news

News June 24, 2024

சீனாவுக்கு நிச்சயம் பதிலடி கொடுக்கப்படும்: மார்கோஸ்

image

சீனா போரை தொடங்கினால் பிலிப்பைன்ஸ் ராணுவம் தரப்பில் இருந்து நிச்சயம் பதிலடி கொடுக்கப்படும் என்று அந்நாட்டு அதிபர் பெர்டினாண்ட் மார்கோஸ் ஜூனியர் எச்சரித்துள்ளார். தென் சீனக்கடல் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்ட பிலிப்பைன்ஸ் படகுகளை சீன கடற்படையினர் சேதப்படுத்தினர். இதற்கு கண்டனம் தெரிவித்த மார்கோஸ், சீன அரசு ஆக்கிரமிப்பு எண்ணத்தைக் கைவிடவில்லை என்றால், நிலைமை மோசமாகும் என தெரிவித்துள்ளார்.

News June 24, 2024

பாஸ்போர்ட், விசா என்ன வித்தியாசம்?

image

வெளிநாடு செல்ல பாஸ்போர்ட், விசா ஆகிய இரண்டுமே தேவை. சம்பந்தப்பட்ட நபருக்கு அவர் வசிக்கும் நாட்டின் அரசினால் வழங்கப்படுவது பாஸ்போர்ட். அதில் அவரின் புகைப்படம் உள்ளிட்ட அனைத்து விவரங்களும் இருக்கும். விசாவானது, அவர் செல்ல விரும்பும் நாட்டின் தூதரக அனுமதியாகும். இதற்கென பாஸ்போர்ட்டில் முத்திரையோ அல்லது தனி ஆவணமோ அளிக்கப்படும். இது இருந்தால் மட்டுமே அந்நாட்டுக்கு சென்றுத் திரும்ப முடியும்.

News June 24, 2024

NDA அரசின் முதல் 15 நாள்களே மோசம்: ராகுல்

image

மோடி தலைமையிலான NDA அரசின் முதல் 15 நாள் ஆட்சியை ராகுல் காந்தி விமர்சித்துள்ளார். அதில், பயங்கர ரயில் விபத்து, காஷ்மீர் தீவிரவாத தாக்குதல், நீட் மோசடி, UGC NET வினாத்தாள் கசிவு, PG நீட் தேர்வு ரத்து, பால் விலை மற்றும் சுங்கச்சாவடி கட்டணம் உயர்வு, தண்ணீர் பற்றாக்குறை, வெப்ப அலை உயிரிழப்புகள் உள்ளிட்டவற்றை பட்டியலிட்டு, இவற்றுக்கு மத்தியில் மோடி ஆட்சியை தக்கவைக்க போராடி வருவதாக தெரிவித்துள்ளார்.

News June 24, 2024

அடுத்த 3 மணி நேரத்துக்கு மழை

image

தமிழகத்தில் இரவு 7 மணி வரை மழை பெய்யவிருக்கும் மாவட்டங்களின் பட்டியலை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. அதன்படி, தர்மபுரி, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், சிவகங்கை,ராமநாதபுரம், கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, குமரி, நெல்லை ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யக்கூடும்.

News June 24, 2024

எமர்ஜென்சி பற்றி இன்னும் எவ்வளவு காலம் பேசுவீர்கள்?

image

இன்னும் எத்தனை ஆண்டுகளுக்கு காங்கிரஸ் எமர்ஜென்சியை அமல்படுத்தியது என குறைக்கூற போகிறீர்கள் என்று மல்லிகார்ஜுன கார்கே கேள்வி எழுப்பியுள்ளார். எமர்ஜென்சியை அமல்படுத்தி 50 ஆண்டுகள் ஆகிறது என பிரதமர் மோடி கூறியது தொடர்பாக பேசிய கார்கே, இந்திரா காந்தி எமர்ஜென்சியை அமல்படுத்தியது உண்மைதான் என்றும், இப்போது, மோடி ஆட்சியில் நாட்டில் அறிவிக்கப்படாத எமர்ஜென்சி நீடிப்பதாகவும் சாடியுள்ளார்.

News June 24, 2024

தீவிர சண்டை முடிவுக்கு வரும்… ஆனால் போர் தொடரும்?!

image

காசாவில் ஹமாஸ் தீவிரவாதிகளுக்கு எதிரான தீவிரமான சண்டை முடிவுக்கு வருவதாக இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு தெரிவித்துள்ளார். லெபனான் வடக்கு எல்லையில் கூடுதல் துருப்புக்கள் நிறுத்தப்படும் எனக் கூறிய அவர், ஹமாஸின் ஆதிக்கம் வலுவிழக்கும் வரை போர் தொடரும் என்றார். அத்துடன், எந்த சூழ்நிலையிலும் ஹமாஸிடம் பணயக்கைதிகளாக இருக்கும் இஸ்ரேல் குடிமக்களை கொண்டு வருவோம் என்று உறுதியளித்தார்.

News June 24, 2024

வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றாலும் பேறுகால விடுப்பு

image

குழந்தை பெற்றெடுத்த மத்திய அரசின் பெண் ஊழியர்களுக்கு 6 மாத காலம், பேறுகால விடுப்பு அளிக்கப்பட்டு வருகிறது. ஆனால், வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றவர்களுக்கு, இந்த விடுமுறை அளிக்கப்படுவதில்லை. இந்நிலையில், வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றவர், வாடகை தாய் ஆகியோர் மத்திய அரசு ஊழியர்களாக இருந்தால், அவர்களுக்கும் 180 நாள்கள் பேறுகால விடுப்பு வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

News June 24, 2024

35 வேட்பு மனுக்கள் நிராகரிப்பு

image

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுக, பாமக, நாதக ஆகிய கட்சி வேட்பாளர்களின் வேட்பு மனுக்களை தேர்தல் அதிகாரி ஏற்றுள்ளார். மொத்தம் 55 பேர் வேட்புமனு தாக்கல் செய்திருந்த நிலையில், 29 வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளன. அதே நேரம், 35 பேரின் வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக தேர்தல் அதிகாரி அறிவித்துள்ளார். விக்கிரவாண்டி இடைத்தேர்தலை அதிமுக புறக்கணித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

News June 24, 2024

தேவதைக்குரிய லட்சணங்கள் இல்லை: சுனில் லாஹ்ரி

image

சீதையாக நடிக்கும் சாய் பல்லவி முகத்தில் தேவதைக்குரிய லட்சணங்கள் இல்லை என்று இந்தி நடிகர் சுனில் லாஹ்ரி கூறியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சாய் பல்லவி நடித்த படங்களை தான் இதுவரை பார்த்ததில்லை எனக் கூறிய சுனில் லாஹ்ரி, அவர் எப்படி நடிக்க போகிறார் என்று தெரியவில்லை என்றார். அத்துடன், அனிமல் படத்தில் நடித்த ரன்பீர் கபூரை ராமராக கற்பனை செய்வது கஷ்டமாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

News June 24, 2024

பாலமுருகன் IRS காங்கிரஸில் இணைந்தார்

image

ஜிஎஸ்டி அலுவலகத்தில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்ட ஐஆர்எஸ் அதிகாரி பாலமுருகன் தமிழக காங்கிரஸில் தன்னை இணைத்துக் கொண்டார். மத்திய அரசு பணியிலிருந்த அவர், “அமலாக்கத்துறையை ஏவல் துறையாக மாற்றியிருக்கிறார் நிர்மலா சீதாராமன். அவரை பதவியில் இருந்து நீக்க வேண்டும்” என்று குடியரசு தலைவருக்கு கடிதம் எழுதினார். இதை தொடர்ந்து காரணம் ஏதும் கூறாமல், பணி ஓய்வுக்கு ஒரு நாள் முன்னதாக, சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

error: Content is protected !!