news

News June 24, 2024

சிறார்களுக்கான ஆதாருக்கு விண்ணப்பிப்பது எப்படி? (3/3)

image

இதுபோல விண்ணப்பித்த 90 நாள்களில், சிறார்களுக்கு ஆதார் எண் வழங்கப்படும். வீட்டிற்கும் ஆதார் அட்டை தபாலில் அனுப்பி வைக்கப்படும். பிறகு சிறார்கள், 15 வயது பூர்த்தியானதும் ஆதார் சேவை மையம் அல்லது இ-சேவை மையம் சென்று தங்களது பயோ மெட்ரிக் விவரங்களை புதுப்பிக்க வேண்டியது அவசியமாகும். அதுவரை எத்தகைய புதுப்பிப்பையும் மேற்கொள்ள வேண்டிய கட்டாயமில்லை. அதே ஆதாரை பயன்படுத்தலாம்.

News June 24, 2024

சிறார்களுக்கான ஆதாருக்கு விண்ணப்பிப்பது எப்படி? (2/3)

image

பயோ மெட்ரிக் விவரம் பதியப்பட்டதும், சிறார்களின் புகைப்படம் எடுக்கப்படும். பின்னர் அவர்களின் பெற்றோர் மொபைல் எண் பெறப்பட்டு, அதுவும் பதியப்படும். இதைத் தொடர்ந்து, ஆதாருக்கு விண்ணப்பித்தற்கான ரசீது எதிர்கால பயன்பாட்டுக்காக வழங்கப்படும். அதில் பதிவு செய்த தேதி, நேரம் குறிப்பிடப்பட்டு இருக்கும். அதனைக் கொண்டு ஆதார் விண்ணப்பம் எந்த நிலையில் உள்ளது என்பதை தெரிந்து கொள்ள முடியும்.

News June 24, 2024

சிறார்களுக்கான ஆதாருக்கு விண்ணப்பிப்பது எப்படி? (1/3)

image

5 முதல் 15 வயது வரையிலான சிறார்கள், ஆதார் கோரி விண்ணப்பித்து பெற முடியும். இதற்காக, அவர்கள் அருகிலுள்ள ஆதார் சேவை மையம் அல்லது இ-சேவை மையத்துக்கு சென்று அங்குள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து சமர்பிக்க வேண்டும். அவர்களின் முகவரி சான்றாக பெற்றோர் ஆதார் நகலில் உள்ள முகவரியை அளிக்கலாம். அந்த விண்ணப்பம் பெறப்பட்டதும், சிறார்களின் பயோ மெட்ரிக் எனப்படும் கைவிரல் ரேகை, கருவிழி ரேகை பதியப்படும்.

News June 24, 2024

நம்மை யாரும் பலவீனப்படுத்த முடியாது: அதானி

image

நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கவே, ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை ஹிண்டன்பர்க் நிறுவனம் கூறுவதாக கெளதம் அதானி தெரிவித்துள்ளார். அதானி குழுமத்தின் 32ஆவது ஆண்டு பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், திறமையின் மீதான நம்பிக்கை மற்றும் அர்ப்பணிப்புடன் நாம் செயல்படுவதால், எதுவும் நம்மை பலவீனப்படுத்த முடியாது என்றார். முன்னதாக அதானி குழுமம் நிதி முறைகேட்டில் ஈடுபட்டதாக அமெரிக்காவை சேர்ந்த ஹிண்டன்பர்க் கூறியிருந்தது.

News June 24, 2024

கெஜ்ரிவாலுக்கு ஜாமின் கிடைப்பதில் சிக்கல்

image

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஜாமின் மனுவை விசாரிக்க, உச்சநீதிமன்றம் மறுத்துள்ளது. மதுபானக் கொள்கை ஊழல் வழக்கில், EDயால் கைது செய்யப்பட்ட அவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த வழக்கில் கீழமை நீதிமன்றம், வழங்கிய ஜாமினுக்கு டெல்லி ஐகோர்ட் தடை விதித்தது. அதனை ரத்து செய்யக் கோரிய மனுவை விசாரிக்க மறுத்த உச்ச நீதிமன்றம், ஐகோர்ட்டின் தீர்ப்புக்காக கெஜ்ரிவால் காத்திருக்குமாறு அறிவுறுத்தியுள்ளது.

News June 24, 2024

விசிக போராட்டத்திற்கு அனுமதி மறுப்பு

image

கள்ளக்குறிச்சி விஷச்சாராய மரணங்களைக் கண்டித்து விசிக அறிவித்திருந்த போராட்டத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. சென்னை வள்ளுவர் கோட்டத்தில் இன்று மாலை 4 மணிக்கு போராட்டம் நடத்த திட்டமிடப்பட்டிருந்த நிலையில், காவல்துறை இதற்கு அனுமதி மறுத்துள்ளது. திமுக கூட்டணியில் உள்ள விசிக கட்சிக்கே அனுமதி மறுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

News June 24, 2024

தொடர்ச்சியாக 7 முறை வெற்றி பெற்ற தென்னாப்பிரிக்கா

image

நடப்பு T20 WC தொடரில், தென்னாப்பிரிக்கா அணி தொடர்ச்சியாக 7 வெற்றிகளை பதிவு செய்துள்ளது. D பிரிவில் இடம்பெற்று விளையாடிய SA, 4 லீக் போட்டிகளிலும் வெற்றி பெற்றது. இதேபோல சூப்பர் 8 சுற்றில், குரூப் 2இல் இடம்பிடித்த SA, விளையாடிய 3 ஆட்டங்களிலும் வென்று அரையிறுதிக்கு முன்னேறியது. இதன்மூலம், நடப்பு T20 WC தொடரில் விளையாடிய அனைத்துப் போட்டிகளிலும் வென்ற அணி என்ற பெருமையை SA பெற்றுள்ளது.

News June 24, 2024

ஹஜ் பயணம் சென்ற 1300 பேர் பலி

image

மெக்காவுக்கு புனிதப் பயணம் செல்வதை, இஸ்லாமியர்கள் தங்கள் வாழ்நாள் கடமையாக கருதுகின்றனர். நடப்பாண்டில், உலகம் முழுவதிலும் இருந்து 18 லட்சம் பேர் ஹஜ் பயணம் சென்றுள்ள நிலையில், வெப்ப அலையால் இதுவரை 1300 பேர் பலியாகியுள்ளனர். மேலும், அனுமதியின்றி வந்துள்ள 1.40 லட்சம் யாத்ரீகர்கள் உள்பட 5 லட்சம் பேர் சிகிச்சையில் உள்ளதாக சவுதி சுகாதாரத்துறை கூறியுள்ளது. இந்தியாவைச் 98 பேர் இதுவரை பலியாகியுள்ளனர்.

News June 24, 2024

சாதிவாரி கணக்கெடுப்பை மத்திய அரசு நடத்த வேண்டும்

image

நாடு முழுவதும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தினால் தான் தமிழகத்தில் அதனை அமல்படுத்த முடியும் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். பாமக எம்எல்ஏ ஜி.கே.மணி கேள்விக்கு பதிலளித்த அவர், சாதிவாரி கணக்கெடுப்பை மத்திய அரசு நடத்த வேண்டும் என பேரவையில் விரைவில் தீர்மானம் கொண்டு வரப்படும் என்று கூறினார். அத்துடன், பிஹாரில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் நீதிமன்றத்தால் ரத்து செய்யப்பட்டதையும் சுட்டிக்காட்டினார்.

News June 24, 2024

ஜிம்பாப்வே தொடருக்கு ஷுப்மன் கில் கேப்டன்?

image

டி20 உலகக் கோப்பைக்கு பிறகு ஜிம்பாப்வே சென்று 5 போட்டிகள் கொண்ட 20 ஓவர் போட்டிகளில் இந்திய அணி விளையாடவுள்ளது. இத்தொடரில் ரோஹித், கோலி, சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியாவுக்கு ஓய்வு அளிக்கப்பட்டு, இளம்வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட இருப்பதாகக் கூறப்படுகிறது. ஷுப்மன் கில் கேப்டனாக நியமிக்கப்படலாம் என்றும், ஜெய்ஸ்வால், ரிங்கு சிங் உள்ளிட்டோர் அணியில் இடம்பெறுவர் என்றும் கூறப்படுகிறது.

error: Content is protected !!