத்திய அரசு ஏற்றுக்கொண்டுள்ளது: மா.சு

image

முதுநிலை நீட் ஒத்திவைப்பால் மாணவர்கள் அலைக்கழிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் விமர்சித்துள்ளார். நீட் முறைகேடுகளை முதலில் ஏற்க மறுத்த மத்திய அரசு பின்னர் அதை ஒத்துக்கொண்டதாக கூறிய அவர், தேசிய தேர்வு முகமை தலைவரை நீக்கியதன் மூலம் தேர்வில் முறைகேடு நடைபெற்றது வெளிப்படையாக தெரியவந்துள்ளது என்றார். முதுநிலை நீட் தேர்வு இன்று நடைபெற இருந்த நிலையில், திடீரென ஒத்திவைக்கப்பட்டது.

News June 23, 2024

கள்ளக்குறிச்சி போராட்டத்தில் பங்கேற்கும் இபிஎஸ்

image

கள்ளச்சாராய உயிரிழப்புகளைக் கண்டித்து நாளை நடைபெறும் அதிமுக போராட்டத்தில் இபிஎஸ் பங்கேற்பார் என்று அதிமுக அறிவித்துள்ளது. கள்ளச்சாராயத்தை தடுக்கத் தவறியதாக கூறி தமிழக அரசுக்கு எதிராக மாநிலம் தழுவிய போராட்டத்தை நடத்தவுள்ளது அதிமுக. அதில், கள்ளக்குறிச்சி ஆட்சியர் அலுவலகம் அருகே நடைபெற உள்ள போராட்டத்தில் பொதுச் செயலாளர் இபிஎஸ் கலந்து கொள்ளவுள்ளார்.

News June 23, 2024

இன்று இரவு தூங்க மாட்டேன்: ரஷீத் கான்

image

ஆஸி., அணிக்கு எதிரான வெற்றியை நினைத்து இரவு தூங்க மாட்டேன் என ஆஃப்கன் கேப்டன் ரஷீத் கான் தெரிவித்துள்ளார். கடந்த 2023 உலகக் கோப்பையில் ஆஸி.,க்கு எதிரான போட்டியில் 90% ஆட்டம் எங்களின் கையில் இருந்தும், அதனை மேக்ஸ்வெல் மாற்றியதாக தெரிவித்த அவர், இந்த முறை அப்படி எதுவும் நடக்காததில் மகிழ்ச்சி என்றார். சூப்பர் 8 போட்டியில் ஆஸி, அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் ஆஃப்கனிடம் தோல்வி அடைந்தது.

News June 23, 2024

பூமி மீது மோதப் போகும் விண்கல்

image

அமெரிக்க நாசா அமைப்பு மற்றும் சர்வதேச அமைப்புகளைச் சேர்ந்த 100 பேர், விண்வெளியில் சுற்றும் விண்கற்களை ஆய்வு செய்து வருகின்றனர். இந்த ஆய்வில், எதிர்காலத்தில் விண்கல் ஒன்று பூமி மீது மோத இருப்பது தெரிய வந்துள்ளது. அதாவது, 14 ஆண்டுகள் கழித்து 2038இல் ஜூலை 12ஆம் தேதி விண்கல் ஒன்று மோத 72% மோத வாய்ப்பிருப்பதை கண்டறிந்துள்ளனர். அந்த விண்கல்லால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து ஆலோசித்து வருகின்றனர்.

News June 23, 2024

சிபிஐ விசாரணை கேட்பதில் உள்நோக்கம்: ஆர்.எஸ்.பாரதி

image

கள்ளக்குறிச்சி விவகாரத்தில் அண்ணாமலை சிபிஐ விசாரணை கேட்பதில் உள்நோக்கம் இருப்பதாக ஆர்.எஸ்.பாரதி கூறியுள்ளார். இந்த உயிரிழப்புக்கு காரணமானவர்களில் அண்ணாமலையின் ஆட்களும் இருப்பதால் விசாரணையை தாமதப்படுத்தவே சிபிஐ விசாரணை கேட்பதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார். முன்னதாக, கள்ளக்குறிச்சி உயிரிழப்பை கட்டாயம் சிபிஐ விசாரிக்க வேண்டும் என அண்ணாமலை கூறியிருந்தார்.

News June 23, 2024

அண்ணாமலையை ஏன் நீக்கவில்லை?: சூர்யா

image

கட்சியின் கட்டுப்பாட்டை மீறியதாக தன்னை நீக்கியவர்கள் ஏன் தமிழிசையையும் அண்ணாமலையையும் நீக்கவில்லை என்று பாஜக முன்னாள் நிர்வாகி திருச்சி சூர்யா கேள்வி எழுப்பியுள்ளார். மாநிலத் தலைவரான அண்ணாமலையை விமர்சனம் செய்த தமிழிசை மீதும் நடவடிக்கை எடுக்கவில்லை, அவர் மீதான விமர்சனம் உண்மையென்றால் அண்ணாமலையையும் நீக்கவில்லை. ஆனால், என்னை மட்டும் நீக்கியிருக்கிறார்கள் என்று சூர்யா விமர்சித்துள்ளார்.

News June 23, 2024

நீட் முறைகேடு தொடர்பாக வழக்குப்பதிவு

image

நீட் தேர்வு முறைகேடு தொடர்பாக மத்திய அரசின் பரிந்துரையின் பேரில் வழக்குப்பதிவு செய்துள்ளது சிபிஐ. இந்த ஆண்டு நடந்த நீட் தேர்வில் கருணை மதிப்பெண் வழங்கப்பட்டது எப்படி, வினாத்தாள் கசிவு என அடுத்தடுத்து புகார்கள் எழுந்து வந்தன. இது தொடர்பாக தேசிய தேர்வு முகமையின் தலைவர் நீக்கப்பட்டிருக்கும் நிலையில் வழக்கினை சிபிஐ தீவிரமாக விசாரித்து வருகிறது.

News June 23, 2024

உடல்கள் தோண்டி எடுக்கப்படுகிறது

image

கள்ளக்குறிச்சியில் புதைக்கப்பட்ட இருவரின் பிரேதங்களை தோண்டி எடுக்கும் பணிகள் தொடங்கியுள்ளன. அவர்களும் விஷச்சாராயம் அருந்திதான் மரணமடைந்ததாக உறவினர்கள் கூறும் நிலையில், அரசாங்க பதிவேட்டில் அவர்களது பெயர் இல்லை. இதனால் தலா ₹10 லட்சம் நிவாரணம் கிடைக்காமல் போகும் என்பதால் உறவினர்கள் போராட்டத்தில் குதித்தனர். இதனையடுத்து, பிரேதப் பரிசோதனை செய்ய உடல்கள் தோண்டி எடுக்கப்படுகின்றன.

News June 23, 2024

கண்ணன் பிறந்த ஊருக்கு செல்லும் ‘கல்கி’ படக்குழு

image

பிரபாஸ், அமிதாப், கமல், தீபிகா ஆகியோர் நடிப்பில் உருவாகியிருக்கும் கல்கி திரைப்படம் 27ஆம் தேதி வெளியாகவுள்ளது. இதனை முன்னிட்டு கிருஷ்ணர் பிறந்த ஊரான மதுராவுக்கு செல்கிறது படக்குழு. படத்தின் தீம் பாடல் இன்று மதுராவின் நதிக்கரையில் வெளியிடப்படவுள்ளது. முன்னதாக, புஜ்ஜி கார் மூலம் நாடு முழுவதும் இப்படத்திற்கு விளம்பரம் செய்யப்பட்டது.

News June 23, 2024

மாணவர்களுக்கு நீதி கிடைப்பதற்கு அரசே பொறுப்பு

image

நீட் யுஜி தேர்வு ஒத்திவைக்கப்பட்டதில், மாணவர்களுக்கு நீதி கிடைப்பதற்கு மத்திய மோடி அரசே பொறுப்பு என்று கார்கே தெரிவித்துள்ளார். அதிகாரிகளை மாற்றுவதால் மட்டும் பாஜகவால் கல்வியில் உருவாக்கப்பட்ட பிரச்னையை சரி செய்ய முடியாது என்றும், தேசிய தேர்வு முகமை சுதந்திரமான அமைப்பாக கூறப்பட்டாலும், உண்மையில் பாஜக, ஆர்எஸ்எஸ்ஸின் வஞ்சகத் திட்டங்களுக்கு சேவை செய்கிறது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

error: Content is protected !!