news

News June 23, 2024

ஜூன் 24: 12 ராசிகளுக்கான பலன்கள்

image

*மேஷம் – ஜெயம் உண்டாகும், *ரிஷபம் – நலம் பெறுவீர்கள், *மிதுனம் – பயத்தை தவிருங்கள், *கடகம் – பரிவு காட்டுங்கள், *சிம்மம்- ஆசையை கட்டுப்படுத்துங்கள் , * கன்னி – வாழ்வு சிறக்கும், *துலாம் – பரிசு கிடைக்கும், *விருச்சிகம் – செலவு ஏற்படலாம், *தனுசு – பணம் கிடைக்கும், *மகரம் – ஆர்வமாக இருங்கள், *கும்பம் – தெளிவு பெறுங்கள், *மீனம் – உறுதியாக இருங்கள்.

News June 23, 2024

நாளை மாலை அடுத்த படத்தை அறிவிக்கிறார் பா.ரஞ்சித்

image

‘அட்டகத்தி’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானவர் பா.ரஞ்சித். இவர் ‘நீலம்’ புரொடக்சன் மூலம் பல படங்களை தயாரிக்கவும் செய்துள்ளார். இந்நிலையில், நீலம் புரொடக்சன் மூலம் தான் தயாரிக்கும் அடுத்த படத்தின் அறிவிப்பை நாளை மாலை வெளியிடுவதாக போஸ்டர் மூலம் தெரிவித்துள்ளார். கடைசியாக இவரது தயாரிப்பில் வெளியான ‘ப்ளு ஸ்டார்’, ‘ஜே.பேபி’ ஆகிய படங்கள் நல்ல வரவேற்பை பெற்றது.

News June 23, 2024

அரையிறுதிக்கு தகுதி பெற்றது இங்கிலாந்து

image

டி20 உலகக்கோப்பையில் அமெரிக்காவுக்கு எதிரான போட்டியில் 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்ற இங்கிலாந்து அணி முதல் அணியாக அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. USA நிர்ணயித்த 116 ரன்கள் இலக்கை துரத்தி ஆடிய ENG 9.4 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 117 ரன்கள் எடுத்து வெற்றிபெற்றது. அதிரடியாக விளையாடிய பட்லர் 83* ரன்கள் எடுத்து அணியின் வெற்றிக்கு வித்திட்டார்.

News June 23, 2024

மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா சஸ்பெண்ட்

image

2022 டோக்கியோ ஒலிம்பிக்கில் மல்யுத்தத்தில் வெண்கல பதக்கம் வென்று இந்தியாவிற்கு பெருமை சேர்ந்தவர் பஜ்ரங் புனியா. இவரை இடைநீக்கம் செய்து, தேசிய ஊக்க மருந்து தடுப்பு ஆணையம் நடவடிக்கை எடுத்துள்ளது. ஊக்கமருந்து தடை விதியை மீறிய காரணத்திற்காக அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். இதற்கு முன்பும், இவர் இடைநீக்கம் செய்யப்பட்டு, பிறகு ஒழுங்குமுறை குழுவால் அந்த நோட்டீஸ் திரும்பப் பெறப்பட்டது.

News June 23, 2024

இரவில் மழை பெய்யவிருக்கும் மாவட்டங்கள்

image

தமிழகத்தில் இரவு 1 மணி வரை மழை பெய்யவிருக்கும் மாவட்டங்களின் பட்டியலை சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதன்படி, நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, விருதுநகர், மதுரை, கன்னியாகுமரி, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

News June 23, 2024

தேர்வுக்குப் பதிலாக பாஜக அரசை ரத்து செய்யலாம்

image

நெட், நீட் போன்ற தேர்வுகளை ரத்து செய்வதற்குப் பதிலாக பாஜக அரசை ரத்து செய்யலாம் என சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் விமர்சித்துள்ளார். நெட் மற்றும் நீட் தேர்வுகளில் முறைகேடு நடந்ததாக புகார்கள் எழுந்த நிலையில், இன்று நடைபெறவிருந்த நீட் தேர்வும் ஒத்திவைக்கப்படுவதாக அரசு அறிவித்தது. இந்நிலையில், இது பாஜக அரசின் நிர்வாகத் திறமையின்மையைக் காட்டுவதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன.

News June 23, 2024

இங்கிலாந்து அரையிறுதி செல்ல இதை செய்ய வேண்டும்

image

டி20 உலகக் கோப்பை போட்டியில் இங்கிலாந்துக்கு எதிரான சூப்பர் 8 சுற்று போட்டியில் அமெரிக்கா 115 ரன்கள் எடுத்துள்ளது. இங்கிலாந்து இப்போட்டியில் வெற்றிபெறும் பட்சத்தில் புள்ளிப் பட்டியலில் முன்னேறும். அதேநேரம் இங்கி., இப்போட்டியில் 18.4 ஓவரில் வெற்றிபெற்றால் எளிதாக அரையிறுதிக்கு சென்று விடும். மாறாக 18.5 ஓவரில் வெற்றிபெற்றால், மற்ற அணிகளை நம்பி இருக்கவேண்டிய சூழல் ஏற்படும்.

News June 23, 2024

விபத்தில் சிக்கியோருக்கு ரத்த பரிசோதனை கட்டாயம்

image

சாலை விபத்தில் சிக்கி சிகிச்சை பெற வருவோர் மது அருந்தியிருந்தால் ரத்த பரிசோதனை கட்டாயம் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மருத்துவமனைகளுக்கும் இந்த அறிவிப்பாணையை சுகாதாரத்துறை செயலாளர் ககன்தீப் சிங் பேசி அனுப்பியுள்ளார். விபத்து வழக்குகளில் இழப்பீடுகளை தீர்மானிக்க முடியாத நிலை இருப்பதாக ஐகோர்ட் கூறியிருந்த நிலையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

News June 23, 2024

சாதனையை தவறவிட்ட பேட் கம்மின்ஸ்

image

டி20 உலகக் கோப்பையில் இரண்டாவது முறையாக ஹாட்ரிக் எடுத்த ஆஸி., வீரர் பேட் கம்மின்ஸ் ஒரு முக்கிய சாதனையை தவற விட்டுள்ளார். ஆஃப்கன் அணிக்கு எதிராக இன்றைய போட்டியில், ஹாட்ரிக் எடுத்த அவர், தொடர்ந்து 4 விக்கெட்டை எடுக்க வாய்ப்பிருந்தும், ஆஃப்கன் வீரர் கொடுத்த கேட்சை வார்னர் தவறவிட்டார். இதன் மூலம் 4 பந்தில் 4 விக்கெட்டை வீழ்த்திய மலிங்காவின் சாதனையை அவரால் சமன் செய்ய முடியவில்லை.

News June 23, 2024

தஜிகிஸ்தானில் பெண்கள் ஹிஜாப் அணிய தடை

image

தஜிகிஸ்தான் அரசு அந்நாட்டு பெண்கள் பொதுவெளியில் ஹிஜாப் அணிய தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. இந்த ஹிஜாப் தடையை மீறும் பெண்களுக்கு இந்திய மதிப்பில் ₹5 லட்சம் அபராதம் விதிக்கப்படும் என தெரிவித்துள்ள அந்நாட்டு அரசு, தங்களின் தேசிய உடையான தாஜிக்கை ஊக்குவிக்கவே இந்த நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவித்துள்ளது. தஜிகிஸ்தானின் இந்த நடவடிக்கைக்கு பல்வேறு நாடுகளும் கண்டனம் தெரிவித்துள்ளன.

error: Content is protected !!