news

News June 23, 2024

வயநாடு மக்களுக்கு நன்றி தெரிவித்த ராகுல்

image

வயநாடு மக்களுக்கு நன்றி தெரிவித்து காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி கடிதம் எழுதியுள்ளார். 5 ஆண்டுகளுக்கு முன் ஆதரவு கேட்டு வந்த தனக்கு மிகப்பெரிய வெற்றியை பரிசளித்தீர்கள் என்று தெரிவித்துள்ள அவர், வயநாடு மக்களுக்காக பணியாற்றியது மன நிறைவாகவும், மகிழ்ச்சியாகவும் இருந்ததாக கூறியுள்ளார். வயநாடு, ரேபரேலி தொகுதியில் வெற்றி பெற்ற அவர், வயநாடு தொகுதியின் எம்பி பதவியை ராஜினாமா செய்தது குறிப்பிடத்தக்கது.

News June 23, 2024

புதிய சாதனை படைத்த ஸ்மிருதி மந்தனா

image

தென்னாப்பிரிக்கா மகளிர் அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இந்திய வீராங்கனை ஸ்மிருதி மந்தனா 343 ரன்கள் எடுத்து புதிய சாதனை படைத்துள்ளார். முதல் இரு போட்டிகளிலும் சதம் அடித்த அவர் (117,136) இன்றைய போட்டியில் சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 90 ரன்னில் ஆட்டமிழந்தார். இருப்பினும் மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் அதிக ரன்கள் எடுத்த வீராங்கனை என்ற சாதனையைப் படைத்துள்ளார்

News June 23, 2024

விஜய் சேதுபதியுடன் இணையும் பாண்டிராஜ்?

image

விஜய் சேதுபதி நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘மகாராஜா’ படம் வெற்றிகரமாக ஓடி வருகிறது. இப்படத்தை தொடர்ந்து அவர் நடித்துள்ள ‘ஏஸ்’ படம் விரைவில் வெளியாக உள்ளது. இந்நிலையில், அடுத்ததாக அவர் பாண்டிராஜ் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனக் கூறப்படுகிறது. கடைசியாக பாண்டிராஜ் ‘எதற்கும் துணிந்தவன்’ படத்தை இயக்கியிருந்தார்.

News June 23, 2024

மறுதேர்வை 750 மாணவர்கள் எழுதவில்லை

image

இன்று 1,563 மாணவர்களுக்கு நீட் மறுதேர்வு நடைபெற்ற நிலையில், இத்தேர்வை 750 மாணவர்கள் எழுதவில்லை என்ற அதிர்ச்சித் தகவல் வெளியாகியிருக்கிறது. நீட் தேர்வு மையத்தில் ஏற்பட்ட சிக்கல்கள் மற்றும் தவறான வினாத்தாள் வழங்கப்பட்டதாக 1,563 மாணவர்களுக்கு கருணை மதிப்பெண் வழங்கப்பட்டது. இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், அவர்கள் அனைவருக்கும் இன்று மறுதேர்வு நடத்த நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது.

News June 23, 2024

T20 WC: இங்கிலாந்து அணி பவுலிங்

image

டி20 உலகக்கோப்பையில் இன்று நடைபெறும் போட்டியில் இங்கிலாந்து மற்றும் அமெரிக்கா அணிகள் மோதுகின்றன. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து பவுலின் தேர்வு செய்துள்ளது. இதையடுத்து இன்னும் சற்று நேரத்தில் அமெரிக்கா பேட்டிங் செய்ய உள்ளது. இதுவரை இரு அணிகளும் 2 போட்டிகளில் விளையாடியுள்ள நிலையில், அமெரிக்கா ஒரு வெற்றிகூட பெறாத நிலையில் இங்கிலாந்து 1 வெற்றிபெற்றுள்ளது. இன்று எந்த அணி வெற்றிபெறும்?.

News June 23, 2024

சாராய வேட்டைக்குச் சென்ற 7 பேர் மாயம்

image

கல்வராயன் மலையில் சாராய வேட்டைக்குச் சென்ற 7 போலீசார் திரும்பி வராததால் பதற்றம் நிலவுகிறது. விஷச்சாராயம் அருந்தி 57 பேர் உயிரிழந்ததால் கல்வராயன் பகுதியில் 20 போலீசார் தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர். அதில், 13 பேர் மதியம் உணவுக்காக காட்டில் இருந்து வெளியே வந்த நிலையில் 7 பேர் திரும்பவில்லை. அடர்ந்த காடு என்பதால் அவர்கள் வழிதவறி சென்றிருக்கலாம் என்று போலீசார் கூறுகின்றனர்.

News June 23, 2024

‘நீட்’ 17 மாணவர்கள் தகுதி நீக்கம்

image

பிஹாரில் நீட் தேர்வு எழுதிய 17 மாணவர்கள் தகுதி நீக்கம் செய்யப்படுவதாக தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. நீட் வினாத்தாள் கசிந்த விவகாரத்தில், 17 மாணவர்களுக்கு தொடர்பிருப்பது கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், அவர்கள் மீண்டும் தேர்வு எழுதி தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், உ.பி, மே.வங்கம் மாநிலங்களை சேர்ந்த மாணவர்களிடமும் இது தொடர்பாக விசாரணை நடைபெறுவதாக தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது.

News June 23, 2024

ரூபாய் நோட்டுகளில் இதை கவனித்திருக்கிறீர்களா?

image

ரூபாய் நோட்டுகளின் இரண்டு புறமும் சிறிய அளவிலான கோடுகல் இருப்பதை பார்த்திருப்பீர்கள். பார்வையற்றவர்களும் எளிதில் அடையாளம் காண்பதற்கு ஏதுவாகவே இந்த கோடுகள் இடம்பெற்றுள்ளன. உதாரணமாக நூறு ரூபாய் நோட்டில் இருபுறமும் நான்கு கோடுகள் இருப்பதைக் காணலாம். இருநூறு ரூபாய் நோட்டிலும் நான்கு கோடுகள் இருந்தாலும், மத்தியில் இரு பூஜ்யம் இருக்கும். ஐந்நூறு ரூபாய் நோட்டில் 5 கோடுகளும் இடம்பெற்றிருக்கும்.

News June 23, 2024

அடுத்த 3 மணி நேரத்துக்கு ஆரஞ்சு அலர்ட்

image

இரவு 10 மணி வரை திருவாரூர், மயிலாடுதுறை, நாகை மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மழை பெய்யும் என்று MET அறிவித்துள்ளது. இதற்கான ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. மேலும், நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், தஞ்சை, சேலம், கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், தர்மபுரி, திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு, திருவள்ளூர், குமரி, நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் லேசான மழை பெய்யும்

News June 23, 2024

எல்லா ஆட்சியிலும் பலிகள் தொடர்கிறது: வேல்முருகன்

image

கள்ளச்சாராய உற்பத்தியை தடுக்க கடுமையான சட்டங்களை கொண்டு வர வேண்டும் என தவாக கட்சித் தலைவர் வேல்முருகன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் எந்த ஆட்சி நடைபெற்றாலும் கள்ளச்சாராய சாவுகள் என்பது தொடர் கதையாகி வருவதாக குற்றம் சாட்டிய அவர், இதனை தடுக்க வார்டு உறுப்பினர் முதல் எம்பி வரை பொறுப்பேற்கும் வகையில் கடுமையான சட்டத்தை இயற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

error: Content is protected !!