news

News June 24, 2024

தமிழகத்தில் கனிம இருப்பை ஆய்வு செய்ய அனுமதி

image

தமிழகத்தில் தங்கம், கிராபைட் உள்ளிட்ட அரிய வகை தனிமங்கள் இருப்பு குறித்து ஆய்வு செய்ய மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. கிருஷ்ணகிரி, திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் தனிமங்கள் குறித்து ஆய்வு மேற்கொள்ள இந்திய புவியியல் ஆய்வு மையம், கனிம ஆய்வு & ஆலோசனை நிறுவனம், குத்ரேமுக் கார்ப்பரேஷன் போன்ற நிறுவனங்கள் விண்ணப்பித்திருந்தன. இவற்றுக்கு, தற்போது மத்திய அரசின் NMET ஆய்வு செய்ய அனுமதி வழங்கியுள்ளது.

News June 24, 2024

ஜூன் 25: 12 ராசிகளுக்கான பலன்கள்

image

*மேஷம் – நலம் பெறுவீர்கள், *ரிஷபம் – பாராட்டு கிடைக்கும், *மிதுனம் – ஆசையை கட்டுப்படுத்துங்கள், *கடகம் – பரிவு காட்டுங்கள், *சிம்மம்- செலவு ஏற்படலாம், * கன்னி – மேன்மையடைவீர்கள் , *துலாம் – ஆர்வமாக இருங்கள், *விருச்சிகம் – உதவி செய்யுங்கள், *தனுசு – முயன்றால் வெற்றிபெறலாம், *மகரம் – உறுதியுடன் இருங்கள், *கும்பம் – பக்தியுடன் இருங்கள், *மீனம் – தடங்கல் ஏற்படலாம்

News June 24, 2024

மறுப்பு தெரிவித்தது ஆளுநர் மாளிகை

image

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி சொன்னதாக வெளியான சர்ச்சைத் தகவல் உண்மையில்லை என்று ஆளுநர் மாளிகை விளக்கம் அளித்துள்ளது. இன்று காலை முதல் சமூக வலைதளங்களில் வைரலாகும் செய்தியில், தமிழர்களை சாராயம் குடிப்பவர்களாக மாற்றுவதே குலதெய்வ வழிபாடுதான் என்று ஆளுநர் சொன்னதாக குறிப்பிடப்பட்டிருந்தது. இப்படி அவதூறு பரப்பியவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஆளுநர் மாளிகை தெரிவித்துள்ளது.

News June 24, 2024

போராட்டம் நடத்த வேண்டிய நெருக்கடியில் உள்ளோம்

image

கள்ளச்சாராயம் சம்பவத்தை கண்டித்து போராட்டம் நடத்த வேண்டிய நெருக்கடியில் உள்ளோம் என விசிக தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார். சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பேசிய அவர், அம்பேத்கர், புத்தர், வள்ளுவனின் வாரிசுகளாகிய நாங்கள், தொலைநோக்கு பார்வையோடு மதுவிலக்கு கோரிக்கையை முன்வைக்கிறோம் என்றார். மேலும், பாதிக்கப்பட்ட மக்களின் கோரிக்கையாக போராட்டத்தை நடத்துவதாகக் கூறியுள்ளார்.

News June 24, 2024

தினமும் 60 சிகரெட் பிடிப்பேன்: நானா படேகர்

image

தினமும் தான் 60 சிகரெட் பிடித்து வந்ததாக, நடிகர் நானா படேகர் தெரிவித்துள்ளார். தனது தனிப்பட்ட வாழ்க்கை குறித்து பேசிய அவர், பிறப்பிலிருந்தே உடல்நல பிரச்னைகளுடன் போராடி வந்த தனது மூத்த மகனின் மறைவுக்கு பின், புகைப்பழக்கத்திற்கு அடிமையானதாகவும், தனது சகோதரிதான் புகைப்பழக்கத்தில் இருந்து தன்னை மீட்டதாகவும் கூறியுள்ளார். சகோதரியின் ஒரே மகன் உயிரிழந்த பின், புகைப்பிடிப்பதை விட்டு விட்டதாக கூறினார்.

News June 24, 2024

அப்துல் கலாமின் பிறந்தநாள் அரசு விழாவாக அறிவிப்பு

image

முன்னாள் குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜெ.அப்துல் கலாமின் பிறந்த நாள் அரசு விழாவாக கொண்டாடப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. அதே போல, திரைத்துறையிலும், இசைத்துறையிலும் புகழுடன் திகழ்ந்த தியாகராஜ பாகவதர் பிறந்த நாளான மார்ச் 1ஆம் தேதி, திருச்சி மாவட்ட அரசு விழாவாக கொண்டாடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஏ.டி.பன்னீர்செல்வம் பிறந்தநாளான ஜூன் 1ஆம் தேதி, திருச்சி மாவட்ட அரசு விழாவாக கொண்டாடப்படவுள்ளது.

News June 24, 2024

கோடிக்கணக்கில் சொத்து சேர்த்த பிச்சைக்காரர்

image

கடும் பொருளாதார நெருக்கடியை சந்தித்துள்ள பாகிஸ்தான். பிற நாடுகளிடம் பொருளாதார உதவி கேட்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. இந்நிலையில், அந்நாட்டின் பிச்சைக்காரர் ஒருவர் பல கோடி வருமானம் ஈட்டியுள்ளார். பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தை சேர்ந்த ஷவுகத் என்ற அந்நபர், தனது குழந்தைகளை நாட்டின் உயர்ந்த பள்ளியில் படிக்க வைக்கிறார். பிச்சையெடுப்பதன் மூலம் நாளொன்றுக்கு ₹1,000 சம்பாதிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

News June 24, 2024

205 ரன்கள் குவித்தது இந்தியா

image

டி20 உலகக்கோப்பையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் இந்திய அணி 205 ரன்கள் குவித்துள்ளது. சரவெடியாக வெடித்துத் தள்ளிய ரோஹித் 92 ரன்கள் எடுத்தார். சூர்யகுமார் 31, டூபே 28, ஹர்திக் 27* ரன்கள் எடுக்கவே 20 ஓவர்கள் முடிவில் இந்தியா 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 205 ரன்கள் எடுத்துள்ளது. இன்று இந்தியா வெற்றிபெறும் பட்சத்தில் அரையிறுதிக்கு செல்ல வாய்ப்புள்ளது. எந்த அணி வெற்றிபெறும்? என கமெண்ட் பண்ணுங்க.

News June 24, 2024

‘விடாமுயற்சி’ படப்பிடிப்பு மீண்டும் தொடங்கியது

image

மகிழ்திருமேனி இயக்கத்தில் அஜித், த்ரிஷா நடித்து வரும் படம் ‘விடாமுயற்சி’. தயாரிப்பாளருடன் இயக்குநருக்கு ஏற்பட்ட பிரச்னை காரணமாக சில நாள்கள் படப்பிடிப்பு தடைப்பட்டது. அந்த இடைப்பட்ட காலத்தில் அஜித் ‘குட் பேட் அக்லி’ படத்தில் நடித்தார். இந்நிலையில், பிரச்னை முடிந்து தற்போது ‘விடாமுயற்சி’ படத்தின் படப்பிடிப்பு மீண்டும் தொடங்கி நடைபெற்றுவருகிறது. இந்த தகவலை அஜித்தின் மேனேஜர் உறுதிப்படுத்தியுள்ளார்.

News June 24, 2024

மின்சார பெட்டி மீது படுத்து தூங்கிய மது பிரியர்!

image

மது பிரியர்களின் அலப்பறை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பேருந்துகளை மறிப்பது, நடு ரோட்டில் படுத்துக் கிடப்பது, அரைகுறை ஆடையில் சுற்றுவது என இவர்களின் செயல்களால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் பெரும் அவதிகளை சந்தித்து வருகின்றனர். இந்நிலையில், நெய்வேலியில் மின் விளக்கு கம்பத்துக்கு மின்சாரம் செல்லக்கூடிய பெட்டி மீது குடிபோதையில் ஒரு நபர் படுத்துக் கிடக்கும் புகைப்படம் வைரலாகி வருகிறது.

error: Content is protected !!