news

News June 24, 2024

இந்திய ரயில் நிலையங்களும் அதன் வகைகளும் (3/4)

image

ஜங்ஷன்: இரண்டுக்கு மேற்பட்ட ரயில் பாதைகள் ஒன்றாக சேருகிற அல்லது பிரிகின்ற இடத்தை ஜங்ஷன் (சந்திப்பு) என்று அழைப்பர். இங்கு ஒரே நேரத்தில் ரயில்கள் நுழைவதும் வெளியே செல்வதுமாக இருக்கும். எடுத்துக்காட்டு:- மதுரை சந்திப்பு. கண்ட்: கண்டோன்மண்ட் அல்லது கண்ட் என்பது ராணுவ முகாமை குறிக்கும் ஒரு சிறப்பு பெயர். இவை பெரும்பாலும் ராணுவப் பணிகளுக்காக நிறுவப்பட்டவை. எடுத்துக்காட்டு:- பெங்களூரு கண்ட்.

News June 24, 2024

இந்திய ரயில் நிலையங்களும் அதன் வகைகளும் (2/4)

image

சென்ட்ரல்: சென்ட்ரல் ரயில் நிலையம் என்பது மிக முக்கியமான நகரத்தின் மையத்தில் அமைந்திருக்கும். இந்த நிலையத்தில் இருந்து நாட்டின் எல்லா பகுதிகளுக்கும் செல்வதற்கான ரயில்கள் புறப்படும். எடுத்துக்காட்டு: சென்னை சென்ட்ரல். ஹால்ட்: ஹால்ட் ரயில் நிலையம் என்பது தற்காலிகமாக அமைக்கப்பட்ட சிறிய ரயில் நிலையமாகும். இங்கு கட்டமைப்பு & ரயில்வே சிக்னல் வசதிகள் அதிகமாக இருக்காது. எடுத்துக்காட்டு: வடபழஞ்சி ஹால்ட்.

News June 24, 2024

இந்திய ரயில் நிலையங்களும் அதன் வகைகளும் (1/4)

image

இந்திய போக்குவரத்துத் துறையில் ரயில்வே துறை பெரும் பங்காற்றி வருகிறது. உலகின் 4ஆவது பெரிய ரயில் நெட்வொர்க்கை கொண்டுள்ள (7,000-க்கும் மேற்பட்ட நிலையங்களை உள்ளடக்கிய) இந்தியாவில் நிலையங்களின் பெயர் பலகையில் சென்ட்ரல், ஜங்ஷன், ரோடு, ஹால்ட், கண்ட்., என்று சிறப்பு பெயர்கள் இருக்கும். அந்த பெயர்கள் ஒவ்வொன்றுக்கும் ஒரு தனி காரணம் இருக்கிறது. அவற்றை பற்றி இந்த தொகுப்பில் அறிந்து கொள்வோம்.

News June 24, 2024

இன்று கனமழை: நாளை மிக கனமழை

image

மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, தமிழகத்தில் ஒரு சில பகுதிகளில் இன்று கனமழை, நாளை மிக கனமழை பெய்யக்கூடும் என, வானிலை மையம் எச்சரித்துள்ளது. அந்த வகையில் நீலகிரி, குமரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, நெல்லை மாவட்டங்களில் உள்ள மலைப்பகுதிகளில் இன்று கனமழையும், நீலகிரி மற்றும் கோவையில் சில பகுதிகளில் நாளை மிக கனமழையும் பெய்யக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது.

News June 24, 2024

‘S’ என்ற எழுத்தில் தொடங்கும் பெயர் கொண்டவரா நீங்கள்?

image

‘S’ என்ற எழுத்தில் தொடங்கும் பெயர் கொண்டவர்கள், உறவுகளை உணர்வுப்பூர்வமாகவும் உண்மையாகவும் அணுகுவார்கள் என ஜோதிடர்கள் கூறுகின்றனர். ஆற்றல், நேர்த்தி, அழகு & தன்னம்பிக்கை கொண்ட நபர்களாக இருப்பார்கள் என்றும், ஆபத்துகளை அசாத்தியமாக கடந்து செல்லும் மனோபலம் கொண்டவர்கள் எனவும் தெரிவிக்கின்றனர். ‘S’ என்ற எழுத்தில் பெயர் கொண்ட உங்கள் நண்பர்கள் & குடும்ப உறுப்பினர்களுக்கு இதை பகிருங்கள்.

News June 24, 2024

இடைத்தேர்தலை சந்திக்கும் தைரியம் அதிமுகவுக்கு இல்லை

image

விக்கிரவாண்டி இடைத்தேர்தலை அதிமுக புறக்கணிப்பது குறித்து கருத்து தெரிவித்துள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச்செயலாளர் கே. பாலகிருஷ்ணன், இடைத்தேர்தலை சந்திக்கும் தைரியம் அதிமுகவுக்கு இல்லை என்றார். போட்டியிடுவோம் என முதலில் கூறிவிட்டு, பிறகு புறக்கணிப்பதாக இபிஎஸ் அறிவித்திருப்பது, விழுப்புரத்தில் கட்சி அவரது கட்டுப்பாட்டில் இல்லை என்பதையே காட்டுவதாகவும் சாடினார்.

News June 24, 2024

APPLY NOW: மத்திய அரசில் வேலை

image

எல்லைப் பாதுகாப்புப் படையில் உள்ள 183 பணியிடங்கள் நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பின் மூலம் விண்ணப்பங்களை மத்திய அரசு கோரியுள்ளது. SI, Constable, Driver பணியிடங்களில் பணியாற்ற ஆர்வம் உள்ளவர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். கல்வி தகுதி: 10, 12ஆம் வகுப்பு, டிப்ளமா. வயது வரம்பு: 20-28. சம்பளம்: ₹21,700 – ₹1,12,400. விண்ணப்பிக்க கடைசி நாள்: ஜூலை 1. கூடுதல் தகவலுக்கு <>BSF<<>> இணைய முகவரியை கிளிக் செய்யவும்.

News June 24, 2024

ரோஹித், விராட் கோலியை நீக்க கம்பீர் நிபந்தனையா?

image

இந்திய கிரிக்கெட் அணி பயிற்சியாளர் பதவியை ஏற்க கம்பீர் 5 நிபந்தனைகளை விதித்திருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அதில் ஒரு நிபந்தனையாக, பாகிஸ்தானில் அடுத்த ஆண்டு நடக்கும் சாம்பியன்ஸ் கோப்பை போட்டியில் சரியாக விளையாடவில்லை எனில், மூத்த வீரர்கள் ரோஹித், கோலி, ஜடேஜா, ஷமியை நீக்க வேண்டுமென நிபந்தனை விதித்துள்ளதாகக் கூறப்படுகிறது. கோலி-கம்பீர் இடையே 2 முறை மோதல் ஏற்பட்டது நினைவுகூரத்தக்கது.

News June 24, 2024

வாட்ஸ்ஆப்பில் விரைவில் DIAL வசதி அறிமுகம்

image

முன்னணி சமூகவலைதள செயலியான வாட்ஸ்ஆப் அவ்வப்போது அப்டேட் செய்து வருகிறது. அந்த வகையில், விரைவில் DIAL வசதி அறிமுகப்படுத்தப்படவுள்ளது. அதன்படி, வாட்ஸ்ஆப் செயலியில் இருந்து பிறருக்கு நேரடியாக எண்களை DIAL செய்து பேச முடியும். தற்போது அழைப்பு மேற்கொள்ள வேண்டுமெனில், அவர் எண்ணை சேமித்தபிறகே DIAL செய்து பேச முடிகிறது. அதற்கு மாற்றாக, இந்த வசதி அறிமுகப்படுத்தப்படுகிறது.

News June 24, 2024

புதிய ரீசார்ஜ் பிளானை அறிமுகம் செய்தது AIRTEL

image

ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கு மகிழ்ச்சியளிக்கும் வகையில், புதிய ரீசார்ஜ் பிளான் ஒன்றை அந்த நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. ₹279க்கு ரீசார்ஜ் செய்தால் 2 GB டேட்டாவுடன், 45 நாள்கள் உள்ளூர் மற்றும் வெளியூர் அழைப்புகள் வரம்பின்றி இலவசம். இதேபோல 600 SMS, 3 மாதத்திற்கு இலவசமாக Apollo 24/7 Circle சேவை, இலவச காலர் டியூன் வசதி, Wynk Music ஆகிய அம்சங்களும், இந்த ரீசார்ஜ் பிளானில் இடம்பெற்றுள்ளன.

error: Content is protected !!