news

News June 24, 2024

நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்: மம்தா

image

வசதி படைத்த மாணவர்கள் மட்டுமே பயனடையும் வகையில் உள்ள நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வலியுறுத்தி பிரதமர் மோடிக்கு மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கடிதம் எழுதியுள்ளார். அக்கடிதத்தில், தற்போதைய நீட் தேர்வு நடைமுறை பெரும் ஊழலுக்கு வழிவகுப்பதாகக் கூறிய அவர், மருத்துவப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கையை மாநிலங்களே நடத்திக் கொள்ள அனுமதிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

News June 24, 2024

தேர் முறிந்து விழுந்த விபத்தில் ஒருவர் பலி

image

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே மாத்தூர் முத்துமாரியம்மன் கோயில் தேர் சாய்ந்து ஒருவர் உயிரிழந்துள்ளார். அலங்கரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த போது, தேரின் ஒரு பகுதி முறிந்து விழுந்ததில், மகாலிங்கம் (70) என்பவர் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும், 3 பேர் லேசான காயங்களுடன் பேராவூரணி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து, இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர்.

News June 24, 2024

ஜிஎஸ்டியால் ஏழைகளின் சேமிப்பு அதிகரிப்பு: மோடி

image

GST வரி முறை அமலுக்கு வந்த பிறகு வீட்டு உபயோக பொருள்களின் விலை குறைந்துள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். மத்திய மறைமுக வரி & சுங்க வாரியத்தின் தரவுகளை தனது X பக்கத்தில் பகிர்ந்துள்ள அவர், “மத்திய அரசின் நிதி கொள்கை & சீர்திருத்தங்கள் 140 கோடி இந்தியர்களின் வாழ்க்கையை மேம்படுத்தியுள்ளது. குறிப்பாக, GST வரி முறையால் ஏழை, எளிய மக்களின் சேமிப்பு அதிகரித்துள்ளது” எனக் குறிப்பிட்டுள்ளார்.

News June 24, 2024

TTV தினகரனை சந்தித்த அண்ணாமலை

image

அமமுக பொதுச் செயலாளர் TTV தினகரனை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மரியாதை நிமித்தமாக, அவரது இல்லத்திற்கு நேரில் சந்தித்துள்ளார். இந்த சந்திப்பின்போது, பல்வேறு முக்கிய விஷயங்கள் குறித்து இருவரும் விவாதித்ததாகக் கூறப்படுகிறது. மோடியின் பதவியேற்பு விழாவிற்கு தினகரன் செல்லாததால், அமமுக – பாஜக கூட்டணி முறிந்ததாக வெளியான தகவலுக்கு இதன் மூலம் முற்றுப்புள்ளி வைத்துள்ளதாக அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர்.

News June 24, 2024

இபிஎஸ் ஏன் அப்போது பதவி விலகவில்லை?

image

கள்ளக்குறிச்சி விவகாரத்திற்கு பொறுப்பேற்று முதல்வர் ஸ்டாலின் பதவி விலகவேண்டும் என இபிஎஸ் கூறிய நிலையில், தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்திற்கு பொறுப்பேற்று இபிஎஸ் ஏன் அப்போது பதவி விலகவில்லை என CPI மாநில செயலாளர் முத்தரசன் கேள்வி எழுப்பியுள்ளார். இபிஎஸ் அப்போது பதவி விலகியிருந்தால் வரவேற்றிருப்போம் எனக் கூறிய அவர், கள்ளக்குறிச்சி விவகாரத்தில் திமுக அரசு உரிய நடவடிக்கை எடுத்துள்ளது என்றார்.

News June 24, 2024

மாநிலங்களவை பாஜக குழுத் தலைவராக நட்டா நியமனம்

image

மாநிலங்களவை பாஜக குழுத் தலைவராக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜெ.பி.நட்டா நியமிக்கப்பட்டுள்ளார். பாஜகவின் தேசியத் தலைவராக இருக்கும் நட்டாவின் பதவிக்காலம், ஜூன் 30ஆம் தேதியோடு நிறைவடையவுள்ளது. இந்த நிலையில், அவருக்கு புதிய பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. இதற்கு முன், பியூஷ் கோயல், மாநிலங்களவை பாஜக
குழுவின் தலைவராக பதவி வகித்தார்.

News June 24, 2024

பயிற்சியாளராக கவுதம் கம்பீர் பதவியேற்றால்…

image

இந்திய அணியின் பயிற்சியாளராக கவுதம் கம்பீர் பதவியேற்றால் இந்தியா நிச்சயம் உலகக் கோப்பையை வெல்லும் என்று துரோணாச்சார்யா விருது பெற்ற பயிற்சியாளர் சஞ்சய் பரத்வாஜ் நம்பிக்கை தெரிவித்துள்ளார். இந்திய அணிக்குள் இருக்கும் திறமையை கம்பீர் சரியாக வெளிக்கொண்டு வந்து புதிய உத்வேகத்தை அளிப்பார் எனக் கூறிய அவர், தனது மாணவன் ஒருவர் அணிக்கு பயிற்சியாளரானால் அது தனக்கு பெரும் மகிழ்ச்சியை அளிக்கும் என்றார்.

News June 24, 2024

அகழாய்வில் புதிய பொருள்கள் கண்டெடுப்பு

image

விருதுநகர் அருகே வெம்பக்கோட்டையில் சுடுமணலால் ஆன பெண்ணின் தலைப்பகுதி கண்டெடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். அகழாய்வில் புதிய பொருள்கள் கண்டெடுக்கப்பட்டது குறித்து தனது X பதிவில், சுடுமணலால் ஆன பெண்ணின் தலைப்பகுதி 30.7 மி.மீ உயரமும், 25.6 மி.மீ அகலமும் கொண்டுள்ளது. கிருஷ்ணகிரி சென்னானூர் ஆய்வில், உடைந்த புதிய கற்கால கருவி ஒன்று கண்டறியப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

News June 24, 2024

வாழ்த்தியவர்களுக்கு விஜய் நன்றி

image

நடிகரும், தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் தலைவருமான விஜய் நேற்று தனது 50ஆவது பிறந்தநாளை கொண்டாடினார். இதை முன்னிட்டு தமிழக அரசியல் தலைவர்களும், சினிமா பிரபலங்களும் அவருக்கு வாழ்த்து தெரிவித்திருந்தனர். இந்நிலையில், தனக்கு வாழ்த்து தெரிவித்த பிரபலங்கள், தவெக நிர்வாகிகள் மற்றும் ரசிகர்கள் அனைவருக்கும் விஜய் அறிக்கை மூலமாக நன்றி தெரிவித்துள்ளார்.

News June 24, 2024

பாஜகவுக்கு அளித்துவந்த ஆதரவு வாபஸ்: நவீன் பட்நாயக்

image

நாடாளுமன்றத்தில் இனி பாஜகவுக்கு ஆதரவு இல்லை என்ற அதிரடி முடிவை பிஜு ஜனதாதள தலைவர் நவீன் பட்நாயக் எடுத்துள்ளார். இக்கட்சிக்கு 9 ராஜ்ய சபா எம்பிக்கள் உள்ளனர். தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அங்கம் வகிக்கவில்லை என்றாலும் இவர்கள் பாஜக அரசுக்கு வெளியிலிருந்து ஆதரவு அளித்து வந்தனர். லோக்சபா தேர்தலில் படுதோல்வி அடைந்ததைத் தொடர்ந்து ஆதரவை வாபஸ் பெற்றிருக்கிறார் நவீன் பட்நாயக்.

error: Content is protected !!