news

News June 23, 2024

அழுத்தம் இருந்தாலும் சிறப்பாக விளையாட வேண்டும்

image

டி20 உலகக் கோப்பை தொடரில் நாளை இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன. இன்று நடைபெற்ற போட்டியில் ஆஃப்கானிஸ்தானிடம் ஆஸ்திரேலியா தோற்றுவிட்டதால் நாளைய போட்டி KnockOutஆக மாறியுள்ளது. இது தொடர்பாக பேசியுள்ள ஆஸ்திரேலிய கேப்டன் மிட்ச்சல் மார்ஷ், “வாழ்வா சாவா என்ற அழுத்தத்திலும் எங்களது வீரர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார்கள் என்று நம்புகிறேன்” என நம்பிக்கை தெரிவித்தார்.

News June 23, 2024

நாளை கூடுகிறது நாடாளுமன்றக் கூட்டத் தொடர்

image

மூன்றாவது முறையாக மோடி பிரதமரான பின் முதல் முறையாக கூட்டத் தொடர் நாளை பகல் 11 மணிக்கு கூடுகிறது. புதிதாக தேர்ந்தெடுக்கபட்ட எம்பிக்கள் நாளை பதவியேற்றுக் கொள்கின்றனர். அதன்பின், ஜூன் 26ஆம் தேதி சபாநாயகர் தேர்வு நடைபெறவுள்ளது. ஜூன் 27ஆம் தேதி குடியரசுத் தலைவர் உரையாற்றுகிறார். தொடர்ந்து, ஜூலை 2, 3 தேதிகளில் குடியரசுத் தலைவர் உரை மீது பிரதமர் பதிலளிக்கவுள்ளார்.

News June 23, 2024

மவுனம் ஏன்? பாஜக கேள்வி

image

கள்ளக்குறிச்சி விஷச்சாராய உயிரிழப்பு குறித்து INDIA கூட்டணி கட்சிகள் ஏன் வாய் திறக்கவில்லை என பாஜக எம்பி சம்பித் பத்ரா விமர்சித்துள்ளார். இந்த சம்பவத்தில் இதுவரை 57 பேர் உயிரிழந்துள்ள நிலையில், இதுபற்றி காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் ஏன் கண்டனம் தெரிவிக்கவில்லை என்று கேள்வி எழுப்பிய அவர், இந்த சோக சம்பவத்தில் INDIA கூட்டணியின் அமைதி ஆச்சரியத்தை ஏற்படுத்துவதாகவும் தெரிவித்துள்ளார்.

News June 23, 2024

மாணவர்கள் வாழ்க்கையோடு மத்திய அரசு விளையாடுகிறது

image

மாணவர்களின் வாழ்க்கையோடு மத்திய அரசு விளையாடுவதாக ஐக்கிய மருத்துவர்கள் சங்க பொதுச்செயலாளர் அருண் குமார் கண்டனம் தெரிவித்துள்ளார். தேர்வின் நம்பகத்தன்மையை காப்பதாகக் கூறி நேற்று நீட் PG தேர்வு ரத்து செய்யப்பட்ட நிலையில், நீட் PG தேர்வு நம்பகத் தன்மையை எப்போதோ இழந்துவிட்டது என விமர்சித்துள்ளார். மேலும், தேர்வுகளை ஒத்திவைப்பது இன்னும் எவ்வளவு காலம் நீட்டிக்கும் என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

News June 23, 2024

7 நாள்கள் வங்கிகளுக்கு விடுமுறை

image

தமிழகத்தில் ஜூலை மாதம் 7 நாள்கள் வங்கிகள் செயல்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஜூலை 7, 14, 21, 28 ஆகிய தேதிகள் ஞாயிற்றுக் கிழமைகளில் வருவதால் வங்கிகள் இயங்காது. ஜூலை 13 இரண்டாவது சனி, ஜூலை 27 நான்காவது சனி ஆகிய தினங்களில் வங்கிகள் இயங்காது. அதோடு, ஜூலை 17 புதன்கிழமை மொஹரம் வருவதால் வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

News June 23, 2024

தேவையில்லாத பில்டப் தருகிறார்கள்: ஷேவாக்

image

வங்கதேச அணிக்கு தேவையில்லாத பில்டப்பை தருவதாக இந்திய அணியின் முன்னாள் வீரர் ஷேவாக் விமர்சித்துள்ளார். ஷகிப் உள்ளிட்ட அனுபவ வீரர்களும் வங்கதேச அணியின் வெற்றிக்கு உதவவில்லை என்றார். ஏற்கெனவே, உலகக் கோப்பை தொடரில் ஷகிப் சிறப்பாக செயல்படவில்லை என ஷேவாக் விமர்சித்து இருந்த நிலையில், அதற்கு ஷேவாக் யார்? என ஷகிப் கேள்வி எழுப்பியிருந்தது குறிப்பிடத்தக்கது.

News June 23, 2024

கங்கனாவிடம் மன்னிப்பு கோரினார் நடிகர் அன்னு கபூர்

image

விமான நிலையத்தில் பெண் அதிகாரியால் கங்கனா ரணாவத் தாக்கப்பட்டது குறித்து மூத்த இந்தி நடிகர் அன்னு கபூரிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர், கங்கனா யார், நீங்கள் கேள்வி கேட்பதால் அவர் பெரிய நடிகராகதான் இருப்பார், அவர் அழகானவரா, சக்திவாய்ந்தவரா எனக் கேட்டிருந்தார். இதற்கு கங்கனா ரணாவத் கண்டனம் தெரிவித்ததையடுத்து, தனது பேச்சுக்காக மன்னிப்பு கேட்பதாக அன்னு கபூர் கூறியுள்ளார்.

News June 23, 2024

இடைத்தேர்தலில் திமுகவுக்கு மஜக ஆதரவு

image

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளரை ஆதரித்து பரப்புரை செய்ய இருப்பதாக மனிதநேய ஜனநாயக கட்சி தலைவர் தமிமுன் அன்சாரி தெரிவித்துள்ளார். மஜக மாநிலத் செயலாளர் ஷஃபி தலைமையில் விரைவில் தேர்தல் பணிக்குழு அமைக்கவுள்ளதாக தெரிவித்த அவர், சிலநாட்களில் பரப்புரையை தொடங்கவுள்ளதாக தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற தேர்தலிலும் திமுக கூட்டணியை மஜக ஆதரித்தது குறிப்பிடத்தக்கது.

News June 23, 2024

12வது குழந்தைக்கு தந்தையானார் எலான் மஸ்க்

image

டெஸ்லா நிறுவனத்தின் தலைவர் எலான் மஸ்க், 12வது குழந்தைக்கு தந்தையாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மஸ்க்கிற்கு பல காதலிகள் உள்ளதாகக் கூறப்படும் நிலையில், மஸ்க் – ஷிவோன் ஜிலிஸ் தம்பதிக்கு தற்போது 3ஆவது குழந்தை பிறந்துள்ளது. இதுவே அவரது 12வது குழந்தை எனக் கூறப்படுகிறது. கனேடிய பாடகி கிரிம்ஸ் – மஸ்க் தம்பதிக்கு 3 குழந்தைகள் உள்ளன. இது தவிர அவருக்கு மேலும் 6 குழந்தைகள் உள்ளதாகவும் கூறப்படுகிறது.

News June 23, 2024

தேர்வு ஒத்திவைப்பு தொடர் கதையாகி வருகிறது: காங்கிரஸ்

image

மாணவர்களின் எதிர்காலத்துடன் பாஜக விளையாடி வருவதாக விருதுநகர் காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார். ஒவ்வொரு நாளும் வினாத்தாள் கசிவதும், தேர்வுகள் ஒத்தி வைக்கப்படுவதும் தொடர் கதையாகி விட்டதாகவும் அவர் பாஜக அரசை விமர்சித்துள்ளார். ஏற்கெனவே நீட் தேர்வு விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், இன்று நடைபெறுவதாக இருந்த முதுநிலை நீட் தேர்வை மத்திய அரசு திடீரென ஒத்திவைத்தது.

error: Content is protected !!