India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கான இடமாறுதல் கலந்தாய்வில், பதவி உயர்வு இடமாறுதல் வழங்கப்படாததால், ஆசிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். பொது மாறுதல் கலந்தாய்வுக்கான அட்டவணை நேற்று முன்தினம் வெளியானது. இதில், இடைநிலை ஆசிரியர்களுக்கு பட்டதாரி ஆசிரியர்களாகவும்; பட்டதாரி ஆசிரியர்களுக்கு முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களாகவும் பதவி உயர்வு வழங்குவதற்கான கலந்தாய்வு இடம் பெறவில்லை என ஆசிரியர்கள் குமுறுகின்றனர்.
விக்கிரவாண்டி தொகுதியில் வருகிற ஜூலை 10ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. இதில் திமுக சார்பில் அன்னியூர் சிவா, பாமக சார்பில் சி. அன்புமணி, நாதக சார்பில் அபிநயா ஆகியோர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். இதேபோல் மேலும் 53 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். அந்த வேட்பு மனுக்கள் மீது இன்று பரிசீலனை நடைபெறவுள்ளது. அதையடுத்து எத்தனை மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளது என தெரியவரும்.
T20 WC சூப்பர் 8 சுற்றில், தென்னாப்பிரிக்காவுக்கு 136 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது மேற்கிந்திய தீவுகள் அணி. முதலில் பேட்டிங் செய்த WI வீரர்கள், அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். குறிப்பாக, நட்சத்திர வீரர்களான ஹோப் 0, பூரன் 1, பவல் 1, ரதர்ஃபோர்ட் 0 ரன் என அடுத்தடுத்து பெவிலியன் திரும்பினர். இதனால் அந்த அணி 8 விக்கெட் இழப்புக்கு 135 ரன்கள் மட்டுமே எடுத்தது. SA தரப்பில் சம்ஸி 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
ராமேஸ்வரம் மீனவர்கள் இன்று முதல் வேலைநிறுத்தம் செய்வதாக அறிவித்துள்ளனர். கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லும் மீனவர்களை, எல்லைத் தாண்டி வந்ததாகக் கூறி இலங்கை கடற்படை கைதுசெய்வது வாடிக்கையாகியுள்ளது. நேற்று ராமேஸ்வரத்திலிருந்து சென்ற 22 மீனவர்கள், 3 விசைப்படகுகளுடன் சிறைபிடிக்கப்பட்டனர். இந்த சம்பவத்தை கண்டித்தும், மீனவர்களை விடுவிக்க வலியுறுத்தியும் இன்று முதல் வேலைநிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது.
காலையில் வெறும் வயிற்றில் பழங்கள் சாப்பிடுவது நல்லது, பழங்களில் உள்ள சத்து முழுமையாக கிடைக்கும் என மருத்துவர்கள் கூறுகின்றனர். அதேநேரத்தில் ஆரஞ்சு, சாத்துக்குடி போன்ற சிட்ரஸ் பழங்களை சாப்பிட்டால் அமிலம் சுரக்கும் பிரச்னை அதிகமாகி, அல்சர் வரக் கூடும் என்பதால் அவற்றை தவிர்க்கும்படியும், வாழை, ஆப்பிள், பப்பாளி, தர்பூசணி சாப்பிடலாமென்றும் மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.
கள்ளக்குறிச்சியில் விஷச்சாராயம் அருந்தி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 59ஆக அதிகரித்துள்ளது. இதில் 5 பெண்களும் அடங்குவர். தொடர்ந்து, 100க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். அதில், 12 பேர் முழுமையாக கண்பார்வையை இழந்திருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இவ்விவகாரத்தில் இதுவரை 12 பேரை கைது செய்த சிபிசிஐடி போலீசார், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தமிழகத்தில் இன்று காலை 10 மணி வரை 5 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, தேனி, திண்டுக்கல், தென்காசி, கன்னியாகுமரி, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாகக் கணிக்கப்பட்டுள்ளது. இதனால், பள்ளி, கல்லூரி, அலுவலகம் செல்வோர் முன்னெச்சரிக்கையாக குடை, ரெயின் கோட் எடுத்துச்செல்லுங்கள்.
T20 WC சூப்பர் 8 சுற்றில் இன்று தென்னாப்பிரிக்கா-மேற்கிந்திய தீவுகள் மோதுகின்றன. முதலில் பேட்டிங் செய்து வரும் WI அணி, 15 ஓவர்களில் 97/5 ரன்கள் எடுத்துள்ளது. குரூப்-2இல் இந்த அணிகள் இடம்பெற்றுள்ள நிலையில், இன்றையப் போட்டியில் வெற்றி பெறும் அணி அரையிறுதிக்கு முன்னேறும். இதனால், இந்தப் போட்டி இரு அணிகளுக்கும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. எந்த அணி அரையிறுதிக்கு செல்லும்?
கள்ளக்குறிச்சியில் விஷச்சாராயம் குடித்து 55க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 100க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவ்விவகாரத்தில் தமிழக அரசை கண்டித்து அதிமுக சார்பில் இன்று தமிழகம் முழுவதும் மாவட்டத் தலைநகரங்களில் போராட்டம் நடைபெற உள்ளது. கள்ளக்குறிச்சியில் நடைபெறும் போராட்டத்தில் இபிஎஸ் பங்கேற்கிறார். சென்னையில் ஜெயக்குமார், கோவையில் செல்லூர் ராஜூ பங்கேற்க உள்ளனர்.
10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் தோல்வியடைந்த மாணவர்களுக்கு ஜூலை 2ஆம் தேதி துணைத் தேர்வு நடைபெற உள்ளது. இந்தத் தேர்வை எழுதுவதற்காக விண்ணப்பித்திருந்த மாணவர்களுக்கு ஹால் டிக்கெட் இன்று வெளியிடப்படுகிறது. www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில், தேர்வர்கள் தங்களது பதிவெண் மற்றும் பிறந்த தேதி ஆகிய விவரங்களை உள்ளீடு செய்து நுழைவுச் சீட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது.
Sorry, no posts matched your criteria.