news

News June 25, 2024

AFG-BAN ஆட்டம் மழையால் பாதிப்பு

image

T20 WC தொடரில், ஆஃப்கன்-வங்கதேசம் இடையிலான ஆட்டம் மழையால் பாதிக்கப்பட்டுள்ளது. சூப்பர் 8 சுற்றின் கடைசி ஆட்டத்தில் AFG-BAN அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த AFG அணி, 20 ஓவர்களில் 115/5 ரன்கள் எடுத்துள்ளது. முதல் இன்னிங்ஸ் முடிந்த உடன் கனமழை பெய்யத் தொடங்கியதால், மைதானம் முழுவதும் தார்ப்பாயால் மூடப்பட்டுள்ளது. மழை நின்றப்பிறகு போட்டித் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

News June 25, 2024

தமிழக மீனவர்கள் 10 பேர் கைது

image

எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி நாகை மீனவர்கள் 10 பேரை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்துள்ளனர். நெடுந்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த அவர்களை சுற்றி வளைத்த இலங்கை கடற்படையினர் படகுகளுடன் காங்கேசன் துறைமுகத்துக்கு அழைத்துச் சென்றனர். அங்கு, அவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். மீனவர்கள் கைது விவகாரத்தில் உடனடியாக அரசு தலையிட வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.

News June 25, 2024

ராமர் கோயிலில் ஒழுகும் மழை நீர்: அர்ச்சகர்

image

அயோத்தியில் உள்ள ராமர் கோயிலின் கருவறையில் மழைநீர் ஒழுகுவதாக தலைமை அர்ச்சகர் ஆச்சார்யா சத்யேந்திர தாஸ் குற்றஞ்சாட்டியுள்ளார். கோயில் கட்டுமானத்தில் அலட்சியமாக இருப்பதாக கூறிய அவர், சரியான வடிகால் அமைப்பு கூட ஏற்படுத்தவில்லை என தெரிவித்துள்ளார். இதையடுத்து, பழுது நீக்கும் பணிகளை முடுக்கிவிட்டுள்ள கோயில் கட்டுமான கமிட்டித் தலைவர் மிஷ்ரா, டிசம்பருக்குள் கட்டுமான பணிகள் முடிவடையும் என கூறியுள்ளார்.

News June 25, 2024

அவசர நிலை பிரகடனமான நாள்

image

1975ஆம் ஆண்டு இதே நாளில்தான் (25 ஜூன்) இந்தியாவில் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டது. அன்று முதல் 1977 வரை சுமார் 21 மாதங்கள் எமர்ஜென்சி நிலை அமலில் இருந்தது. அன்றைய பிரதமர் இந்திரா காந்தியின் பரிந்துரையின் பேரில் குடியரசுத் தலைவர் ஃபக்ருதின் அலி அகமது அவசர நிலையை பிரகடனம் செய்தார். இன்றைய தினத்தை பாஜக கறுப்பு தினமாக கடைபிடிக்கிறது.

News June 25, 2024

வெப்ப அலை பேரிடராக அறிவிக்கப்படும்: KKSSR

image

வெப்ப அலை, இனி பேரிடராக அறிவிக்கப்படும் என அமைச்சர் KKSSR.ராமச்சந்திரன் கூறியுள்ளார். பருவ நிலை மாற்றத்தால் தமிழகத்தில் வெயில் தாக்கம் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், வெப்ப அலை வீச்சினை மாநிலம் சார்ந்த பேரிடராக அறிவிக்கப்படும் என அமைச்சர் KKSSR தெரிவித்துள்ளார். மேலும், மாநில பேரிடர் நிவாரண நிதி விதிப்படி வெப்ப அலையை தடுக்க நடவடிக்கை எடுப்பதுடன், உரிய நிவாரணமும் வழங்கப்படும் எனக் கூறியுள்ளார்.

News June 25, 2024

வங்கதேசத்திற்கு 116 ரன்கள் இலக்கு

image

T20 WC: வங்கதேச அணிக்கு ரன்களை இலக்காக நிர்ணயித்தது ஆஃப்கன் அணி. சூப்பர் 8 சுற்றின் கடைசிப் போட்டியில் டாஸ் வென்ற பேட்டிங்கை தேர்வு செய்த AFG அணி, 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 115 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக குர்பாஸ் 43, ரஷித் கான் 19, இப்ராஹிம் 18 ரன்கள் எடுத்தனர். வங்கதேசம் தரப்பில், ரிஷாத் ஹொசைன் 3, தஸ்கின், முஸ்தஃபிசூர் தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.

News June 25, 2024

சொந்த பயன்பாடு கூடாது

image

அரசுப் பள்ளி கணினி ஆய்வகங்களை சொந்த பயன்பாட்டிற்கு உபயோகிக்கக் கூடாது என பள்ளிக் கல்வித்துறை எச்சரித்துள்ளது. மாணவர்களுக்கு பயிற்சி வழங்க, அரசுப் பள்ளிகளில் கணினி ஆய்வகங்கள் உள்ளன. இதனை, ஆசிரியர்கள் சிலர் சொந்த உபயோகத்திற்கு பயன்படுத்துவதாக புகார் எழுந்துள்ளது. இது குறித்து எச்சரித்துள்ள கல்வித்துறை, ஆய்வகங்களின் செயல்பாடுகள் 24 மணி நேரமும் பதிவு செய்யப்பட்டு கண்காணிக்கப்படுவதாக கூறியுள்ளது.

News June 25, 2024

இளவரசி ’ஆன்’ மருத்துவமனையில் அனுமதி

image

தலையில் ஏற்பட்ட காயத்தைத் தொடர்ந்து பிரிட்டன் இளவரசி ‘ஆன்’ (73) மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவர் மன்னர் சார்லசின் சகோதரி ஆவார். இளவரசிக்கு மருத்துவப் பரிசோதனைகள் நடத்தப்படுவதாகவும் விரைவில் வீடு திரும்புவார் என்றும் அரச குடும்பம் அறிக்கையின் வாயிலாகத் தெரிவித்துள்ளது. தலையில் எப்படி காயம் ஏற்பட்டது என்ற விவரங்கள் வெளியாகவில்லை.

News June 25, 2024

குழந்தை பாக்கியம் அருளும் புட்லூர் மாரியம்மன்

image

திருவள்ளூர் மாவட்டம் புட்லூரில் உள்ள அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயிலில் அம்மன், கர்ப்பிணி பெண்போல சாய்ந்த நிலையில் பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார். இங்கு வளையல், எலுமிச்சை, வேப்பிலை மாலை சாற்றி வழிபட்டால், குழந்தை வரன் உள்பட அனைத்தையும் அம்மன் கொடுப்பார் என்பது பக்தர்களின் நம்பிக்கை. இதனால் இக்கோயிலுக்கு நாள்தோறும் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் பக்தர்கள் வந்து வழிபடுகின்றனர்.

News June 25, 2024

தமிழக எம்பிக்கள் இன்று பதவியேற்கின்றனர்

image

இன்றைய நாடாளுமன்றக் கூட்டத்தில் தமிழகத்தைச் சேர்ந்த 39 எம்பிக்கள் உள்ளிட்ட 260க்கும் மேற்பட்ட எம்பிக்கள் பதவியேற்றுக் கொள்கின்றனர். நேற்று தொடங்கிய நாடாளுமன்றக் கூட்டத்தில் பிரதமர் மோடி உள்ளிட்ட 280 எம்பிக்கள் பதவியேற்றுக் கொண்டனர். இதனைத் தொடர்ந்து, ராகுல் காந்தி உள்ளிட்ட பலர், இன்று பதவியேற்றுக் கொள்கின்றனர்.

error: Content is protected !!