news

News June 25, 2024

அரையிறுதிக்குச் செல்லுமா ஆஃப்கன்?

image

T20 உலகக் கோப்பை தொடரில், சூப்பர் 8 சுற்றின் கடைசி ஆட்டத்தில் வங்கதேசம்-ஆஃப்கன் அணிகள் விளையாடி வருகின்றன. இன்றையப் போட்டியில் வங்கதேசம் வெற்றி பெற்றால், ஆஃப்கன் அணி தொடரிலிருந்து வெளியேறும். அதே வேளையில், ஆஃப்கன் அணி வெற்றி பெற்றால், T20 உலகக் கோப்பை தொடரில் முதல் முறையாக அரையிறுதிப் போட்டிக்கு தகுதி பெறும். இன்றையப் போட்டியில் எந்த அணி வெற்றி பெற்று அரையிறுதிக்கு செல்லும்?

News June 25, 2024

அஜித் படத்தில் ரெடின் கிங்ஸ்லி

image

விடாமுயற்சி படத்தைத் தொடர்ந்து, ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் குட் பேட் அக்லி படத்தில் அஜித் நடித்து வருகிறார். இந்த படத்தில் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடிக்க, ரெடின் கிங்ஸ்லி கமிட்டாகியுள்ளார். படம் முழுவதும் அஜித்துடன் வரும் வகையில், இவரது கதாபாத்திரம் அமைந்துள்ளதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதனிடையே, விடாமுயற்சி திரைப்படம் தீபாவளிக்கு ரிலீசாகலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

News June 25, 2024

27ஆம் தேதி நாடாளுமன்ற கூட்டுக்குழு கூட்டம்

image

மக்களவையில் புதிய எம்பிக்கள் நேற்று முதல் பதவியேற்று வருகின்றனர். 2ஆவது நாளாக இன்றும் பதவியேற்பு நடக்கிறது. இதையடுத்து நாளை (26ஆம் தேதி ) சபாநாயகர் தேர்தல் நடக்கவுள்ளது. இத்துடன் தற்காலிக சபாநாயகர் பதவி காலாவதியாகும். இதைத் தொடர்ந்து, 27ஆம் தேதி மாநிலங்களவை கூடுகிறது. அன்றைய தினம் இரு அவைகளின் கூட்டுக்குழு கூட்டம் நடக்கிறது. இதில் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு உரை நிகழ்த்தவுள்ளார்.

News June 25, 2024

டி20: கோலி சாதனையை முறியடித்த ரோஹித்

image

டி20 கிரிக்கெட்டில் கோலி 4,103 ரன்கள் சேர்த்து அதிக ரன் குவித்த இந்திய வீரர் என்ற சாதனையைப் படைத்து இருந்தார். இதை அவர் நேற்றைய ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான போட்டியில் முறியடித்தார். நேற்று குவித்த 92 ரன்களுடன் சேர்த்து, 4,165 ரன்களை ரோஹித் சேர்த்தார். இதேபோல், 48 ஆட்டங்களில் வென்று அதிக வெற்றி பெற்ற கேப்டன் என்ற பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாமின் சாதனையையும் அவர் சமன் செய்தார்.

News June 25, 2024

இன்று 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

image

மேற்குத் திசை காற்று வேகமாறுபாடு காரணமாக கோவை, நீலகிரி ஆகிய 2 மாவட்டங்களில் இன்று கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதேபோல், திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி ஆகிய 6 மாவட்டங்களில் இன்றும், நாளையும் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும், சென்னையில் இன்று வானம் மேகமூட்டமாக இருக்குமென்றும் குறிப்பிட்டுள்ளது.

News June 25, 2024

ஆட்ட நாயகன் ரோஹித் ஷர்மா

image

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான நேற்றைய போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றதற்கு கேப்டன் ரோஹித் ஷர்மாவின் பேட்டிங் முக்கிய காரணமாக அமைந்தது. அதற்காக அவருக்கு ஆட்ட நாயகன் விருதும் வழங்கப் பட்டிருக்கிறது. மேலும், ரோஹித்தின் கிரிக்கெட் வரலாற்றில் நேற்றைய போட்டி முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. நேர்த்தியான மற்றும் பக்குவமான அவரது பேட்டிங்கை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

News June 25, 2024

பாஜக vs திரிணாமுல் காங்கிரஸ்

image

கொல்கத்தாவில் உள்ள தொழிற்சாலையை பிரிட்டானியா நிறுவனம் மூடப்போவதாக அறிவித்துள்ளது. இதற்கு ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தொழில்துறை விரோத போக்கே காரணம் எனவும், இப்படி இருந்தால் தொழிற்சாலைகளே இங்கு வராது என மத்திய அமைச்சர், மாநில பாஜக தலைவருமான சுகந்தா மஜும்தார் தெரிவித்துள்ளார். இதை மறுத்துள்ள திரிணாமுல் தலைவர் குணால் கோஷ், நிர்வாக காரணங்களுக்காக தொழிற்சாலை மூடப்படுவதாக தெரிவித்துள்ளார்.

News June 25, 2024

விபத்தில் சிக்கியோருக்கு ரத்தப் பரிசோதனை செய்ய உத்தரவு

image

தமிழ்நாட்டில் சாலை விபத்தில் சிக்கியோர் அனைவருக்கு ரத்தப் பரிசோதனை செய்ய சுகாதாரத் துறை உத்தரவிட்டுள்ளது. இரு தினங்களுக்கு முன், விபத்தில் சிக்கியோர் பலர் மது போதையில் இருப்பதால் நிவாரணம் வழங்குவது தொடர்பான முடிவுகளை சரியாக எடுக்க முடியவில்லை என்று உயர்நீதிமன்றம் தெரிவித்திருந்தது. இதனையடுத்து, விபத்தில் சிக்கியோர் போதையில் இருந்தனரா என்று ரத்தப் பரிசோதனை செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

News June 25, 2024

T20 WC: ஆஃப்கன் பேட்டிங்

image

டி20 உலகக்கோப்பை தொடரில், இன்று நடைபெறும் சூப்பர் 8 சுற்றில் ஆப்கானிஸ்தான் மற்றும் வங்கதேசம் அணிகள் மோதுகின்றன. இதில் டாஸ் வென்ற ஆஃப்கானிஸ்தான் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. இந்த போட்டியில் வென்றால் ஆப்கானிஸ்தான் அணி அரையிறுதிக்கு தகுதி பெறும். அதேபோல், வங்கதேசம் வென்றால் மட்டுமே ரன்ரேட் அடிப்படையில் ஆஸ்திரேலியா அணி அரையிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பு உள்ளது.

News June 25, 2024

இன்றைய தலைப்புச் செய்திகள்!

image

*‘கேரளா’ என்ற பெயரை ‘கேரளம்’ என்று மாற்ற அம்மாநில சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. *வாடகை தாய் மூலம் குழந்தை பெறுபவர்கள் மத்திய அரசு ஊழியராக இருந்தால், அவர்களுக்கு பேறுகால விடுப்பு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. *T20 WCயில், ஆஸி., அணியை 24 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வீழ்த்தியது. *A.P.J.அப்துல் கலாமின் பிறந்தநாள் அரசு விழாவாக கொண்டாடப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

error: Content is protected !!