India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி யாதவ்வின் தனிச்செயலாளர் பிரீதம் குமாருக்கு நீட் வினாத்தாள் கசிவு சம்பவத்துடன் தொடர்பு இருப்பதாக, பிஹார் துணை முதல்வர் விஜய் சின்ஹா குற்றம்சாட்டி வருகிறார். இந்நிலையில், பிஹார் முதல்வர் நிதிஷ்குமார், மத்திய அமைச்சர் ஷ்ரவண் குமார் உள்ளிட்டோரை நீட் விவகாரத்தில் கைது செய்யப்பட்ட குற்றவாளியின் மனைவி மம்தா தேவி சந்தித்த புகைப்படத்தை ஆர்ஜேடி தனது X தளத்தில் பகிர்ந்துள்ளது.
டி20 உலகக் கோப்பையில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான போட்டியில் அதிரடியாக ஆடிவந்த ரோஹித் ஷர்மா 92 ரன்னில் ஆட்டமிழந்துள்ளார். சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 41 பந்தில் 92 ரன்கள் எடுத்து ஸ்டார்க் பவுலிங்கில் போல்டானார். டி20 உலகக் கோப்பையில் இதுவே ரோஹித்தின் அதிகபட்ச ரன்னாகும். ரோஹித்தின் அதிரடியால் இந்தியா 12 ஓவரில் 3 விக்கெட்டுகளை இழந்து 131 ரன்கள் எடுத்துள்ளது.
கொரோனா காலத்தில் தமிழக அரசின் தொற்றுநோய் தடுப்பு சிறப்பு குழுவின் ஆலோசகராக இருந்தவர் மருத்துவர் குகானந்தம். 68 வயதான இவர், நுரையீரல் பாதிப்பால் சிகிச்சை பெற்று வந்த நிலையில், உயிரிழந்தார். டெங்கு நோய் குறித்து பல ஆய்வுக் கட்டுரைகளை எழுதியுள்ள இவர், தமிழக அரசின் எய்ட்ஸ் நோய் தடுப்பு பிரிவிலும், யுனிசெப் அமைப்பிலும் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
கள்ளக்குறிச்சி விஷச்சாராய விவகாரத்தில், மெளனமாக இருப்பது ஏன் என காங்கிரஸ் தலைவர் கார்கேவுக்கு, மத்திய அமைச்சர் நட்டா கேள்வி எழுப்பியுள்ளார். இந்தப் பேரிடரின் போது மக்களை காப்பாற்றாமல் அரசும், காவல்துறையும் வேடிக்கைப் பார்த்ததாகக் குற்றஞ்சாட்டிய அவர், இது அரசு நடத்திய படுகொலை என விமர்சித்துள்ளார். மேலும், இந்த வழக்கை சிபிஐக்கு மாற்றுமாறு தமிழக அரசை வலியுறுத்த வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.
ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டி20 போட்டியில் அதிரடியாக ஆடிவரும் ரோஹித் ஷர்மா 19 பந்துகளில் அரை சதம் விளாசியுள்ளார். இதன்மூலம் நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரில் குறைந்த பந்துகளில் (19) அரை சதம் அடித்த வீரர் என்ற சாதனையைப் படைத்துள்ளார். தற்போது, இந்திய 5 ஓவர்கள் முடிவில் 1 விக்கெட் இழப்பிற்கு 52 ரன்கள் எடுத்துள்ளது. ரோஹித் ஷர்மா 4 பவுண்டரிகள், 5 சிக்ஸர்கள் அடித்துள்ளார்.
காமெடி நடிகர் வெங்கல் ராவின் கை, கால் செயலிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஃபைட்டராக இருந்து காமெடி நடிகராக தமிழ் சினிமாவை கலக்கியவர் நடிகர் வெங்கல் ராவ். வடிவேலுவுடன் இணைந்து 30க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். கடந்த ஆண்டு இவருக்கு சிறுநீரகம் செயலிழந்து, வீட்டில் ஓய்வில் இருந்த நிலையில், தற்போது ஒரு கை, ஒரு கால் செயலிழந்து விஜயவாடாவில் சிகிச்சை பெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
எக்ஸ் தளத்தின் வருவாயை அதிகரிக்க எலான் மஸ்க் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில், சந்தாதாரர்கள் மட்டுமே இனி Live Stream செய்ய முடியும் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. வெப் பயனாளர்கள் ப்ளூ டிக் பெற மாதம் ₹650, ஐஃபோன் மற்றும் ஆண்ட்ராய்டு வாடிக்கையாளர்கள் மாதம் ₹900 செலுத்த வேண்டும்.
அனைத்து மாநிலங்களிலும் 50% அமைப்பு ரீதியிலான தேர்தல்கள் முடிந்த பின்னரே தேசிய தலைவர் தேர்ந்தெடுக்க முடியும் என பாஜகவின் சட்டங்கள் கூறுகின்றன. இதற்கு டிசம்பர் மாதம் வரை ஆகலாம் என கூறப்படுகிறது. இந்நிலையில், பாஜகவின் புதிய தேசிய தலைவர் ஜனவரி மாதம் தேர்ந்தெடுக்கப்படலாம் என கூறப்படுகிறது. அதுவரை ஜே.பி.நட்டாவே கட்சியின் தேசிய தலைவராக நீடிப்பார் என கட்சியின் மூத்த தலைவர்கள் கூறுகின்றனர்.
இந்தியா – ஆஸ்திரேலியா இடையேயான சூப்பர் 8 போட்டி மழை காரணமாக நிறுத்தப்பட்டுள்ளது. டாஸ் வென்ற ஆஸ்திரேலிய கேப்டன் மார்ஷ், இந்தியாவை பேட்டிங் செய்ய அழைத்தார். அதிரடியாக விளையாடிய இந்தியா, 4.1 ஓவர்களில் 43 ரன்கள் குவித்திருந்தபோது மழை குறுக்கிட்டது. கேப்டன் ரோஹித் ஷர்மா 14 பந்துகளில் 41 ரன்கள் குவித்து களத்தில் உள்ளார். விராட் கோலி ரன் ஏதும் எடுக்காமல் பெவிலியன் திரும்பினார்.
டி20 உலகக் கோப்பையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் ரோஹித் ஷர்மா சரவெடியாக வெடித்து வருகிறார். ஸ்டார்க் வீசிய மூன்றாவது ஓவரில் 4 சிக்ஸர்கள், 1 பவுண்டரி (6,6,4,6,0,6) உட்பட 28 ரன்கள் விளாசியுள்ளார். ஒரு வைடு பால் போடப்பட்டதால் ஒரே ஓவரில் 29 ரன்கள் கிடைத்தது. இதையடுத்து இந்தியா 3 ஓவர்கள் முடிவில் 1 விக்கெட்டை இழந்து 35 ரன்கள் எடுத்துள்ளது. ரோஹித் ஷர்மா (34*), பண்ட் (0*) களத்தில் உள்ளனர்.
Sorry, no posts matched your criteria.