India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
டெல்லியை சேர்ந்த தாஹீர், சவுதியில் வேலை செய்து வருகிறார். அவர், தனது மகள் பர்வீனாவை (17) காணவில்லை என மின்னஞ்சல் மூலம் போலீசில் புகார் அளித்துள்ளார். அதைத் தொடர்ந்து, அவரது வீட்டிற்கு சென்று சோதனை செய்ததில், தாயே மகளை புதைத்தது தெரியவந்துள்ளது. தான் கொலை செய்யவில்லை எனவும், மகள் தற்கொலை செய்து கொண்டதால் புதைத்ததாகவும் தாய் அனிதா பேகம் தெரிவித்துள்ளார். போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கடந்த 21ஆம் தேதி முதல் தமிழக சட்டசபையில் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், ஒரு நாள் விடுமுறைக்கு பின் இன்று காலை 9.30 மணிக்கு மீண்டும் சட்டசபை கூடுகிறது. கேள்வி நேரம் முடிந்ததும் உயர்கல்வித்துறை, பள்ளிக் கல்வித்துறை, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை, இயற்கை சீற்றங்கள் குறித்த துயர்தணிப்பு உள்ளிட்ட மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற உள்ளது.
இன்று (ஜூன் 24) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க!
தென்னாப்பிரிக்கா மகளிர் அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில், அனைத்திலும் வென்று இந்திய அணி கோப்பையை கைப்பற்றியுள்ளது. முதல் போட்டியில் 143 ரன்கள், 2ஆவது ஆட்டத்தில் 4 ரன்கள், நேற்று நடந்த கடைசி போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்திலும் வென்றது. இந்த நிலையில், கோப்பையை பெற்றுக் கொண்ட பின், இந்திய வீராங்கனை ஜெமிமா ரோட்ரிக்ஸ் எடுத்த செல்ஃபி வைரலாகி வருகிறது.
உலகின் தலைசிறந்த வீரர்களில் இந்திய அணியின் ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்டியாவும் ஒருவர் என இந்திய அணியின் முன்னாள் வீரர் வருண் ஆரோன் கூறியுள்ளார். ஐபிஎல்லில் ஃபார்ம் இல்லை, பந்துவீச்சில் ஜொலிக்க வில்லை என உலகக் கோப்பைக்கு முன்பு ஹர்திக் கடினமான சூழ்நிலைகளை எதிர்கொண்டதாகக் கூறினார். இருப்பினும், டி20 உலகக் கோப்பையில் அவர் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருவதாக புகழ்ந்துள்ளார்.
இன்று (ஜூன் 24) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க!
*கள்ளக்குறிச்சியில் விஷச்சாராயம் குடித்து பலியானவர்களின் எண்ணிக்கை 57ஆக உயர்ந்தது. *கலைஞர் கனவு இல்லம் திட்டத்தில், இந்த ஆண்டு 1 லட்சம் வீடுகள் கட்டப்படும் என அமைச்சர் ஐ.பெரியசாமி அறிவித்துள்ளார். *T20 WC சூப்பர் 8 சுற்றில் ஆஸ்திரேலியா அணியை 21 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது ஆஃப்கன் அணி. *தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான மூன்று ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளிலும் இந்திய மகளிர் அணி வெற்றி பெற்றது.
இந்திய விமானப்படையில் பிளையிங், கிரவுண்ட் டியூட்டி ஆகிய பிரிவுகளில் காலியாக உள்ள 304 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு BE, B.Tech படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். ஆன்லைன் தேர்வு, உடற்தகுதி, நேர்காணல் தேர்வு ஆகிய முறைகளில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். விருப்பமுள்ளவர்கள் ஜூன் 28ஆம் தேதிக்குள் https://afcat.cdac.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கவும்.
அமெரிக்காவைச் சேர்ந்த ஜின்னி ஹிஸ்லோப் என்ற மூதாட்டி தனது 105வது வயதில் பட்டம் பயின்று படிக்க வயது முக்கியமில்லை என்பதை நிரூபித்துள்ளார். இரண்டாம் உலகப்போர் சமயத்தில் அவரது கணவர் போருக்கு சென்றதால், தனது பட்டப் படிப்பை பாதியில் கைவிட்டுள்ளார். 80 ஆண்டுகளுக்குப் பின் தற்போது பட்டம் படிக்க வாய்ப்பு கிடைத்த நிலையில், தனது நீண்ட நாள் கனவை நிறைவேற்றியுள்ளார்.
இந்தியா – ஆஸ்திரேலியா இடையேயான சூப்பர் 8 போட்டி டேரன் சமி மைதானத்தில் நாளை நடைபெறவுள்ளது. இந்நிலையில், அந்த மைதானம் அமைந்திருக்கும் செயின்ட் லூசியா தீவில் தற்போது கனமழை பெய்து வருகிறது. நாளைய தினமும் மழையை எதிர்பார்க்கலாம் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. இப்போட்டியில் வென்றாக வேண்டிய கட்டாயத்தில் ஆஸ்திரேலியா இருப்பதால் மழை அவர்களுக்கு சிக்கலாக மாறியுள்ளது.
Sorry, no posts matched your criteria.