news

News June 24, 2024

டி20 WC: இந்தியா, ஆஸி. அணிகள் இன்று மோதல்

image

டி20 WC சூப்பர் 8 சுற்றில், இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் இன்று மோதவுள்ளன. இரவு 8 மணிக்கு இப்போட்டி தொடங்குகிறது. இப்போட்டியில் வென்றாலோ அல்லது சில ரன் வித்தியாசத்தில் தோற்றாலோ இந்தியா அரையிறுதிக்கு முன்னேறும். படுதோல்வி அடைந்தால் அரையிறுதி வாய்ப்பு பாதிக்கப்படும். ஆஸ்திரேலியாவோ இந்தியாவை வெற்றி பெறுவதுடன், வங்கதேசம் ஆஃப்கனை வென்றால் அரையிறுதிக்கு செல்லும்.

News June 24, 2024

மக்களவை புதிய எம்பிக்கள் இன்று பதவியேற்பு

image

மக்களவைத் தேர்தலுக்கு பிறகு முதல்முறையாக இன்று நாடாளுமன்ற கூட்டத் தொடர் தொடங்குகிறது. காலை 11 மணிக்கு முதலில் பிரதமர் மோடி மற்றும் மத்திய அமைச்சர்கள் ஆகியோர் எம்பிக்களாக பதவியேற்கவுள்ளனர். அவர்களுக்கு இடைக்கால சபாநாயகர் பதவிபிரமாணம் செய்து வைப்பார். இதையடுத்து பெயரில் உள்ள எழுத்து வரிசைப்படி மற்ற எம்பிக்கள் பதவியேற்க உள்ளனர். முதலில் அசாம், கடைசியாக மேற்குவங்க எம்பிக்கள் பதவியேற்பர்.

News June 24, 2024

T20 WC தொடரிலிருந்து USA வெளியேறியது

image

T20 WC தொடரிலிருந்து அமெரிக்க அணி வெளியேறியுள்ளது. சூப்பர் 8 சுற்றில் நேற்று இங்கிலாந்து அணியை எதிர்கொண்ட USA, தோல்வியை தழுவியது. இதன்மூலம், சூப்பர் 8இல் 3 போட்டிகளிலும் தோல்வியை சந்தித்த USA, முதல் அணியாக அரையிறுதி வாய்ப்பை இழந்துள்ளது. இதனிடையே, 3இல் 2 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ள ENG அணி, நெட் ரன் ரேட் (+1.992) அடிப்படையில் முதல் அணியாக அரையிறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.

News June 24, 2024

நடிகர் அர்ஜூனின் இளைய மகள் செம டான்ஸ்

image

நடிகர் அர்ஜூனின் மூத்த மகள் ஐஸ்வர்யாவுக்கும், நடிகர் தம்பி ராமையாவின் மகன் உமாபதிக்கும் காதல் மலரவே, இருவீட்டார் சம்மதத்துடன் கடந்த சில நாட்களுக்கு முன் திருமணம் நடைபெற்றது. ஐஸ்வர்யா திரைத்துறையில் பயணித்து வரும் நிலையில், தங்கை அஞ்சனா திரையுலகம் பக்கம் வராமல் இருக்கிறார். இந்த நிலையில், அக்காவின் வரவேற்பு நிகழ்ச்சியில் அஞ்சனா நடனமாடிய புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

News June 24, 2024

நாடாளுமன்ற கூட்டத்தொடரில் காத்திருக்கும் பரபரப்பு

image

2024 பொதுத் தேர்தல் முடிந்த பின், முதல் நாடாளுமன்ற கூட்டத்தொடர் இன்று கூடுகிறது. இடைக்கால சபாநாயகராக பர்த்ருஹரி மஹ்தாப்க்கு ஜனாதிபதி பதவிப் பிரமாணம் செய்து வைக்க உள்ளார். 26ஆம் தேதி நடைபெற உள்ள சபாநாயகர் தேர்தல், நீட் தேர்வின் வினாத்தாள் கசிவு ஆகிய விவகாரங்கள் குறித்து எதிர்கட்சிகள் விவாதிக்க வலியுறுத்தும் என்பதால், இன்றைய கூட்டத்தொடர் பரபரப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

News June 24, 2024

இன்றைய தலைப்புச் செய்திகள்!

image

* நாடாளுமன்ற கூட்டத் தொடர் இன்று காலை 11 மணிக்கு கூடுகிறது. * நீட் வினாத்தாள் கசிந்த விவகாரத்தில், 17 மாணவர்களை தேசிய தேர்வு முகமை தகுதி நீக்கம் செய்தது. *ஒரு நாள் விடுமுறைக்கு பின் தமிழக சட்டசபை இன்று காலை 09.30 மணிக்கு மீண்டும் கூடுகிறது. *டி20 உலகக்கோப்பையில், அமெரிக்காவுக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி, முதல் அணியாக அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது.

News June 24, 2024

‘THE GOAT’ நாயகியின் கலக்கல் ஸ்டில்ஸ்

image

நடிகர் விஜய் ஆண்டனியின் ‘கொலை’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் மீனாட்சி சவுத்ரி. அடுத்ததாக, RJ பாலாஜியுடன் ‘சிங்கப்பூர் சலூன்’ படத்தில் நடித்தவர், இப்போது விஜயுடன் ‘THE GOAT’ படத்தில் நடித்து வருகிறார். மேலும், சந்தானத்துடன் ‘டிடி ரிட்டன்ஸ்-2’ படத்தில் நடிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள புகைப்படங்களுக்கு லைக்ஸ்கள் குவிந்து வருகின்றன.

News June 24, 2024

சாதிவாரி கணக்கெடுப்பு: பாஜக துணை முதல்வர் ஆதரவு

image

பிகாரில் சாதிவாரி கணக்கெடுப்பிற்கு பாஜக ஆதரவளித்ததாக அம்மாநில துணை முதல்வர் சாம்ராட் சவுத்ரி தெரிவித்துள்ளார். இந்த விவகாரத்தில் எதிர்கட்சிகளை விமர்சித்த அவர், இது குறித்து பிரதமர் சரியான நேரத்தில் முடிவெடுப்பார் என கூறியுள்ளார். மேலும், மண்டல் கமிஷன் பரிந்துரைகளுக்கு ராஜிவ் காந்தி எதிராக இருந்ததாகவும், SC, ST-க்கு அம்பேத்கர் இடஒதுக்கீடு கோரியபோது நேரு எதிர்த்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

News June 24, 2024

முதல்வரின் செயலாளர் என கூறி ஏமாற்ற முயற்சி

image

உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் செயலாளர் என கூறி, அரசு உயர் அதிகாரிகளிடம் ஏமாற்ற முயன்ற பண்டு சவுத்ரி என்கிற விவேக் சர்மாவை போலீசார் கைது செய்தனர். அதிகாரிகளிடம் ஏமாற்றும் நோக்கத்தில் போன் செய்து பேசியதாக அவர் ஒப்புக்கொண்டுள்ளார். முன்னதாக, இவர் மீது பல்ராம்பூர், மதுரா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள காவல் நிலையங்களில் மோசடி வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.

News June 24, 2024

இன்றைய நல்ல நேரம்!

image

▶ஜூன்- 24 | ▶ஆனி – 10 ▶கிழமை: திங்கள் | ▶திதி: த்ரிதியை ▶நல்ல நேரம்: காலை 06:30 – 07:30 வரை, மாலை 04:30 – 05:30 வரை ▶கெளரி நேரம்: காலை 09:30 – 10:30 வரை, இரவு 07:30 – 08:30 வரை ▶ராகு காலம்: மாலை 07:30 – 09:00 வரை ▶எமகண்டம்: நண்பகல் 10:00 – 12:30 வரை ▶குளிகை: பிற்பகல் 01:30 – 03:00 வரை ▶சந்திராஷ்டமம்: பரணி, கார்த்திகை ▶சூலம்: கிழக்கு ▶பரிகாரம்: தயிர்

error: Content is protected !!