news

News June 24, 2024

காவல்துறையினருக்கு இதை சொல்ல அதிகாரம் கிடையாது

image

காவல்துறையினர் குறித்து 1861ஆம் ஆண்டு போலீஸ் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. அந்தச் சட்டத்தில், காவல்துறையில் பணிபுரிபவர் சீருடையில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் பணியில் இருப்பவராகவே கருதப்படுவார் என்றும், ஆதலால், அவரிடம் எந்நேரமும் பாதிக்கப்பட்டோர் புகார் அளிக்கலாம். சீருடையில் இல்லாததைச் சுட்டிக்காட்டி பணியில் இல்லை எனக்கூறி அவர் புகாரை வாங்க மறுக்கக் கூடாதென குறிப்பிடப்பட்டுள்ளது.

News June 24, 2024

விஷச்சாராய மரணங்கள் பேரதிர்ச்சி தருகிறது: இபிஎஸ்

image

கள்ளக்குறிச்சி விஷச்சாராய மரணங்களை கண்டித்து அதிமுக சார்பில் தமிழகம் முழுவதும் மாவட்டத் தலைநகரங்களில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. கள்ளக்குறிச்சியில் நடந்த போராட்டத்தில் பங்கேற்ற இபிஎஸ், விஷச்சாராய மரணங்கள் பேரதிர்ச்சி தருவதாகவும், வேதனை அளிப்பதாகவும் கூறினார். 57 பேரின் உயிரிழப்புகளுக்கு பொறுப்பேற்று முதல்வர் ஸ்டாலின் பதவி விலகவேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

News June 24, 2024

1,347 விக்கெட் சாய்த்த தமிழன்

image

இலங்கை முன்னாள் சுழற்பந்து ஜாம்பவான் முத்தையா முரளிதரன், கிரிக்கெட்டில் பல சாதனை படைத்துள்ளார். 133 டெஸ்டுகளில் 800 விக்கெட்டுகளும், 350 ஒருநாள் போட்டிகளில் 543 விக்கெட்டுகளும், 12 டி20 போட்டிகளில் 13 விக்கெட்டுகளும் சாய்த்துள்ளார். அதாவது மொத்தம் 1,347 விக்கெட்டுகளை அவர் வீழ்த்தியுள்ளார். இதன்மூலம் கிரிக்கெட்டில் அதிக விக்கெட் வீழ்த்தியவர் என்ற சாதனையைத் தமிழரான அவர் படைத்துள்ளார்.

News June 24, 2024

அமெரிக்க அணி மேலும் வலுப்பெறும்: ஆரோன்

image

நடப்பு தொடரில் கற்ற பாடங்களில் இருந்து மேலும் வலுப்பெறுவோம் என அமெரிக்க அணி கேப்டன் ஆரோன் ஜோன்ஸ் நம்பிக்கை தெரிவித்துள்ளார். சூப்பர் 8 சுற்றில் விளையாடிய 3 போட்டிகளிலும் தோல்வியடைந்த USA, உலகக் கோப்பை தொடரிலிருந்து வெளியேறியது. இதுகுறித்து பேசிய அவர், “இது எங்களது முதல் உலகக் கோப்பை தொடர். நாங்கள் சூப்பர் 8க்கு தகுதிபெறுவோம் என பலரும் நம்பவில்லை” எனக் கூறியுள்ளார்.

News June 24, 2024

அரையிறுதிக்கு முன்னேறியது தென்னாப்பிரிக்கா

image

T20 WC தொடரின் சூப்பர் 8 சுற்றில், மேற்கிந்திய தீவுகள் அணியை வீழ்த்தி அரையிறுதிப் போட்டிக்கு முன்னேறியது தென்னாப்பிரிக்கா. முதலில் பேட்டிங் செய்த WI அணி, 135/8 ரன்கள் எடுத்தது. இதையடுத்து 136 ரன்கள் இலக்கை SA அணி துரத்தியபோது மழை குறுக்கிட்டது. இதனால், DLS விதிப்படி 17 ஓவர்களில் 123 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இந்த இலக்கை எட்டிய SA அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

News June 24, 2024

விதவை சடங்குகளை ஒழிக்க சட்டம்: 84% பெண்கள் விருப்பம்

image

நாகையை சேர்ந்த என்ஜிஓ அமைப்பு, தமிழகம் முழுவதும் விதவைப் பெண்களின் நிலை குறித்து ஆய்வு நடத்தி அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் 84.2% பெண்கள், கணவர் இறப்புக்குப்பின், தங்களை காலையில் கோயில் குளத்துக்கு அழைத்து சென்று குளிக்கச்செய்து, பொட்டு, பூக்கள் அகற்ற செய்யும் சடங்குகளைத் தடை செய்யும் சட்டங்கள் கொண்டு வரப்பட வேண்டுமென, அவர்கள் விருப்பம் தெரிவித்திருப்பதாக கூறப்பட்டுள்ளது.

News June 24, 2024

ராகுல்காந்தியின் முதல் அரசியல் பதவி

image

காங்கிரஸ் கட்சி எம்பிக்கள் கூட்டத்தில் அக்கட்சியின் மக்களவை எம்பிக்கள் குழுத் தலைவராகவும், எதிர்க்கட்சித் தலைவர் பதவிக்கும் ராகுல்காந்தி தேர்வு செய்யப்பட்டார். இதனால், மக்களவை எதிர்க்கட்சித் தலைவராக ராகுல்காந்தி பதவியேற்பது ஏறத்தாழ உறுதியாகி விட்டது. ராகுல் பதவியேற்கும்பட்சத்தில், அவர் வகிக்கும் முதல் அரசியல் ரீதியிலான பதவியாக இது இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

News June 24, 2024

தங்கம் விலை உயர்வு

image

தங்கத்தின் விலை நேற்று முன்தினம் குறைந்த நிலையில், இன்று சற்று அதிகரித்துள்ளது. சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ₹40 உயர்ந்து ₹53,600க்கு விற்பனையாகிறது. கிராமுக்கு ₹5 உயர்ந்து ₹6,700க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் வெள்ளி விலை 30 காசுகள் குறைந்து கிராம் ₹96.20க்கும், கிலோ ₹96,200க்கும் விற்கப்படுகிறது.

News June 24, 2024

TNPSC குரூப் 2 தேர்வு அறிவிப்பில் மாற்றம் வருமா?

image

TNPSC குரூப் 2, 2 ஏ தேர்வுகளுக்கான அறிவிப்பு சமீபத்தில் வெளியிடப்பட்டது. 2327 பணி இடங்களுக்கான இந்த அறிவிப்பில், சிலவற்றுக்கு மட்டும் வயது வரம்பு நிர்ணயிக்கப்பட்டிருந்தது. இதற்கு தேர்வர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. மேலும், ராமதாஸ் உள்ளிட்ட அரசியல் தலைவர்களும் வயது வரம்பை நீக்க வலியுறுத்தியுள்ளனர். இதனால், திருத்தப்பட்ட மறு அறிவிப்பு வெளியாகுமா? என தேர்வர்கள் எதிர்பார்த்துள்ளனர்.

News June 24, 2024

காலைநேர சூரிய வழிபாடால் இத்தனை நன்மைகளா?

image

நவக்கிரகங்களில் ஒருவரான சூரிய பகவானை வழிபட்டால் எண்ணற்ற பலன் கிடைக்கும் என ஆன்மிகத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. “கண்கண்ட தெய்வம்’ என்று போற்றப்படும் சூரிய பகவானை தினமும் காலை சூரிய உதயத்தின் போதும், மாலை சூரிய அஸ்தமனத்தின்போதும் சூரியனுக்குரிய மந்திரத்தை உச்சரித்து வழிபட்டால் சகல செல்வமும், சுகமான வாழ்க்கையும் கிட்டுமென்று ஆன்மிகத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!